நாம் ஒன்றுபட்டு இழந்த உரிமைகளை பெற்றுக்கொள்வோம்

06.07.2009

நாம் ஒன்றுபட்டு இழந்த உரிமைகளை பெற்றுக்கொள்வோம்.

ஜனநாயக வழிமுறைகளினூடான தமிழர்களின் உரிமைப் போராட்டம் வெற்றியளிக்காததின் காரணமாக, எமது உரிமைகளை, ஆயுத முறையின் மூலம் நாம் பெற முற்பட்டதின் விளைவாக, எம்மிடம் இருந்த உரிமைகளையும் இழந்து நிற்கின்றோம். அதிலும் குறிப்பாக வன்னியில் இருந்து, கடும் மோதலுக்கு மத்தியில் தப்பிவந்த எமது மக்களை, ஆடு மாடுகளைப் போல் சிறிய இடத்தில், மிகச்சிறிய கூடாரத்தில் கடும் வெய்யிலுக்கு மத்தியில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த மோதலில் நாம் பல ஆயிரக்கணக்கான உயிர்களையும், பல ஆயிரக்கணக்கான மக்கள் தமது உடல் உறுப்புக்களை, பல கோடி பெறுமதியான சொத்துக்களையும் இழந்து அகதிகளாக பரிதாப நிலையில் இருக்கின்றோம்.

தமிழ் மக்களின் பிரச்சனைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண்பதற்கு இனியாவது இந்தியா இதய சுத்தியுடன் செயற்படவேண்டும். விடுதலைப் புலிகள் செய்த தவறிற்காக தமிழ் மக்களை ஒருபோதும் பழிவாங்க எண்ணக்கூடாது. இனைந்த வடகிழக்கில் இந்திய முறையிலான தீர்வை அமூல்படுத்த நடவெடிக்கை எடுக்க வேண்டும்.

மோதலினால் இடம்பெயர்ந்த மக்கள் அனைவரையும் தத்தமது சொந்த இடத்தில் காலம் தாமதிக்காது மீள்குடியேற்ற வேண்டும். அத்துடன் அவர்களுக்கு தகுந்த நிவாரணம் வழங்கவேண்டும்.

நிராயுதபாணியாக்கப்பட்ட போராளிகளை சமூகத்தில் வாழ்வதற்கான முறையில் புனர்வாழ்வளிக்கப்பட்டு, தொழில் வாய்பு பெற்றுக்கொடுக்க வேண்டும். அத்துடன் அனைத்து ஆயுதக்குழுக்களின் ஆயுதங்கள் முற்றாக களையப்பட்டு, ஆயுத அடக்கு முறை கலாச்சாரத்தை ஒழித்து, தமிழ் மக்கள் அச்சமின்றி வாழும்; முழுமையான ஜனநாயக சூழல் உருவாக்கப்பட வேண்டும.

எமக்குள் நாமே அதிகாரப் போட்டியும், பதவி வெறியும் மற்றும் யார் முதன்மையானவர் என்ற போட்டியில் பிளவு பட்டிருக்கும் தமிழ் தலைமைகள் இனியாவது பகமையை மறந்து மனது விட்டு கூடிப்பேசி எமது இனப் பிரச்சனைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண்பதற்கு பொதுத்திட்டத்தில் ஒன்றுபட்டு செயற்படவேண்டும்.

தமிழ் மக்களின் பொருளாதாரத்தை எவ்வளவு அழித்தாலும் இன்றும் நாம் ஓர் அளவிற்கேனும் நிமிந்து நிற்பதற்கு முக்கிய காரணம் புலம்பெயர்ந்து வெளிநாட்டில் வாழும் எம் சகோதரர்களே. தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு ஏற்பட, இவர்களும் பக்க சார்பற்ற முறையில், ஜனநாயக வழியில் தொடர்ந்து போராடவேண்டும்.

எனவே அனைத்து தமிழ் தலைவர்களும், மக்களும் ஜனநாயக வழிமுறைகளினூடாக ஒருமித்து ஏகோபித்த குரலில் தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு ஏற்பட, அரசிடமும் மற்றும் சர்வதேச சமூகத்திடமும் உறுதியாக வலியுறுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

வாழ்க தமிழ்

நன்றி,

தி. சுரேஷ்.

