27-07-2008
மேன்மை தங்கிய மஹிந்த ராஜபக்ஷ
இலங்கை ஜனாதிபதி,
அலரி மாளிகை,
கொழும்பு.
அன்புடையீர்,
இன்னும் சில நாட்களில் இன்னுமொரு பெரும் பதவி தங்களை அலங்கரிக்க இருக்கிறது. 1.7 பில்லியன் மக்களை உள்ளடக்கிய மிகப் பெரிய அமைப்பாகிய சார்க் நாடுகளின் தலைவராக நியமிக்கப்படவுள்ளீர்கள். தங்களின் இச் சாதனைக்கு முன்கூட்டிளே எனது வாழ்த்துக்கள். இப்பெரும் கௌரவம் தங்கள் மீது சுமத்தப்பட்டதையிட்டு நாடு பெருமிதம் கொள்கிறது. குறைந்த வயதில்(24) ஓர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு 38 ஆண்டுகள் நாட்டுக்கு சேவை செய்த ஒரு பெருமகனாருக்கு வழங்கப்பட்ட பொருத்தமான கௌரவமாகும்.
இன்றைய பாராளுமன்றத்தில் தங்களிலும் வயது கூடிய உறுப்பினர்கள் மூவர் மட்டும்தான் உள்ளனர் என்பதை ஞாபகமூட்ட விரும்புகிறேன். தங்களின் தற்போதைய பதவி அண்மையில் தங்களின் சாதனை, முதிர்ச்சி ஆகிய மூன்றும் எத்தகைய முரண்பாட்டையும் மிஞ்சி இம் மாநாட்டில் கலந்து கொள்கின்ற தலைவர்களுக்கு அன்றி நாடு முழுவதற்கும் தலைமை தாங்கி வழிகாட்டக்கூடிய அளவுக்கு தங்களை உயர்த்தியுள்ளமையால் விரைவில் சமாதானத்தை அடையலாம் என நாடு கருதுகிறது.
நிரந்தர பயத்துடனும், பீதியுடனும் வாழும எம் மக்களுக்கு சார்க் உச்சி மாநாட்டை நடத்துவதற்கு கிடைத்த வாய்ப்புக் கடவுளால் தரப்பட்ட வரப்பிரசாதமும், ஆசீர்வாதமும் ஆகும். பேரூந்து, புகையிரதம் ஆகியவை ஒருபுறமிருக்க இலங்கையின் வீதிகளில் ஒருவர் சுதந்திரமாக நடமாடமுடியாது. ஆங்கத்துவ நாடுகள் எதிர்கொள்ளம் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே சார்க் உச்சி மாநாடு வேலைத்திட்டத்தில் ஒன்றாகும். ஆதிஷ்டவசமாக எமது ஏழு அயல் நாடுகளுடன் எமக்கு எதுவித கருத்து வேறுபாடு கிடையாது. ஜனாதிபதியாக கடமையாற்றும் தாங்கள் அங்கத்துவ நாடுகளுடன் நல்லுறவு கொண்டிருப்பது எமது மேலதிக அதிஷ்டமாகும். எமது நாடு எதிர்றோக்கும் பிரச்சினைகள் அத்தனையையும் தீPர்ப்பதற்கு உதவ அங்கத்துவ நாடுகள் மகிழ்வுடன் செயற்பட தயாராக உள்ளன. மக்களின் நலன் பேணல், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல், பொருளாதார வளர்ச்சிக்கு உதவுதல் கௌரவமாக வாழ வாய்ப்பளித்தல் ஆகியவை சார்க் உச்சி மாநாட்டின் பல நோக்கங்களில் இவை சிலவாகும். இனப்பிரச்சனையாலும் தொடர்ந்து நடைபெறும் யுத்தத்தாலும் இத் துறைகளே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தத்தம் நாடுகளில் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட அங்கத்துவ நாடுகள் இம் மாநாட்டில் பயங்கரவாத ஒழிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க உள்ளன. பயங்கரவாதமும், இனப்பிரச்சனையும் எமது நாட்டில் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளமையால் பயங்கரவாதம் சம்பந்தமாக விவாதிக்கும்வேளை இனப்பிரச்சினையையும் இணைத்து விவாதிப்பது தவிர்க்க முடியாததாகும்.
ஜனாதிபதி அவர்களே! நாட்டின் நிலைமையை கண்ணோக்கும் போது சந்தேகமின்றி சகல இன மக்களும் சொல்லொணா துன்பங்களை அனுபவித்துள்ளனர். நாட்டின் தென்பகுதியில் வாழும், சிங்கள, முஸ்லீம் மக்களின் முன்னேற்றம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழ் முஸ்லீம் மக்களின் முன்னேற்றம் முற்றாக அழிந்து விட்டது என்று கூறக்கூடிய அளவுக்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நடைபெற்ற பல்வேறு இனக்கலவரங்கள் குறிப்பாக கறுப்பு ஜூலை என அழைக்கப்படும் குறிப்பாக 1983 ம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற கலவரம், தமிழ் வர்த்தகர் சமூகத்துக்கும் ஏனையவர்களுக்கும், வெற்றிகரமாக குண்டர்களாலும், காடையர்களாலும் நடத்தப்பட்ட கொள்ளை, தீவைப்பு, கொலை ஆகியவை பெரும் அழிவை ஏற்படுத்தியது. இச் சம்பவம் பெரும் தொகையான தமிழ் மக்களை இந்தியாவி;ன் தமிழ் நாட்டுக்கு இடம் பெயர வைத்தது. வட இலங்கையில் வாழ்ந்த முஸ்லீம் மக்கள் விடுதலைப் புலிகளால் விரட்டப்பட்டபடியால் தமது வாகனங்கள், தங்க ஆபரணங்கள் உட்பட சகல அசையும், அசையா சொத்துக்கள் அத்தனையையும் கைவிட்டு வெளியேறினர். அவர்களில் அனேகர் 15 ஆண்டுகளுக்கு மேல் தென்னிலங்கையில் அகதி முகாம்களில் வாடி வதங்கி இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். தொடர்ந்து நடைபெறும் யுத்தத்தால் அடிக்கடி இடம் பெயர்ந்ததும் பெருமளவில் வெளியேறியதாலும் தம் சொத்துக்களை பெரும் பகுதியை இழந்துள்ளனர். தமக்கு எஞ்சிய சொத்துக்கள் எல்லாவற்றையும் மூட்டையாக கட்டிக் கொண்டு நாடோடிகள் போல் மழை காலத்தில் செய்வதறியாது பெரும் மர நிழல்களை நம்பி வாழ்கின்றார்கள்.
