முன்னாள் தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பிpனரும் ஜனாதிபதி சட்டத்தரணியும் சட்டமாமேதையுமான அமரர் கலாநிதி நிலன் திருச்செல்வம் அவர்களின் 6வது நினைவு தினம்.
தமிழர்களின் விடிவிற்காக தனது மதி நுட்பத்தால் சகலராலும் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு அரசியல் சாசனம் ஒன்றை உருவாக்கிய சட்டமாமேதை அமரர் கலாநிதி நிலன் திருச்செல்வம் அவர்களின் 6வது நினைவு தினம் இனறு 29.07.2005 எமது கழகத்தால் விடுதலைக் கூட்டணி தலைமைச் செயலகத்தில் காலை 9.30 மணியளவில் அனுஷ்டிக்கப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களும் மற்றும் அன்னாரின் நெருங்கிய நண்பர்களும் கலந்து கொண்டு அமரரின் உருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.
எமது கழகத்தின் உப தலைவர் திரு. க. சிவராசா தனது உரையில் உலகத் தலைவர்களால் நன்கு மதிக்கப்பட்டவரும் தலைசிறந்த சட்ட மேதையுமான கலாநிதி நிலன் இன்று உயிருடன் இருந்திருந்தால் தனது மதி நுட்பத்தால் சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புடன் இலங்கை அரசிற்கு அழுத்தத்தை கொடுத்து இனப்பிரச்சினைக்கு நிரந்தர திர்வைக் கண்டிருப்பார். இந்த விடயம் அன்னாரை கொலை செய்ய ஆணையிட்டவர்களுக்கே நன்கு தெரியும். ஆதனால்தான் கலாநிதி நிலன் திருச்செல்வம் அவர்களால் உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்புதான் இலங்கைக்கு சிறந்தது என தங்களின் ஒரு பத்திரிக்கையாளர் மாநாட்டில் அவர்களே கூறினார்கள். அந்த அளவிற்கு அவரின் மதிநுட்பம் சிறந்திருந்தது எனக்குறிப்பிட்டார்.
அன்னாரின் நண்பர் திரு. மு.ஆனந்தராஜா சட்டத்தரணி தமதுரையில் அமரர் நிலனின் எளிமையை குறிப்பிட்டார். சர்வதேச சமுகத்தால் மதிக்கப்பட்ட அப்பெருமகன் எல்லோரிடமும் மிகவும் எளிமையாகவும் பண்பாகவும் பழகிய ஒர் உயர்ந்த இலட்சியவாதி எனக் குறிப்பிட்டார். நேற்று அரசியலுக்கு வந்துவிட்டு ஏதோ வானத்தில் இருந்து குதித்தவர்கள்போல் நடந்து கொள்பவர்கள்தமது ஆணவத்தை கைவிட்டு அமரரின் எளிமையை எண்ணிப்பார்த்து நடந்து கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து எமது கழக உறுப்பினர் திரு. க.சண்முகலிங்கம் தமதுரையில் அமரர் அமிர்தலிங்கம் அமரர் கலாநிதி நிலன் திருச்செல்வம் ஆகியோரின் மறைவால் ஏற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றுக் கொண்டு தமது குடும்பத்தை வளப்படுத்தியவர் கூட அமரர்களின் பெயரை உச்சரிக்கக்கூட திராணியற்று கூணிக் குறுகிப் போயுள்ளார் என வேதனையுடன் குறிப்பிட்டார். அத்துடன் தமிழ் மக்களின நலனில் அக்கறை கொண்டவர்கள் எவரும் அவர்களை கொலை செய்யத் துணியமாட்டார்கள் எனவும் குறிப்பட்டார்.
மேலும் பலர் தங்களதுரையில் அமரர் கலாநிதி நிலன் திருச்செல்வம் அவர்களின் செயற்பாடுகளுக்கு உலகத் தமிழினமும் தமிழர் விடுதலைக் கூட்டணியும் என்றுமே தலை சாய்த்து வணங்கிக் கொண்டேயிருக்குமென குறிப்பிட்டனர்.
பிற் பகல் 12.15 மணியளவில் அஞ்சலி நிகழ்வு நிறைவடைந்தது.
மு. சரவணமுத்து
இணைப்பாளர்.