இடம் பெயர்ந்த மக்களின் பரிதாபநிலை

2009-07-05
மேன்மை
தங்கிய மஹிந்த ராஜபக்ஷ,
இலங்கை ஜனாதிபதி,
அலரி மாளிகை,
கொழும்பு.

அன்புடையீர்,

இடம் பெயர்ந்த மக்களின் பரிதாபநிலை

இந் நாடு தனது கௌரவத்தையும், மதிப்பையும் பேணி காக்க வேண்டுமாயின் தங்களின் தலையீடு இக்கட்டத்தில் இன்றியமையாதது என்பதை தங்களை நம்ப வைக்கவே இக் கடிதத்தை நம்பிக்கை இழந்த நிலையில் எழுதுகிறேன்.

இந்த நாட்டின் நாணயம் இடம்பெயர்ந்த மக்களில் சில வகையினரை உடனடியாக விடுவிக்க தாங்கள் மேற்கொள்ளும் முடிவிலும் ஏனையவர்களின் விடுதலை பற்றி மறுபரிசீலனை செய்வதிலுமே தங்கியுள்ளது. தாம் மிகவும் கட்டுப்பாடுடைய ஓர் திறந்தவெளி சிறைச்சாலையிலே அன்றி ஓர் நலன்புரி நிலையத்தில் அல்ல என்ற உணர்வுடனேயே நியாயமற்ற முறையில் வலு கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இம் மக்கள் உணர்கிறார்கள். ஆகவே போயா தினமாகிய நாளை மறுநாள் இது சம்பந்தமாக நீங்கள விடுக்கும் அறிவித்தல் மிக முக்கியமானதும், முழு பௌத்த உலகும் நிம்மதி பெருமூச்சு விடும். சம்பவவும் ஆகும்.

இடம்பெயர்ந்தோர் முகாம்களில் நடைபெறும் சில விடயங்கள் தங்கள் கவனத்திற்கு கொண்டுவரப்படவில்லை என்ற ஊகத்திலேயே நான் செயற்படுகின்றேன். நேரில் காண்பதே நம்பிக்கை தரும் என்பதால் ‘மெனிக் பார்ம்’ இலுள்ள முகாம்களை தவிர்ந்த வேறு முகாம்களுக்கு நீங்கள் என்றோ விஜயம் மேற்கொண்டிருந்திருக்க வேண்டும். தாங்கள் தலைவராக இருக்கும் ஓர் நாட்டில் இத்தகைய சம்பவங்கள் நடக்கவும் கூடாது. நடக்க விடவும் கூடாது. தாம் செய்யாத குற்றத்திற்காக துன்புறும் மூன்று இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களுடைய உயிருடன் விளையாட நினைப்பவர்களின் கண்களை தங்களுடைய தீர்வு திறக்க வைக்கும். பெற்றோரால் தம் கைச்செலவுக்கு கொடுக்கப்படும் பணத்தை சேமித்து கசாப்புக்கடைக்கு கொண்டு செல்லப்பட்ட கால்நடைகளை மீட்டெடுக்கும் பிள்ளைகளை கொண்ட பெருமைமிக்க நாடு எங்கள் நாடு. புல்மோட்டையில் இடம்பெயர்ந்தோர் முகாமில் வாழும் ஒரு வயது குழந்தையையும் அவருடைய பேத்தியாரையும் விடுவிக்க மறுக்கப்பட்ட சம்பவமே இக் கடிதத்தை தங்களுக்கு எழுதுவதற்கு என்னைத் தூண்டியது. வலது கால் துண்டிக்கப்பட்டு ஓர் முகாமில் உள்ள இளைஞன் ஒருவனின் குழந்தை அவனுடைய தாயின் அரவணைப்பில் இருக்கிறது. வலது கால் துண்டிக்கப்பட்டு இடது கால் முறிந்து பிணைக்கப்பட்ட நிலையில் வவுனியா இடம்பெயர்ந்தோர் முகாமில் தங்கியுள்ளவரே இக் குழந்தையின் தாயாவார். இது போன்ற சம்பவங்கள் உலகின் எப்பகுதியிலும் நடந்ததில்லை. தங்களுக்கு இச் சம்பவங்கள் பற்றி தெரியும் என்பதை நான் கடுகளவும் நம்பவில்லை. இதுபோன்ற பல சம்பவங்கள் பல்வேறு முகாம்களில் வாழும் இந்த மூன்று இலட்சம் மக்கள் மத்தியில் நிறையவே நடக்கின்றன.