யுத்தம் தொடர்ந்து நடைபெறும் வேளையில் விடுதலைப் புலிகள் பின் வாங்கும் வேளையிலும் கூட இடம் பெயர்வுகளை அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு செல்லவிடாது தடுப்பதால் அவர்கள் அனைவரும் கிளிநொச்சியை நோக்கி நகர்கின்றனர். இது மக்களுக்கு மேலும் மேலும் பல கஷ்டத்தை கொடுப்பதோடு மக்களுக்கு பட்டினி நிலைமையை ஏற்படுத்தும். இந்த நாட்டு ஜனாதிபதி என்ற கோதாவில் மக்கள் அனைவரையும் சமமாக நடத்த வேண்டிய கடமை தங்களுக்கு இருப்பதோடு துன்புறும் மக்களின் துயர் துடைக்க வேண்டிய கடமைப்பாடும் உண்டு. தங்களைத் தவிர இது சம்பந்தமாக வேறு எவரிலும் பார்க்க கூடிய அக்கறை கொள்ள வேண்டியவன் நானே. ஏனெனில் 1970ம் ஆண்டு கிளிநொச்சியையும், 2000ம் ஆண்டு யாழ் மாவட்டத்தையும் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தியவன். கிளிநொச்சி தொகுதியின் ஒரு பகுதியாக இந்த முல்லைத்தீவு தொகுதியின் ஒரு பகுதியை நான் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளேன். இத் தாங்கொணா துயரை மக்களால் மேலும் பொறுத்துக்கொள்ள முடியாது. மேலும் தாமதிக்காது ஒரு தீர்வு உடனடியாக காணப்பட வேண்டும். சார்க் உச்சி மாநாடு என்ற போர்வையில் ஒரு பொன்னான வாய்ப்பினை தவற விடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் பல ஆண்டுகளுக்கு மேலாக இத்தகைய வாய்ப்பு எமக்கு கிட்டாது. நீங்கள் நல்ல உறவு கொண்டுள்ள ஏழு நாடுகளின் தலைவர்களின் உதவியை நாடினால் தங்களை யாரும் குறை கூற முடியாது. இம் மாநாட்டில் கலந்துகொள்ளும் இந்திய குழுவினர் எமது பிரச்சினைகள் பற்றி நன்கு அறிந்தவர்கள். நீண்டகாலமாக இனப்பிரச்சினையில் ஈடுபாடு கொண்டிருந்தமையால் இந்தியா பிரதான பங்காற்றுவது சகல நாட்டுத் தலைவர்கள் அனைவரும் நிச்சயமாக வரவேற்பர். தாங்கள் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நாட்டு மக்களுக்கு விடுக்கும் செய்தியில் சார்க் மாநாட்டு தலைவர்கள் மீது தங்களுக்கு பெரும் நம்பிக்கை இருப்பதால் இனப்பிரச்சினைக்கு அனைவரும் ஏற்கக் கூடிய நல்லதோர் தீர்வை காணும் பொறுப்பு அவர்களிடமே விடுவதாக கூறலாம்.
இந்த நாட்டை நேசிக்கும் சகல மக்களும் எனது இந்த ஆலோசனையை எதிர்க்க மாட்டார்கள் என நான் நம்புகிறேன். எனது ஆலோசனைகள் தங்களுக்கு ஏற்புடையதாயின் சிறுபான்மை மக்களுக்கு ஏற்புடையதாக இருக்குமென்ற நம்பிக்கை எனக்குண்டு. மதத் தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் ஆகியோர்களின் ஆலோசனையை பெறலாம்.
இன்று வேறொரு கடிதத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நிரந்தர யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்துமாறும் ஆயுதத்தை கைவிட்டு இனப்பிரச்சினை தீரும் வரை உபயோகிக்க மாட்டேன் என்ற உறுதி மொழியை, நாட்டுப்பிரிவினை கோரிக்கையை கைவிட்டு ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு காண சம்மதிப்பதாகவும் சார்க் நாடுகளின் தலைமைகளின் மத்தியஸ்த்தையும், அவர்கள் சிபாரிசு செய்யும் தீர்வையும் ஏற்பதாகவும் பிரகடனப்படுத்தும்படி கேட்டுள்ளேன்.
வீ. ஆனந்தசங்கரி
தலைவர்- த.வி.கூ
மேன்மை தங்கிய மஹிந்த ராஜபக்ஷ
இலங்கை ஜனாதிபதி,
அலரி மாளிகை,
கொழும்பு.
அன்புடையீர்,
நாடு தவறமுடியாத பொன்னான வாய்ப்பு