26.12.2008.
மேன்மை தங்கிய ஜனாதிபதி
மகிந்த ராஜபக்ஷ அவர்கட்கு
அலரி மாளிகை
கொழும்பு-03
மேன்மை தங்கிய ஜனாதிபதி
ஆறு வாரங்களுக்கு முன் தங்களை சந்தித்தபின் இரு தடவைகள் யாழ்ப்பாணம் விஜயம் செய்துள்ளேன். முதல் விஜயத்தின் போது நான் பேசிய ஒரு கூட்டத்தில் உள்ளுரில் பிரசுரமாகும் ஓர் பத்திரிகை செய்தியின்படி ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர் மக்களின் பல்வேறு பிரச்சினைகளை கவனிப்பதற்கு யாரும் அங்கில்லை. ஓர் இருவரிடமிருந்து மட்டும் விடயங்களை அறியாமல் பலரிடமிருந்து கேட்டுக்கொள்ள வேண்டுமென விரும்புகின்றேன். யார் மீதும் கசப்புணர்வோடு இதை நான் கூறவில்லை. ஆனால் வட மாகாண விடயங்கள் சம்பந்தமாக இரண்டொருவர் கூறுவதை நீங்கள் எவ்வளவு தூரம் நம்புவீர்கள் என எனக்குத் தெரியாது ஆனால் திருவாளார்கள் சித்தார்த்தன், ஸ்ரீதரன் மற்றும் என்னுடனும் கலந்தாலோசிக்க வேண்டுமா என தீர்மானிக்க வேண்டியது நீங்களே!
இராணுவ சோதனைச்சாவடி
யுhழ்ப்பாண மக்கள் பல விடயங்களில் குழப்பமடைந்து இருப்பதால் அதில் சிலவற்றை நான் குறிப்பிட விரும்புகின்றேன். அவர்களுடைய மிக முக்கியமான கவலை யாதெனில் அநேக இராணுவ சோதனை சாவடிகளுக்கருகில் ஓர் அரசியல் கட்சியினுடைய காரியாலயம் இயங்குவதே. இது தமது நடமாடும் சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதோடு குற்றம் புரிந்தவர்கள் தாம் செய்த குற்றங்களில் இருந்து இலகுவாக தப்புவதற்கு வழியையும் வகுக்கின்றது என்பதை எண்ணி மக்கள் பீதியடைகின்றனர். அங்குமிங்கும் பல காரியாலயங்களை திறக்க வேண்டிய அவசியம் எந்த அரசியல் கட்சிக்கும் இல்லை என்பதோடு இது பொது மக்களுக்கு தொந்தரவு கொடுக்கின்ற விடயமாகும்
பலாத்காரமாக பத்திரிகை விற்பனை
ஒரு பொது முறைப்பாடு என்னவெனில் ஓர் அரசியற் கட்சி தாம் கிழமைதோறும் வெளியிடும் பத்திரிiகையை மக்கள் வாங்க வேண்டும் என வற்புறுத்துவதே. ஒரு குடும்பத் தலைவனோ அல்லது குடும்பத் தலைவியோ வீடு சென்று பார்க்கின்றபோது ஒரே பத்திரிகையின் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பிரதிகள் கட்டாயப்படுத்தி விற்கப்பட்டு ள்ளமையை காண்கின்றார்கள். ஒவ்வொன்றும் 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சோதனைச் சாவடியில் கடமையாற்றும் இராணுவத்தினர் இந்த விடயத்தில் தலையிடுவதில்லை. மக்களுடன் நட்புறவுடனும் பழகுகின்றனர். ஆனால் பயத்தின் நிமித்தம் பொது மக்கள் பத்திரிகையை விருப்பமின்றி வாங்குகின்றனர்.
பாதுகாப்பு அமைச்சி;ன் தடுப்புப்புசட்டம்
சந்தேக நபர்கள் தடுப்புச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்படுவதினால் பல அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர். சிலர் நியாயமற்ற முறையில் தடுத்து வைக்கப்படுகின்றனர். அப்படி யாராவது ஒருவர் இன்னொருவருக்கு குற்றம் புரிவதற்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டால் அப் பேர்வழி குற்றமற்றவராக அல்லது புலிகளுக்கு பயந்து குற்றம் புரிய உதவுபவராகவும் இருக்கின்றார். ஆனால் உண்மையான குற்றவாளி தப்பி விடுகின்றார். தடுப்புச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக எதுவித குற்றமும் புரியாத அப்பாவி மக்களும் குறிப்பாக பெண்களும் தூரதிஷ்டவசமாக தடுத்து வைக்கப்படுகின்றனர். அத்தகையோரை தடுத்து வைப்பதை தவிர்ப்பதன் மூலம் அரசுக்கும் பொது மக்களுக்கும் உள்ள நல்லுறவை பெருமளவு வளர்க்க உதவும் என கருதுகின்றேன்.
