பத்திரிகை அறிக்கை

அப்பாவி மக்கள் 26 பேரின் உயிரைக் குடித்து மேலும் 65 பேருக்கு கடும் காயத்தை விளைவித்த விடுதலைப்புலிகளின் மிக கீழ்த்தரமான கோளைத்தனமான செயலை தமிழர் விடுதலைக் கூட்டணி வன்மையாகக் கண்டிக்கிறது. மிகவேகமாக பொறுமையை இழந்து வரும் சர்வதேச சமூகத்தினரை கடும் கோபத்திற்குள்ளாக்குவதைத் தவிர வேறு எந்த நன்மையையும் பெற்றுத்தராத இந்த வகையான அப்பாவி மக்களின் கொலைகளை விடுதலைப்புலிகள் கைவிடவேண்டும். மனித சமுதாயத்தின் மத்தியில் கொடூர மிருகங்களுக்கு இடமில்லை. மனித உள்ளம் கொண்ட எமக்கு சில புனிதமான கடமைப்பாடுண்டு. ஒழித்து விளையாடாது ஒவ்வொருவரும் தமது ஆதங்கங்களை வெளிப்படுத்தவேண்டும்.

நான் பல தடவை ஊடகங்களை குறிப்பாக உலகளாவிய தமிழ் ஊடகங்களை விடுதலைப்புலிகளின் மிருகத்தனமான செயல்களை கண்டிக்காமைக்கு கண்டித்துள்ளேன். அவர்கள் அப்படிச் செய்யாமை விடுதலைப்புலிகள் மேலும் மேலும் மக்களைப் பீதியடையச் செய்யத் தூண்டியுள்ளது. சில மனித உரிமை அமைப்புக்களும் இதே தவறைச் செய்துள்ளன. நான் சகல இன மக்களையும,; ஊடகங்களையும் மனித உரிமை அமைப்புக்களையும் , தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட சகல கட்சித் தலைவர்களையும் விடுதலைப்புலிகள் தமது பயங்கரவாதச்செயல்களை விடுத்து ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ளவர்கள் ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக வாழும் ஏழைக் கிராமவாசிகளை விட்டு வைக்குமாறு கேட்கவேண்டும். இந்த ஏகோபித்த கோரிக்கை அவர்கள் இத்தகைய செயல்களில் எதிர்காலத்தில் ஈடுபடாது தடுக்க உதவலாம். மேலும் இத்தகைய கொடுஞ்செயல்களை தொடர்ந்து மக்கள் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்பதையும் அவர்களுக்கு உணர்த்தும். சர்வதேச சமூகத்திடம் நான் விடுக்கும் வேண்டுகோள் நாட்டில் தம்மைப் பற்றி தவறான விமர்சனங்களை சிலர் செய்திருப்பினும் கூட அவற்றைப் பொருட்படுத்தாது விடுதலைப்புலிகளின் அக்கிரமச்செயல்களை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கமாட்டோம் என எச்சரிக்கவேண்டும் என்பதே.



வீ.ஆனந்தசங்கரி
தலைவர்
தமிழர் விடுதலைக் கூட்டணி

PRESS RELEASE - CLAYMORE MINE ATTACK AT BUTTALA.

CLAYMORE MINE ATTACK AT BUTTALA.

The TULF very strongly condemns the most brutal and cowardly act of the LTTE that caused the death of 26 innocent civilians and also left, over sixty five seriously injured. It is high time the LTTE stop killing innocent civilians, which is not going to serve any purpose other than infuriating the International Community which is fast losing its patience. There should be no place for ferocious animals in the human society. We as humans have a sacred duty to perform. Without playing hide and seek, every one should express their deep concerns.

I have more than once found fault with the media, particularly the Tamil media all over the world for their failure to condemn these ruthless activities of the LTTE. Their failure to do so, in one way amounts to encouraging the LTTE to terrorise the civilians more and more. Some Human Rights activists too make the same mistake. I call upon all the people whichever community they belong to, the media, human rights organizations and heads of all political parties, including the TNA to condemn this ruthless act and to urge the LTTE to spare the innocent village folks who depend on each other in their family, for survival. This united demand will act as a deterrent for any such activities in the future and will also make them realize that they are not going to be tolerated for ever. I also plead with the International Community to ignore what ever adverse comment some might have made in reference to their activities and to warn the LTTE that they will not just keep on watching the atrocious acts perpetrated on the civilians.