வன்னியில் அவர்களாக துணிந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்திலிருந்து தப்பி அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் நுழைவேர்களேயானால் அவர்களை நன்றாக உபசரித்து பாதுகாப்பு கொடுப்பதாக தாங்கள் உத்தரவாதமளித்துள்ளீர்கள். அவ்வாறு தப்பி வரும் வேளையில் எத்தனை பேர் இறந்தார்கள், கொல்லப்பட்டார்கள் என்ற விபரம் உலகத்துக்கே தெரியும் துரதிஷ்டவசமாக அவர்கள் நன்றாக கவனிக்கப்படவில்லை. அதற்கு முரணாக அவர்களின் உடலும், உள்ளமும் அங்கே நடக்கின்ற சம்பவங்களால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகின்றன. இவ்வாறான அவலங்கள் தம்மீது திணிக்கப்படும் என்று அவர்கள் நினைத்திருந்தால் இந்த அபாயகரமான நடவடிக்கையில் ஈடுபடாது இரு பகுதியினரிடையே நடந்த செல் தாக்குதலில் இறந்த தமது பல உற்றார் உறவினர்கள் அன்புக்குரியவர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியுடன் மடிந்திருப்பர். ஒரு நாளைக்கு மட்டும் இம் முகாம்களின் கதவுகளை திறந்து வைப்பீர்களேயானால் முகாம்களில் ஒருவரேனும் மிஞ்சியிருக்கமாட்டார்கள் என்பதை தாங்கள் நேரில் காண்பீர்கள்.

இச்சம்பவங்கள் பற்றி தங்களின் கவனத்திற்கு கொண்டு வருவது எனக்கு மிக மனவேதனையை தருகிறது. நீண்ட நாட்கள் பொறுத்திருந்து எதுவும் நடக்காததினால் என் உணர்வுகள் வரம்பை மீறி செயற்படுவதற்கு என்னை மன்னித்துக் கொள்ளவும். என் நிலையில் நீங்கள் இருந்தால், என்னுடைய உணர்வுகளை உங்களால் புரிந்து கொள்ள முடியும். எனது தொகுதி மக்கள் ஆயிரக்கணக்கில் கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இருந்து முகாம்களுக்கு வந்துள்ளனர். அவர்களுடன் பலகாலம் நான் வாழ்ந்தது பற்றியும் நீண்டகாலம் அவர்களை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தியதும் நீங்கள் அறிந்ததே. ஒருவர் தப்பாமல் ஒவ்வொருவரும் எனக்கு தெரிவிக்கின்ற கதைகள் மிக சோகமானவை. பலர் மனைவியை இழந்தும், வேறு சிலர் கணவன் பிள்ளைகளை இழந்தும் உள்ளனர். அநேகர் தமது பெற்றோரை இழந்துள்ளனர். அப் பெற்றோர் யுத்த முனையில் போராளிகளாக அல்லாமல் அப்பாவி மக்களாக துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாகி உள்ளனர். அநேகர் பதுங்கு குழிகளுக்குள் உயிரோடு புதைக்கப்பட்டனர். அநேகர் பட்டினியாலும், குழந்தைகள் பல பாலின்றியும் மரணித்திருக்கிறார்கள். பலர் தமது உற்றார் உறவுகளை இன்றும் தேடி அலைகின்றனர்.