காணாமல் போனவர்கள்
கடந்த சில வருடங்களாக பல ஆண்களும், பெண்களும், இளைஞர்களும், முதியோர்களும் இனந் தெரியாதவர்களால் கொலை செய்யப்பட்டும், கடத்தப்பட்டும் உள்ளனர். பொது மக்களில் சிலர் அவ்வாறு கடத்தப்பட்டு இனந்தெரியாதோரால் சட்ட விரோதமாக ஏதோவொரு இடத்தில் தடுத்து வைக்கப்பட்டு;ள்ளார்கள் என்று மக்கள் அறிகின்றார்கள். சிலர் சட்டப்படி அரச அதிகாரிகளால் தடுத்து வைக்கபபட்டுள்ளதாக நினைக்கின்றனர். அவர்கள் அவ்வாறு நினைப்பது சில சந்தர்ப்பத்தில் உண்மையானதாகவும் சில சந்தர்ப்பதத்தில் உண்மைக்கு புறம்பானதாகவும் இருக்கலாம். அவர்களுடைய கவலைக்கும், ஆவலுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதாக இருப்பின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டவர்கள் சம்பந்தமான பெயர் விபரங்களை வெளியிட்டால் மக்கள் நிம்மதியடைவார்கள். பெற்றோர்கள் அறிய விரும்புவதெல்லாம் தமது பிள்ளைகள் உயிருடனும பாதுகாப்புடனும் இருக்கின்றார்கள் என்பதே. ஆகவே தயவு செய்து பெயர் பட்டியலை பத்திரிகை மூலம் அறியத்தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
வன்னியில் விடுதலைப் புலிகளிடமிருந்து தப்பி வந்த மக்கள்
அரசுக்கு நற்பெயரை ஏற்படுத்தக் கூடிய இ;ன்னுமொரு விடயம் என்னவெனில் மக்கள் விடுதலைப் புலிகளிடமிருந்து தப்பி அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருகின்றார்கள். அவர்களை தடுத்து வைக்கவோ அல்லது தொந்தரவுபடுத்தப்பட மாட்டார்கள் என்றோ அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதே. தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் வருகின்றவர்களை அரச படைகள் தடுத்து வைத்தும், தொந்தரவு படுத்தியும் வருகின்றார்கள் என்ற பொய்யான பிரச்சாரத்தை விடுதலைப் புலிகள் வன்னியில் இருந்து மேற்கொள்வதாக நம்பிக்கையான வட்டாரங்களில் இருந்து செய்திகள் தெரிவி;க்கின்றன. விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருக்கின்றவர்கள் என்ற சந்தேகப்படுகின்றவர்களை கூட புலிகளிடம் தப்பி வந்தவர்கள் என்று கருதி நிபந்தனையுடன் பெற்றோர்களிடம் கையளிக்கப்படலாம். அவ்வாறு புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து தப்பி வருபவர்கள் தடுத்து வைக்கப்படுபவர்களேயானல் மக்கள் புலிகளிடமிருந்து தப்பி வர தயங்குவர் எனவே அரசு இது சம்பந்தமான ஒரு தெளிவான அறிக்கை மூலம் தெரியப்படுத்த வேண்டும்.
யாழ்ப்பாண பகுதியில் மீன்பிடித் தொழில்
யாழ்பப்பாணத்தில் ட்ரோலர் படகு மூலம் மீன்பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது பல்வேறு மீன்பிடி சங்கங்களும் சமாஜம் ட்ரோலர் மூலம் கிழமையில் மூன்று நாட்கள் மட்டும் ஒப்புக் கொண்டமையால் ட்ரோலர் மூலம் மீன் பிடிப்பதை தொழிலாளர்கள் எதிர்ப்பதில்லை என நான் அறிகிறேன். எஞ்சியுள்ள நான்கு நாட்கள் சிறு தொழில் செய்பவர்களுக்கு விட்டுக் கொடுத்து செயல்படுவதாக ஒப்புக் கொணடனர். இதே போன்ற ஒழுங்கைதான் ட்ரோலர் மூலம் தொழில் செய்யும் இந்திய தொழிலாளர்களும் சிறு தொழிலாளர்களும் செயல்படுத்துகின்றனர். இந்த முறையை கடைபிடிப்பதால் இலங்கை கடற் படையினரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்காதென நான் நம்புகிறேன். ஆகவே கடற்படையினரின் ஆலோ சனைகளை பெற்று இம் முறைமையை கடைபிடிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கின்றோம். இத்;;தகைய வேண்டுகோளுக்கு சாதகமாக செவிசாய்பீhகளாக இருந்தால் அது பல துன்பங்கள் மத்தியில் வாழும் மக்களுக்கு வரப்பிரசாதமாக அமையுமென கருதுகின்றேன்.
வீ. ஆனந்தசங்கரி
தலைவர்-த.வி.கூ
மேன்மை தங்கிய ஜனாதிபதி
மகிந்த ராஜபக்ஷ அவர்கட்கு
அலரி மாளிகை
கொழும்பு-03
மேன்மை தங்கிய ஜனாதிபதி
உடன் கவனிக்க வேண்டிய யாழ் மாவட்ட பிரச்சினைகள்