I express my deepest sympathies for the relatives of the unfortunate victims.


V. Anandasangaree,
President – TULF.

இனிய பாரதி

வணக்கம், நான் இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்து லண்டனில் வசித்து வந்தாலும் எமது மக்களின் நலனிலும் தேசத்தின் பற்றுதலிலும் அக்கறை கொண்டவன் என்ற வகை யில் இம் மடலை எழுதுவதன் மூலம் எனது மனக்குமுறல்களையும் வேதனை களையும் வெளிப்படுத்தலாம் என நான் கருதுகின்றேன். அதுமட்டுமல்ல நீங்கள் பல விடயங்களைக் கற்றறிந் தவர் மூன்று பிள்ளைகளின் தாயர். தற்போது உங்களைப் பொதுப்பணிக ளிலும் ஈடுபடுத்திக் கொண்டவர் என்ப தும் மேலும் ஒரு காரணம் இம் மடலை உங்களுக்கு எழுதுவதற்கு.

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி யான சூழல் எமக்கு கடந்தகால அனு பவங்கள், கடந்து வந்த பாதைகள் என்பவற்றை திரும்பிப் பார்க்கத் தூண்டு கின்றது. தமிழ் மக்களுக்கான விடுத லைப் போராட்டம் என்ற விடயத்தை எடுத்துப் பார்த்தால் 1987 ஆம் ஆண்டு வரை மட்டுமே அது இடம்பெற்றுள்ளது. அதன் பின்பு இடம்பெற்ற யுத்தம் அனைத்துமே விடுதலைப் புலிகளின் நலனைச் சார்ந்ததாகவே நாம் கருது கின்றோம். மக்களுக்கான போராட்டம் என்றால் அதில் மக்களின் நலன் உள்ளடக்கப்பட்டிருக்கும். ஆனால் தற்போது இலங்கையில் நடைபெற் றுக்கொண்டிருக்கின்ற யுத்தம் தமிழ் மக்களின் எந்தவொரு நலனையும் சார்ந்திருக்கவில்லை. மாறாக விடுத லைப் புலிகளை இராணுவ ரீதியாக வளர்ப்பதற்கும், தனிப்பட்ட அமைப்பை வளர்ப்பதற்கான யுத்த நடவடிக்கை யாக அமைகின்றது.

இந்திய- இலங்கை ஒப்பந்தம் 1987ம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்ட சமயம் புலிகள் உட்பட அனைத்துப் போராட்ட அமைப்புக்களும் ஜனநாய கப் பாதைக்குத் தாம் திரும்புவதாக அறிவித்திருந்தது. தலைவர் பிரபாகரன் சுதுமலையில் மக்கள் முன் முதன் முதலில் உரையாற்றியது அதற்கு சான்றாக அமைந்திருந்தது. அச் சந் தர்ப்பத்தைப் பயன்படுத்தியிருந்தால் நாம் எவ்வளவோ உயிர் அழிவுகளைத் தவிர்த்திருக்க முடியும். அவ்வேளை யில் உயிரிழந்த போராளிகளின் எண் ணிக்கை (631) இந்திய அரசு இலங் கை அரசை எதிரிகளாகவும், தமிழரை நண்பர்களாகவும் பார்த்த காலம் அது. இந்திய அரசு எமது இனத்தின் நலன் சார்ந்து தமிழ் இனத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் எமது எல்லைப் பிரதேசங்களை பாதுகாக்கவும் அமை திப்படையாக எல்லைப் பிரதேசங்களில் நின்ற காலம் அது.