முகாம்களில் உள்ளவர்கள் தமது காணாமல்போன உறவினர்களையும் வெளிநாடுகளிலும், வெளியிலும் உள்ளவர்கள் தமது உறவினர்கள் தமக்கு வேண்டியவர்கள் பற்றிய தகவல்களை பெறக்கூடியதாகவும் முகாம்களில் உள்ளவர்களின் பெயர் விபரத்தை வெளியிடும்படி ஆரம்பத்திலேயே கேட்டிருந்தேன். முல்லைத்தீவு சுகாதார இலாகாவை சேர்ந்த திரு தர்மகுலசிங்கம் என்ற அதிகாரி இறந்தவர்கள், காயமுற்றவர்கள் பற்றிய விபரத்தை திரட்டிக்கொண்டிருந்தவேளை அவரே செல் தாக்குதலில் பலியாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அத்துடன் அப் பணியும் நின்றுவிட்டது. காணாமல் போன ஒருவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதைகூட அறிய முடியாமல் உள்ளது. இனங்காணாத பலரின உடல்கள் பழுதடைந்த நிலையில் ஒரே குழியில் புதைக்கும் சம்பவம் அடிக்கடி நடப்பதுண்டு. நெருங்கிய உறவினர்கள் கூட அவர்களை அடக்கம் செய்யும் வேளையில் பிரசன்னமாக இருக்க அனுமதிக்கப்படுவதில்லை. ஓர் இறந்தவருக்கு கிரியைகளை செய்யவேண்டிய கடமைப்பாடு உண்டு. அவற்றில் சில முக்கியமானதும் கண்டிப்பானதுமாக இருப்பது ஓர் ஆத்மசாந்திக்கு ஏதுவானது என மக்கள் நம்புகிறார்கள். நான் கூறுவது முட்டாள்த்தனமாக இருக்கலாம். ஆனால் முறைப்படி சில கிரியைகள் செய்யாதமை ஆத்மாக்களை அந்தரிக்க வைக்கும் என்று உலகம் பூராகவும் உள்ள மக்கள் நம்புகிறார்கள். இது சாதாரண விடயம் என்று நாம் தட்டிக்கழித்துவிட முடியாது. குறிப்பிட்ட சில காரணங்களுக்காக மக்கள் இதை வெளியில் கூறாவிட்டாலும் அவர்கள் மௌனமாக மனதுக்குள்ளேயே அழுகின்றனர். நான் இதை முழுக்க முழுக்க நம்புகின்றேன். நல்லதொரு சிறந்த பௌத்தர் என்ற வகையில் நீங்களும் இதில் நம்பிக்கை வைத்திருப்பீர்கள் என்பதை அறிவேன். நிச்சயமாக எவருக்கும் ஓர் எதிரிக்கு கூட இவ்வாறு நடப்பதை நான் விரும்ப மாட்டேன்.

நான் கேட்டவை, கேட்டுக் கொண்டு இருக்கின்ற பலவற்றில் சில கண்களை கலங்க வைக்கும் சம்பவங்களாகும். காயமுற்றோரும், கர்ப்பிணிகளுமே மிகக் கூடுதலாக துன்பத்தை அனுபவிக்கின்றனர். அவர்களுக்கு வேண்டிய உடனடித் தேவையோ முறையான கவனிப்போ கிடைப்பதில்லை. முறையான வைத்தியம் இன்றி பலர் இறந்துள்ளனர். அவர்கள் அனுபவிக்கும் சரீர வேதனையிலும் பார்க்க உள்ளத்தால் படும் வேதனைகள் அவர்களை பெருமளவு பாதிக்கின்றன. பல ஆயிரக்கணக்கான சம்பவங்கள் இருப்பினும் ஓரிரு சம்பவங்களை மட்டும்தான் இங்கே குறிப்பிடுகின்றேன்.

முதலாவது சம்பவம் நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல புல்மோட்டையில் ஒரு காலை இழந்த 30 வயதுடைய இளைஞன் ஒருவரை பற்றியதாகும். சம்பந்தப்பட்ட நால்வரில் எவரிடமிருந்தாவது இந் நாட்டுக்கு எத்தயை அச்சுறுத்தல் இருக்க முடியும்? இவர்களை மாதக்கணக்கில் மூன்று வௌ;வேறு இடங்களில் வைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன?

இன்னோர் சம்பவத்தில் வன்னியில் ஓர் தலைமை ஆசிரியர் செல் தாக்குதலில் அதே இடத்தில் மரணமானதோடு மகள் படுகாயமுற்றார். யாழ்ப்பாணத்தில் அவர்களை பராமரிப்பதற்கோ, அல்லது அவர்களுக்காக அழுவதற்கோ நிறைய உறவினர் உள்ளனர். ஆனால் ஒரு உறவினரோ, நண்பரோ இல்லாத மன்னாரில் தாயார் பிள்ளையுடன் வைத்தியசாலையில் இருக்கின்றார். இக் குற்றத்திற்கு யார் பொறுப்பாளி? இதற்காக நான் தங்களை குற்றம் கூறவில்லை. ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவர்களை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பியிருந்தால் அவர்களை கவனிப்பதற்கும் இறந்த கணவருக்குரிய கடமைகளை செய்வதற்கும் நிறைய உறவினர்கள் இருக்கிறார்கள்.

