பத்திரிக்கைச்செய்தி

12.03.2007
ஆசிரியர்,
தினமுரசு,
கொழும்பு.

அன்புடையீர்,

தங்களின் வாரமலர் 703ல் (மார்ச் 8 – 14, 2007) தேடனாரின் இரத்த சாட்சியங்கள் 4வது பகுதியில் எனது கருத்துக்களைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள். அதாவது “தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் விடுதலைப் புலிகளே! எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதையே நாம் தொடர்ந்தும் வலியுறுத்துவோம்”. இது தவறாகும்.

விடுதலைப் புலிகளுடன் மட்டும் தான் பேசவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தேனே தவிர ஒருபோதும் விடுதலைப் புலிகளை ஏகப் பிரதிநிதிகள் என நான் குறிப்பிடவில்லை. ஆரம்பத்திலிருந்தே இதைப் பகிரங்கமாகவே நான் தெரிவித்து வந்திருக்கிறேன். இந்த மறுப்பை பிரசுரிக்கவும்.

“வீரகேசரிப் பத்திரிகையில் வெளியாயிருந்த செய்தியில் எதுவித உண்மையுமில்லை.

தங்களுண்மையுள்ள,


வீ.ஆனந்தசங்கரி,
தலைவர் - தமிழர் விடுதலைக் கூட்டணி.

PRESS RELEASE

The President of the TULF Mr. V. Anandasangaree met the Chief Minister of Tamil Nadu Dr. Kalaignar Karunanithi yesterday (02.03.2007)at his Gopalapuram residence in Chennai.

The President TULF stated that “Dr. Kalaignar, One of the Leader’s in India who can persuade the Indian Government to intervene and help to resolve the ethnic problem in Sri Lanka”.

“Dr. Kalaignar assured that he would do his best to persuade the Indian Government accoringly”.


நேற்று வெள்ளிக் கிழமை (02.03.2007) காலை தமிழ்நாடு முதலமைச்சர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களை தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ. ஆனந்தசங்கரி கோபாலபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடினார். இன்றைய காலகட்டத்தில் இலங்கை இனப்பிரச்சனை தீர்வுக்கு இந்திய மத்திய அரசின் தலையீடு அவசியம் என்பதையும், இந்தியாவை தலையிட வைக்கக்கூடிய ஒரு தலைவர் டாக்டர் கலைஞர் என்பதையும் வலியுறுத்திக்கூறினார்.

இனப்பிரச்சனையைத் தீர்த்து வைப்பதில் தனக்குப் பெரிதும் அக்கறை உண்டென்றும், தன் பங்களிப்பை தவறாது வழங்குவதாகவும் முதல்வர் உறுதியளித்தார். மத்திய அரசிடமும் இதுபற்றிப் பேசுவதாகவும் முதல்வர் கலைஞர் தெரிவித்தார்.