அந்தப் பொன்னான சந்தர்ப்பத்தில் விடுதலைப் புலிகள் சற்று நிதானத்தை யும் அமைதியையும் பேணி வறட்டுக் கௌரவம் இன்றி மக்களின் நலனை கருத்தில் கொண்டு செயற்பட்டிருந்தால் எத்தனையோ விலைமதிப்பற்ற உயி ர்களைப் பாதுகாத்திருக்க முடியும். நூற்றுக்கணக்கான புத்திஜீவிகள், ஆயிரக்கணக்கான போராளிகள், ஆயி ரக்கணக்கான மாற்றுக் கருத்துக் கொ ண்டவர்கள், இலட்சக்கணக்கான பொது மக்கள், கோடிக்கணக்கான சொத்துக் கள் என்பவற்றை இழந்திருக்க வேண் டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. தவறு நடந்து விட்டது ஏற்றுக் கொள்கிறோம்.

இந்திய- இலங்கை உடன்படிக் கையை ஏற்படுத்தக் காரணமாயிருந்த தலைவர்கள் அமிர்தலிங்கம், யோகே ஸ்வரன், போன்றோர்களை கொலை செய்தார்கள். அதுமட்டுமல்லாது உட ன்படிக்கையை செய்து கொண்ட பார தப் பிரதமர் ராஜீவ்காந்தியை தமிழ்நா ட்டில் வைத்து தற்கொலையாளி மூ லம் கொலை செய்தார்கள். பின்பு அது ஒரு துன்பியல் சம்பவம் என தங்களின் கணவர் 2001ம் ஆண்டில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் கூறியிருந்தார். அதனை நாமும் துன் பியல் சம்பவமாக ஏற்றுக் கொள்கின் றோம். அதன் பின்பு எமது இனப்பிரச் சினைக்குத் தீர்வு காண எமக்குக் கிடைத்த இரண்டாவது சந்தர்ப்பம் 1994ல் பொதுத் தேர்தலின் பின்பு சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கா பதவியேற்ற பின்பு 1995 இல் மேற் கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையின் போது கலாநிதி நீலன் திருச்செல்வம் அவர்களினால் முன்மொழியப்பட்ட அரசியல் சாசன திருத்தத்திற்கான யோசனைகள் அடங்கிய தீர்வுப் பொதி. இந்தத் தீர்வு யோசனையை எடுத்துப் பார்த்தால் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காணக்கூடிய அடிப்படை அம்சங்கள் அனைத்தையு மே கொண்டிருந்தது. இதை நான் மட்டும் கூறவில்லை. விடுதலைப் புலி களின் மதியுரைஞர் ஒரு சந்தர்ப்பத்தில் கூறியிருந்தார். காலம் கடந்த பின் 2001ம் ஆண்டு இடம்பெற்ற பத்தி ரிகையாளர் மாநாட்டில் குறிப்பிட்டிருந் தார். இச் சந்தர்ப்பத்தை விடுதலைப் புலிகளின் தலைமை தங்களுடைய ஆட்சி மோகத்தால் இழந்துள்ளமையை சுட்டிக்காட்டுகின்றது. இந்தக் காலக் கட்டத்தில் இத் தீர்வுத் திட்டத்தை வரைவதற்கு அரும்பாடுபட்ட பல நாடு களுக்கு குறிப்பாக தென் ஆபிரிக்கா போன்ற நாடுகளுக்கு அரசியல் சாச னம் வரைய முக்கிய பங்காற்றிய கலாநிதி நீலன் திருச்செல்வம் அவர் களை தற்கொலை குண்டுதாரி மூலம் கொலை செய்தார்கள். சரி அதையும் மறப்போம். தூரதிஷ்டவசமான சம்பவம் என ஏற்றுக்கொள்கிறோம்.