தங்களை நான் 40 ஆண்டுகளாக நன்கறிவேன். இத்தகைய சம்பவங்களை தாங்கள் சகித்துக் கொள்ளக்கூடியவரல்ல. ஏறக்குறைய கால் நூற்றாண்டுகளுக்கு மேல் சொல்லொணா துன்பங்களை அனுபவித்து நித்திய பயபீதியுடன் வாழ்ந்த மக்களுக்கு இத்தகைய தொந்தரவு கொடுப்பது ஏற்கக்கூடிய விடயமல்ல. தங்கள் உயிரை பணயம் வைத்து படுகாயமடைந்த நிலையில் இறந்துபோன உறவினர்கள் அத்தனை பேரையும் விட்டு விட்டு ஜனாதிபதி என்ற முறையில் தங்களிடம் ஆறுதல் கோரி வந்த மக்கள் இதுவரை பட்ட வேதனை போதாதா? நான் ஒருபோதும் தங்களுக்கு தப்பான வழி காட்டியவனல்ல. நான் கூறும் ஆலோசனைகள் நல்லெண்ணத்தோடு ஒரு பௌத்த நாட்டின் நாணயத்தை காப்பாற்ற கொடுக்கப்படுகின்றவொன்றாகும். முன்பு ஒரு தடவை உலகம் எமது நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டிருக்கிறது என்றும் நான் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைகளும் இந் நாட்டிலும் வெளியிலும் யாரோ எவராலோ பதியப்பட்டுக் கொண்டிருக்கிறது என எச்சரிக்கை விடுத்திருந்தேன். எதிர்காலத்தில் ஒரு நாள் நானும் நீங்களும் இந்த உலகத்தில் இல்லாதவேளை அல்லது சில சமயம் நீங்கள் இருக்கின்ற காலத்திலேயே எழுந்து பார்க்கின்றபோது பல உண்மைகள் தெரியவந்து முழு உலகும் இலங்கையை குற்றவாளியென தீர்மானிக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக மேலே ஒருவர் வரவு-செலவு கணக்கு எழுதிக் கொண்டிருக்கின்றார்.

என்னை நீங்கள் நன்கு அறிவீர்கள். நான் சுயநலன் கருதி எவரையும் முகஸ்துதி செய்பவன் அல்ல. நான் எப்போதும் உள்ளதை உள்ளபடி கூறுபவன். நான் பெருமைமிக்க பௌத்த வரலாற்றைக் கொண்ட ஒரு நாட்டின் பிரஜையென எப்பொழுதும் வெளிப்படையாக கூறி வந்துள்ளேன். புத்த பகவான் விஜயம் மேற்கொண்ட மகியங்கனைக்கும், பெருமானின் புனித தந்தத்தை கொண்டுள்ள தலதாமாளிகைக்கும் எத்தனை தடவை சென்று தரிசித்து வந்தேன் என்ற எண்ணிக்கையை கூட மறந்துவிட்டேன். பல மகா நாயக்கர்களுடைய குறிப்பாக மிக வணக்கத்துக்குரிய அஸ்கிரிய மல்வத்த மகாநாயக்கர்களின் ஆசீர்வாதத்தை பல தடவைகள் பெற்றுள்ளேன். இன்று பெருமைமிக்க பௌத்த நாடாக இருந்த நாட்டின் எதிர்காலம் கேள்விக்குரியதாகி வரும் வேளையில் நான் ஏன் இந்த நாட்டில் பிறந்தேன் என்ற கேள்வி என்னுள்ளே எழுகின்றது.