இதன் பிறகு இனப்பிரச்சினை விடயத்தில் பாரிய முன்னேற்றகரமாக நோர்வே நாட்டின் அனுசரணையுடன் தீர்வுக்கான யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருந்தது. நாம் அனைவரும் ஒன்றுபடக் கூறினோம். விடுதலை புலிகளுடன் மட்டும் பேசி எமது பிரச்சனைக்குத் தீர்வு காணும்படி. ஓப்பந்தத்தின் அரசியல் பணிக்காக கட்டம் கட்டமாக இராணுவக் கட்டுப் பாட்டுப் பிரதேசத்துக்கு நுழைந்தார்கள். அரசியல் பணிமனைகளையும் திறந் தார்கள். பல சுற்றுப் பேச்சுவார்த்தை களிலும் பங்குபற்றினார்கள். இதைப் பார்த்த தமிழ் மக்கள் இனியாவது நிம்மதியாக வாழ்க்கையை ஆரம்பிக் கலாம் என கனவுகள் கண்டார்கள். சமாதானக் காற்றை சுவாசிக்கத் தொ டங்கினர். எந்தவிதமான இன்னல்களோ தடைகளோ இன்றி நடமாடத் தொடங் கிய எமது மக்கள் சுமூகமான வாழ்க் கையை ஒரு சில ஆண்டுகள் வாழ்ந் தார்கள். இதை எவரும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது.

தங்களுடைய கணவர் சிறுபிள் ளைக்கு சோறூட்டும் போது தாய்மார் ~~நிலா நிலா|| ஓடி வா, நில்லாமல் ஓடி வா, மல்லிகைப் பூ கொண்டுவா|| என்று ஏமாற்றி சோறூட்டூவதைப் போல ~~புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம், புலிகளின் தாகம், புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்|| என்று கூறுகின்றனர்.

அவருக்கே புரிந்திருக்கும் அது அடைவது கடினமென. அவர் எடுத்தக் காவடியை அவருடைய வாழ்நாளுக் குள் இறக்கி வைத்தால்தான் எமது சமூகத்திற்கோர் கௌரவமான வாழ்வு கிடைக்கும். அதனை அவர் உணர மறுத்தால் எமது சமுதாயம் ஒருவரை ஒருவர் அழித்து இவ்வளவு நாட்களும் எமது தமிழினம் செய்த தியாகங்கள் அனைத்தும் வீணடிக்கப்படும்.

வயோதிபர்களுக்கு நீங்கள் இல்லம் அமைப்பதை (அன்புச்சோலை) நாம் விமர்சிக்கவில்லை. ஆனால் வாழ வேண்டிய வயதில் தங்களைப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டு எமது மக்களின விடுதலைக்காகப் போராட வந்த பிஞ்சு உள்ளங்களுக்கு மாவீரர் துயிலும் இல்லத்தில் கல்லறை அமைப்பதுதான் எம்மால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. போராட்டம் போராட்டம் என்று சிறார்களைக் கொ ன்று புதைக்காதீர்கள். சற்று அவர்க ளையும் அவர்களைப் பெற்ற பெற்றோ ரின் மனநிலைமையையும் எண்ணிப் பாருங்கள். அதுமட்டுமல்ல எத்தனை யோ இளம் குடும்பத்த தலைவர்களை துரோகிகள் என்று கண்மூடித்தனமாக கொலை செய்வதன் மூலம் எத்தனை யோ தமிழ்ப்பெண்கள் விதவைகளாக் கப்பட்டு ஆயிரக்கணக்கான பாலகர்கள் அநாதைகளாக்கப்பட்டுள்ளனர். இவற் றைக் கண்டு உங்கள் மனம் வருந்த வில்லையா? நீங்களும் மூன்று பிள் ளைகளை பெற்றெடுத்த தாய்தானே. நடக்கக் கூடாத ஒரு சம்பவம் உங்கள் பிள்ளைகளுக்கோ அல்லது உங்கள் கணவருக்கோ நடந்தால் உங்களின் மனம் எவ்வளவு வேதனைபடும் என்ப தை சற்று சிந்தித்து பாருங்கள். அந்த வேதனையும் வலியும் உங்களுக்குப் புரியும். அதுமட்டுமல்ல லண்டனில் வெளிவந்த பத்திரிகை ஒன்றின் இதழ் ஒன்றையும் இணைத்து அனுப்புகின் றேன். அதில் அண்மையில் கொலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பி னர் தி. மகேஸ்வரனின் மகள் கதறிய ழும் புகைப்படம் ஒன்று பிரசுரிக்கப் பட்டுள்ளது. அந்தக் காட்சியைப் பார் த்தாவது இந்தக் கொடிய யுத்தத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முன் வரவும்.