நான் மிக வன்மையாக தங்களிடம் வேண்டுவது எதுவித தாமதமுமின்றி உடனடியாக இடம்பெயர்ந்தோர் முகாமில் காயமுற்றோர், முதியோர், நலிந்தவர்கள், கர்ப்பிணி தாய்மார்கள், குழந்தைகளுடன் கூடிய தாய்மார்கள், நடமாடமுடியாதவர்கள், புத்தி சுயாதீனமற்றோர், மூளை வளர்ச்சி குன்றியோர், அநாதைகள், ஆதரவற்றோர் ஆகியோரை உடன் விடுவிக்கவும் அத்துடன் பல்வேறு முகாம்களில் உள்ள குடும்ப உறுப்பினர்களை ஒன்று சேர வைத்து மக்களை தத்தம் மாவட்டங்களுக்கு அனுப்பி வையுங்கள்.

நான் நாட்டையும், நாட்டில் வாழும் மக்களையும் நேசிக்கும் நாட்டுப்பற்றாளன் ஆவேன். தாங்கள் ஏற்கக்கூடிய வேறு சில நல்ல ஆலோசனைகளுடன் விரைவில் இன்னுமோர் கடிதத்தினை அனுப்பி வைப்பேன்.

தமிழ் மக்களை தாங்கள் வென்றெடுக்க வேண்டுமானால் இதனை முதலில் செய்து அதனைத் தொடர்ந்து மீள் குடியேற்றத்தை செய்ததன் பின்பே அபிவிருத்தியை பற்றி யோசியுங்கள்


நன்றி


வீ. ஆனந்தசங்கரி
தலைவர்-.விகூ

THE PATHETIC PLIGHT OF THE IDPs

05-07-2009
His Excellency Mahinda Rajapaksa,
President of Sri Lanka,
Temple Trees,
Colombo-03

Your Excellency,

THE PATHETIC PLIGHT OF THE IDPs.

In utter despair I am writing this appeal to you to convince you that your intervention at this stage is indispensable, if the country is to maintain its dignity and honour. The country’s credibility lies in your decision to order the immediate release of certain categories of IDPs and to follow it up soon by re-viewing the problem of the remaining IDPs. At present, they are virtually kept under compulsion without any justification, giving them the feeling that they are kept in an open prison with too many restrictions and not in a welfare centre. Hence your announcement tomorrow, a POYADAY, will be very crucial and will grant relief to the entire Buddhist World.

I am acting on the assumption that many happenings in the IDP Camps are not brought to your notice. Seeing is believing and a visit to some of the IDP Camps by you is long over due, but not any in the Menic Farm. These things cannot and should not happen in our country with you as the Head of the State. Your decision which I am sure will open the eyes of some, who think that we can play with the lives of over 300,000 odd IDPs who are suffering for no faults of theirs. We are a proud Nation in which small children used to save the lives of cows, from the butchers, with their pocket-money.

What provoked me to write this to you today is the denial of the authorities, to release a one your old child with the 61 year old Grandmother with whom the child is now staying in a IDP Camp at Pulmoddai. The father of this child and son of this Grandmother had his left leg amputated and is now in Pulmoddai. His wife had a right leg amputated with a multiple fracture on the left leg and is now in Vavuniya. These things are not happening in any part of the world. Even for a moment I will not assume that you have any knowledge of these incidents. This type of incidents are available in abundance in various camps among the 300,000 odd displaced persons.

This detention is contrary to the undertaking given by you to the people of Vanni that they will be well looked-after if they escaped from the areas under the control of the LTTE at their own risk and came into the areas under the control of the Government. How many died or got killed in the risk they took, while crossing over, is not unknown to the world. Unfortunately they are not looked-after well but are physically and mentally tortured due to the prevailing conditions in the IDP Camps. Had they known that they will be forced to undergo this ordeal not one person would have dared to cross over at such risk to his or her life and would have preferred to stay behind and face death with their kith and kin or their dear ones, many of whom died due to shelling from both sides or died in the process of crossing over to the Government side. You will see for yourself that, if you allow the gates of the IDP Camps opened for a day, hardly one person staying behind.