இந்த பிஞ்சுகள் செய்த பாவம்தான் என்ன? அவர்களின் வாழ்க்கையும், இனிவரும் ஒவ்வொரு புதுவருடப் பிறப் பும் துக்க தினமாகத்தான் உருவாக் கப்பட்டுள்ளது. ஏன் இந்தக் கொடுமை? இதுமட்டுமல்ல இது போன்ற பலர் இந்தக் கொலைகளை யார் செய்தார் கள் என்பதல்ல பிரச்சினை? இப்படி யான சம்பவங்களுக்கு காரணமாகவு ள்ள கொடிய யுத்தத்தையும் கொ லைக் கலாச்சாரத்தையும் முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய அவசியத்தை இப் புகைப்படங்கள் வேண்டி நிற்கின் றது. அண்மையில் கருத்து வெளியிட்ட விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் திரு நடேசன் அவர்கள் குறிப்பிட்டிருந்தார் ~~தமிழ் மக்களை சிங்கள இராணுவத்தின் பிடியிலிருந்து பாதுகாக்கக்கூடிய சக் தியுடன் தாங்கள் இருப்பதாக. எமக்குப் புரியவில்லை, ஏற்கனவே எத்தனை யோ இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுடைய கூற்றின்படி பார்த்தால் வன்னி பெரு நிலப்பரப்பில் வாழ்கின்ற மக்கள் மட் டும்தான் தமழ் மக்களா?

இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதே சங்களில் விடுதலைப் புலிகள் தாக்கு தல்களைத் தவிர்த்திருப்பார்களேயா னால் மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள். இப்படிப்பட்ட முட்டாள்தனமான கருத் துக்களை வெளியிடுவதையும் ஏட்டிக் குப் போட்டியாக தாக்குதல் புரிவதா லும் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடி யாது. எனவே தமிழ் மக்களின் மீதும் அவர்களின் நலன்கள் மீதும் உண்மை யான அக்கறை உங்களுக்கோ அல் லது விடுதலைப் புலிகளுக்கோ இருந் தால் ஆக்கபூர்வமான நடவடிக்கை களை மேற்கொண்டு இனப்பிரச்சனை க்கு தீர்வு காண முன் வர வேண்டும் என நாம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிN;றாம்.
நன்றி

வணக்கம்

இனிய பாரதி

INIYABARATHY

S. A. Iniyabarathy
Tamil United Liberation Front
London
14.01.2008

Mrs. Mathivathany Prabaharan,
Political Head Quarters,
Liberation Tigers of Tamil Eelam,
Kilinochchi.

Dear Madam,

Although I am displaced from Sri Lanka and presently living in London, I am of the opinion that I could express my heartrending anxiety and mental suffering plight as I am much concerned of our people in Sri Lanka and due to patriotic feeling. Hence I venture to write this letter to you. Moreover, since you have learnt various aspects being a mother of three children and got yourself involved in people’s service, it is another reason which prompted me to write this letter.

In view of the presently prevailing precarious circumstances, we are forced to look back our past experiences, the path we had crossed, etc. If we think over the struggles of the Tamils, we could observe that it had taken place only up to 1987. We consider that the armed struggles which had taken place thereafter are concerned with the high ranks of Liberation Tigers and because of their power hungery motive. Any liberation struggles should always have the main interest of the people. But on contrary, it could be observed that the ongoing armed struggle is only concerning to enhance the Liberation Tigers military wise for warring activities.

When Indo-Sri Lanka pact was signed in 1987, all armed movements including Tigers had expressed their decision to switch on to democratic path. The speech delivered by the leader Prabaharan at Suthumali, for the first time, before the people, is in confirmation of this stand. If that rare opportunity was appropriately harnessed, we could have avoided the losses of several lives. The number of lives of heros lost at that time was 631. During that time, the Indian Government looked at the Sri Lankan Government as rivals and the Tamil as pals. The Indian Government in the best interest of the well being of the Tamils of this country, while providing best security and protection to Tamils, deployed their Peace keeping Force at the boundaries of Tamil areas.

Provided that golden opportunity was best utilised by the Liberation Tigers with balance mind and peacefulness, disregarding their false pride, in the interest of Tamil community, loss of valuable lives could have been avoided. Hundreds of intellectuals, thousands of heros, thousands of those who had difference of opinion, lakhs of general public, millions worth of property, could have been saved from irreparable losses. We do accepts with much heartburning that errors have taken place.

The leaders who were instrumental for Indo-Sri Lankan Pact such as M/s Amithalingam and Yogeswaran were assassinated. Moreover, the Indian Prime Minister Rajive Gandhi was assassinated by suicide bomber in Tamil Nadu of his motherland. In fact this tragic incident was accepted as a sorrowful incident by your husband at a press conference during the year 2001. However, we too take it as a granted as a lamentable tragic incident.

Thereafter, we had the second opportunity for the solution of our ethnic conflict after the General Elections of 1994 on assumption of power by M/s Chandrika Bandaranayake Kumaratunga. That was the ethnic solution package put forward by Prof. Neelan Thiruchelvam with regard to the Constitutional Amendment. A perusal of the solution package, would unequivocally reveal that it consisted of all aspects for the solution of the basic problems of the Tamils in this country. This is not only my contention but also that of political advisor of the Liberation Tigers who had openly divulged this fact at a time. On a belated opportunity, the Political Advisor of the Liberation Tigers openly disclosed this fact at a media conference during 2001. It is crystal clear the Liberation Tigers had lost this golden opportunity also owing to their power hunjer. It is very unfortunate that they assassinated by setting a suicide bomber Prof. Neelan Thiruchelvam, who volunteered to draft this solution package of our ethnic conflict. It is needless to point out at this juncture that this Constitutional Wizard is one who played vital role in drafting the political constitution of various countries including South Africa. Hence we take it for granted that it is also an unfortunate incident and forget same.

Subsequently, as a major progressive move a Ceasefire Agreement was signed with the mediation of Norway. At that moment we all jointly and unitedly expressed our willingness that a negotiated settlement to this problem had to be arrived at with the negotiation with the Liberation Tigers only. In the pretext of political activities, they entered the areas controlled by the Sri Lankan Army stage by stage. Offices were opened for political activities in such areas. Participated in number of rounds of negotiations. The Tamils observing this process dreamt to continue a livelihood of peacefulness. They commenced breathing peacefully. They lived with freedom of movement for few years. This cannot be either disputed or forgotten. The Liberation Tigers who came forward to perform political activities, but what have they done? Murdered the Tamils who had difference of opinion, forcibly demanding ransom from Tamils, who underwent untold suffering consequent to the war, in the pretext of Tax Collection. What have the Liberation Tigers achieved by going up to Geneva for peace talks? It was only the behest of them to entrust the interim self ruling authority which was drafted jointly by great intellectuals like Siva Pasupathy. It could be observed from the draft put forward by them that it did not contain an democratic aspects or reasonable outlook. So, by putting forward such an unrealistic demand, it could be contended that it was ... sinisterly motivated attempt of Liberation Tigers to disturb the peace talks.

When our respected Leader Late Mr. M. Sivasithamparam, leader of the Tamil United Liberation front, delivered his last speech in parliament he said thus “the presently attempted endeavour for peace with the mediation of Norway is the best and last chance and therefore both parties should make the best use of this rare opportunity”. The reason for my highlighting the contents of this speech is because of the fact that consequent to the wrongful decisions of the Liberation Tigers to harness such golden opportunities, the deplorably affected lot are those youths living below poverty line and the innocent general public. Even after the losses of the lives of thousands of heros, hundreds of intellectuals, lakhs of general public and the losses of assets worth billions, it is alarming to observe that your husband is still continuing to recite that the “thirst of Tamil community is the homeland of Tamil Elam”, repeatedly in deceitful manner. This act is similar to the attempt being adopted by mothers calling the moon “come, come moon running, come without halt, come carrying jasmine flowers” thus distracting the attention of babies in feeding them.