It is indeed painful for me to bring to your notice all these. Please pardon me for giving vent to my un-controllable feelings which I am doing after waiting so long, for the situation to improve. If you are in my position it will be easy for you to understand my feelings. Thousand of my old constituents have come to the IDP Camps from the Districts of Kilinochchi and Mullaitheevu. You know that I lived with them for several years and had represented them for a fair length of time. It is a tale of woe, that I hear from every one of them without any exception. Some are without their wives and some others their husbands and children. A good number had lost their parents, most of whom lost their lives in the battle front, not as combatants but as innocent civilians caught up in the cross fire and some others got buried alive in the bunkers, many died of starvation and children without milk food. They are still searching for their kith and kin. I made an appeal at the very start to publish a list of persons in each camp to enable the IDPs to trace their missing relatives and to help people living outside and in foreign countries to locate the people dear to them. So far it is not done. An officer named Mr. Tharmakulasingham attached to the Mullaitheevu Health Department who was maintaining a record of all causalities; himself got killed in a shell attack while he was on duty. That is the end of it. There is no way to determine whether a missing person is alive or dead. Many unidentified bodies in decomposed state are damped in common graves, many a times in the IDP Camps, Even the close relatives are not allowed to be present at the burial ceremony. There are a lot of rites that will have to be performed for the dead, some of which are compulsory for a soul to rest in peace. It may look ridiculous but people all over the world fear that souls for which no proper rites are performed has a tendency to roam about restlessly. Let one person dare say that what I say is rubbish. These are very sentimental issues that cannot be brushed side. For obvious reasons the IDPs do not complain but continue to weep in silence. I strongly believe this and I hope as a true Buddhist you will agree with me. I will certainly not bear to see this happening to any one, not even to an enemy.

I heard and continue to hear a number of stories, some of which moved me to tears. It is the injured and the pregnant women who suffer the worst, without proper and prompt attention. Many injured had died for want of prompt treatment. Apart from the physical pain they undergo the mental torture affects them the most. Although there are thousands of cases, I give just one or two examples for you to consider the seriousness of the problems.

One, is the story of the young man of 30 years who had his left leg amputated and is now in Pulmoddai. What is the security risk the country faces from these four individuals? What is the need to have them at three different places for months?

In another case the Principal of a School in Vanni died of shell attack and his daughter also got badly injured. They are from Jaffna having plenty of relatives to weep for them and also to look after them. The mother and child are at the Mannar Hospital with hardly any one known to them. Who is answerable to this crime Your Excellency? I do not blame you for this. The authorities should have sent them to Jaffna to be cared for by their people and also to perform the due rites to the dead husband.

I know you for over forty years. These are matters, I know you will not tolerate. This type of harassment, especially to people who had suffered in many ways for more than quarter of a century and had been living in constant fear and tension, is unacceptable. They have suffered enough and came running to you, risking their lives and leaving behind the seriously wounded and dying relative to seek solace from you, as their President. You are aware that I never misled you in any matter. The suggestions I make are well intended and to save the credibility of the country as a Buddhist Nation. I remember warning you on an earlier occasion too that the world is watching every step we take and there are many keeping a record of what is happening in our country and elsewhere. One day when you and I are no more or may be even during your lifetime Sri Lanka will wake-up to see itself condemned by the whole world, when many hidden truths come to the open. Above all there is one above preparing a balance sheet.

You know me well. I do not flatter anybody for my personal gains. I don’t hesitate to call a spade a spade. To be very frank, I had been always feeling proud that I am a citizen of Sri Lanka that has a proud Buddhist Heritage. Although not a Buddhist I am one who pays obeisance to Lord Buddha. I have lost count of the number of visits I paid to Mahiyangana, and Dalada Maligawa, I have had the blessings of several Mahanayakas including those of the most Venerable Asgiriya and Malwatte Mahanayakas. I am now beginning to think as to why I was born in this country where the future of this country as a Proud Buddhist Nation is at stake.

I strongly urge that you should without any delay order the immediate release of the injured persons, the old and the feeble, pregnant women, women with children, disabled persons, mentally retarded persons, the insane persons, orphans, destitute persons and such others who deserve release. Also please reunite members of the same family from various camps. Please send people from various districts to their respective districts.

As a patriotic Sri Lankan who loves not only his country but also its people, I have done my duty to my country. A Further letter will be sent to you with some other suggestions which you will accept as reasonable.

If you want to win over the Tamils do this first, resettle them soon and think of any development latter.

Thanking you,

Yours Sincerely,


V. Anandasangaree,
President – TULF.