He knows very well that “Tamil Eelam” is not feasible. Our community would attain an honourable livelihood only if he brings down the “Kavadi” which he had lifted. If he rejects same, it would result in paving way to doom our community thus utterly wasting the sacrifices made by our community so far. We are not decrying your erection of homes ( affection abode) for elders. But we are unable to assimilate your activities of constructing grave pits in the name of “Thuyulum Illam” i.e. sleeping abode for heros for those tender youths who were forced to involve themselves in armed struggles for the liberation of our people.

Please refrain from burying the tender aged children in the name of war. Just thinks for a minute regarding the mental plight of the parents of those children. Besides, numerous young mothers are turned into widowhood, thousands of children are rendered to orphanage consequent to indiscriminate killings of several young familied persons in the name of traitors. Are you not repenting over these atrocities? Is it not the fact that you are also a mother of who gave birth to three children? Kindly just think of your mental agony if similar adverse consequences befell your beloved children or husband. You could realise such suffering and agony only then. I am also annexing herewith a copy of journal published in London for your perusal. When the photo of the crying son of Late Mr. T. Maheswaran M.P. is appearing, you should come forward to halt this horribles war at least after seeing this photograph.

What is the sin committed by these tender children? Their life and all the future New Year day have been created into much sorrowfulness. Why all these tragedies? It is not a question by whom this murder was committed. The pictures of these nature clearly exhibit the paramount importance of bringing a halt to such terrible murderous culture which are the causes for such tragic incidents. Recently Mr. Nadesam, the Political Wing Leader of the Liberation Tigers made his comments that they possess the capability and capacity of protecting the Tamils from the clutches of Sinhala Army. We are at a loss to understand this statement. Lakhs of Tamils are already residing in areas coming under the control of army. According to the above statement of Mr. Nadesan the doubt arises as to whether the Tamils who are living in Vanni areas only Tamils.

If the Liberation Tigers refrain from their military activities in the areas controlled by the army, then the Tamils could live peacefully. By uttering such foolish statements and engaging themselves with competitive attacks, no solution could be achieved for the basic problems of the Tamils. Hence if you or the Liberation Tigers have the genuine interest on Tamils and their wellbeing, you should come forward to involve yourself in feasible attempts.

We, therefore, reiterate this stand.

Thanking you,

Yours Sincerely,


S. A. Iniyabarathy,
Tamil United Liberation Front
London Branch,
UK.

பத்திரிக்கையில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி அவர்களால் தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பாக தலைவர் ஆனந்தசங்கரி அவர்களின் அறிக்கை

வீரகேசரி (07.01.2008) பத்திரிக்கையில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி அவர்களால் தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பாக தலைவர் ஆனந்தசங்கரி அவர்களின் அறிக்கை.
08-01-2008

தமிழர்களால் நிராகரிக்கப்பட்ட தலைவர்கள் நாங்கள் அல்ல.
புலிகளால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவர் நீங்களே.

தமிழர்களால் நிராகரிக்கபட்ட தமிழ் தலைவராக என்னை குறிப்பிட்டு தமிழகத்தில் நான் கூறிய கருத்துக்களுக்கு கனவுலகில் மிதந்து கொண்டு வீராப்பு பேசும் தம்பி ஜெயானந்தமூர்த்திக்கு வரலாற்றை ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

ஜனநாயக முறையில் நடைபெற்ற கடைசித் தேர்தலில் 36,000 வாக்குகளைப் பெற்று ஒன்பது பேரில் முதன்மை உறுப்பினராக நான் தெரிவு செய்யப்பட்டேன். தம்பி ஜெயானந்தமூர்த்தியைப் போல் சத்தியமூர்த்தி, கிங்ஸ்லி இராஜநாயகம் போன்றோரை பல்லக்கில் வைத்து பரலோகம் அனுப்பிவிட்டு குறுக்குப் பாதையால் பாராளுமன்றம் சென்றவன் நான் அல்ல. காலத்துக்குக் காலம் மக்களின் பின்னால் மறைந்திருந்து வீராப்பு பேசி இன்று பல்லாயிரக்கணக்கான மக்களை நடுத்தெருவில் நிறுத்தி விட்டு இந்தியாவின் பிரதிநிதியைப் போல் பேசுவது விந்தையிலும் விந்தை.

ஏந்த அரசுக்கும் நான் முண்டு கொடுத்தவன் அல்ல. கைக்கூலியாக செயற்படுவது தம்பி ஜெயானந்தமூர்த்தியே அன்றி நான் அல்ல. 2004ம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் மோசடி மூலமாகவும் புலிகளின் அடாவடித்தனத்தாலும் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் 22 பேரும் வென்றனர். ஐரோப்பிய ஒன்றியம், பொதுநலவாய நாடுகளின் பிரதிநிதிகள்,உள்ளுர், சி.எம்.வி., பெப்ரல் போன்ற அமைப்புக்கள் இந்த தேர்தல் நடவடிக்கையை கண்டித்ததோடு வடக்கு கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையாளருக்கு சிபாரிசு செய்தமையை மறந்து என்மீது களங்கம் கற்பிப்பது வேடிக்கையானது. அன்றைய ஐ.நா செயலாளர் திரு. கொபி அனான் உட்பட பல்வேறு நாட்டுத் தலைவர்களும் வடக்கு கிழக்கில் நடைபெற்ற தேர்தலை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது உலகறிந்த உண்மையாகும். இந்தியப் பிரதமர் கௌரவ மன்மோகன் சிங் அவர்கள் பெப்ரவரி மாதம் இலங்கைக்கு வருவதாக யாருக்கும் எப்போதும் கூறவில்லை. ஆகவே தம்பி ஜெயானந்தமூர்த்தியின் கற்பனைகளில் எம்மால்தான் அவர் வரவில்லை என்பதும் ஒன்றாகும்.

தான் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொள்ளும் மக்களை புறக்கணித்துவிட்டு பெரும்பான்மை மக்கள் மத்தியில் பாதுகாப்பாக வாழ்ந்து கொண்டு பேரினவாதத்தைப் பற்றி பேசுவதும் தம்மை மறந்து கைக்கூலிகளென பேசுவதையும் தம்பி ஜெயானந்தமூர்த்தி அவர்கள் தவிர்த்துக் கொள்வது நன்று. அரசியல் வாழ்வில் 50 ஆண்டுகள் சுய சிந்தனையுடன் செயற்பட்டு வந்தேனே அன்றி நான் யாருக்கும் எடுபிடியாகவோ, கைக்கூலியாகவோ செயற்பட்டது கிடையாது. மறைந்த அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கு நான் கொடுத்த பதில் ஞாபகம் இருக்குமென நினைக்கின்றேன். கப்பம், மிரட்டல் ஆட்கடத்தல், தடுத்து வைத்தல், சித்திரவதை செய்தல், கொலைகள் ஆகியவை பற்றி பேசும் தம்பி ஜெயானந்தமூர்த்தி தனது எஜமானர்களின் பிரதேசத்தில் இவற்றைவிட வேறு என்ன நடக்கின்றது என்பதை மட்டும் அவரால் சொல்ல முடியுமா?. ஆங்காங்கே கட்டுப்பாடற்ற பிரதேசத்தில் நடைபெறும் இச் சம்பவங்களை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். ஆனால் அவற்றில் சிலவற்றுக்கு யார் பொறுப்பு என்பதை நான் அறிவேன். தினம் தினம் பலாத்காரமாக பிடிக்கப்பட்டு மூளைச்சலவை செய்யப்பட்டு போர்முனைக்கு அனுப்பப்படும் அப்பாவி ஏழைப் பெற்றோரின் பிள்ளைகளை போர்முனையில் பலி கொடுப்பதை அவரால் தடுக்க முடியவில்லை. வீராப்பு பேசி காலத்தை வீனடிக்காது தனது பிள்ளையையும் கூட்டிக்கொண்டு போர்முனைக்கு செல்வதே உத்தமர்கள் செயலாகும்.

இந்தியாவும், குறிப்பாக தமிழகமும் இலங்கைத் தமிழர்கள் மீது அக்கறையோடு செயற்பட்டு தீர்விற்கு ஒத்துழைக்குமே அன்றி அவர் கூறும் பிரமுகர்கள் அல்ல என்பதை தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.



வீ. ஆனந்தசங்கரி
தலைவர்- த.வி.கூ