DRINKING WATER FROM IRANAIMADU TO JAFFNA WILL RUIN PADDY CULTIVATION IN KILINOCHCHI



His Excellency Mahinda Rajapaksa 2010-10-11
President of Sri Lanka
Temple Trees
Colombo – 03

DRINKING WATER FROM IRANAIMADU TO JAFFNA WILL RUIN PADDY CULTIVATION IN KILINOCHCHI

Your Excellency,

The paddy cultivators of Kilinochchi, predominantly colonists, are highly perturbed over the Government taking steps to tap Iranaimadu water for drinking purposes in to the Jaffna District and Poonakari area. I strongly urge that you should suspend work on this project and before taking a decision have this matter fully discussed, with the concerned parties and experts. Being fully aware of the situation, I have a duty to advice you on this matter. I recollect those days in the sixties how we fought hard for increased water rights for the colonists. I am strongly of the view that this move will completely ruin paddy cultivation in areas that are fed from the Iranaimadu Tank and the country will face many more problems. Eighty percent of the people of Kilinochchi depend on paddy cultivation and majority of them come under Iranaimadu Tank. Over 30,000 acres are cultivated under Iranaimadu during Maha Season and it so happens that at the tail end of their cultivation if the rains fail it is the Iranaimadu that saves the crops, by giving the crops a couple of feeds to help the crops to mature before harvesting. During the Yala (serupokem) cultivation of paddy is restricted to a certain area with limited acres for cultivation and the land owners could transfer their water rights to cultivate in another’s land. This is how the cultivation under Iranaimadu Tank takes place. You can very well understand the situation. At times the tank goes dry. When the crops die for want water, you will have to decide whether to look after the people or to save the crops. Please accept this as an ill-conceived plan that needs reconsideration.

If Your Excellency want to see the Jaffna Peninsula flourish, please implement the Jaffna Lagoon scheme of the late Arunachalam Mahadeva who mooted it in 1947. Constructing three regulators, one at Chundikulam and two others at Thondaimanaru and Navatkuli respectively. Cut a channel to link the Elephantpass lagoon with the Vadamarachchi lagoon, a distance of four to five miles. This scheme was abandoned due to short of funds. The amount required is just the cost of cutting the channel.

This scheme works thus. The three regulators will be kept closed during the rainy season. The excess water discharged from the Iranaimadu Tank falls into the Elephant pass lagoon and through the channel reaches the Vadamarachchi lagoon and spreads all over the Jaffna Peninsula and when the flow is towards the sea the regulators are opened to let the water fall into the sea at all these three points. If this process is repeated for a period of eight to ten years, all lands in the peninsula that lay baron could be reclaimed as fit for cultivation and the salinity of the water also will change into pure drinking water. Thus entire peninsula will be suitable for cultivation, the wells too will get recharged. As a layman this is how I understand the scheme. To complete this scheme you need only a small sum only to cut the channel of about 5 miles and to construct the dam or anicut at Chundikulam. The other two are either completed or in the process of getting completed.

This was revised by late Mr. S. Arumugam Senior Deputy Director of Irrigation, Who named it as “A river for Jaffna”. Mr. D.L.O. Mendis who worked with Mr. Arumugam is now the best authority to advice the Government on this matter. Please drop the idea of taking water from Iranimadu and implement Mr. Arumugam’s proposal in consultation with the experts including Mr. Mendis.


Thanking You
Yours Sincerely,



V. Anandasangaree,
President
Tamil United Liberation front

இரணைமடு குளத்தில் இருந்து யாழ் மாவட்டத்திற்கு குடிநீர் விநியோகிப்பதால் கிளிநொச்சியில் நெற்ச்செய்கை கடுமையகப் பாதிக்கப்படும்

அதி உத்தம மகிந்த ராஜபக்ஷா 2010-10-11
இலங்கை ஜனாதிபதி
அலரி மாளிகை
கொழும்பு.

இரணைமடு குளத்தில் இருந்து யாழ் மாவட்டத்திற்கு குடிநீர் விநியோகிப்பதால் கிளிநொச்சியில் நெற்ச்செய்கை கடுமையகப் பாதிக்கப்படும்

அன்புடையீர்

கிளிநொச்சியில் நெல் செய்கையாளர்களில் அநேகர் குடியேற்றவாசிகளே. யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் பூநகரி பகுதிக்கும் இரணைமடு குளத்தில் இருந்து குடிநீர் விநியோகத்திற்கு அரசாங்கம் எடுத்துள்ள முயற்ச்சிஇ அம் மக்களை பெரும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. தாங்கள் இத்திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி இறுதி முடிவு எடுப்பதற்கு முன்னர் இப்பிரச்சனையுடன் சம்பந்தப்பட்டவர்களுடனும்இ இவ்விடயத்தில் நிபுணத்துவம் மிக்கவர்களுடனும் கலந்தாலோசிக்க வேண்டுகின்றேன். இதன் தார்ப்பரியத்தை நன்கு உணர்ந்தவர் என்ற காரணத்தால் இவ்விடயத்தில் நான் ஆலோசனை வழங்கக் கடமைப்பட்டுள்ளேன். அறுபதாம் ஆண்டு காலப்பகுதிகளில் குடியேற்றவாசிகளுக்கு கூடுதலான அளவு தண்ணீர் கொடுக்க வேண்டும் என அவர்களுடன் இணைந்து போராடியதை நான் நினைத்துப்பார்க்கின்றேன். இரணைமடுக்குளத்தால் நீர்ப்பாசனத்தை அனுபவிக்கின்ற பகுதிகளில் நெற்செய்கை முற்று முழுதாக பாதிக்கப்படும் என்று நம்புகின்றேன். அதன் பயனாக நாடு பல பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டி ஏற்படும். கிளிநெச்சியின் 80%மேற்பட்ட மக்கள் நெற்செய்கையில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் பெரும்பான்மையினர் இரணைமடு குளத்து நீரையே நம்பியுள்ளனர். இரணைமடு குளத்தின் கீழ் 30,000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகின்றது. பல சந்தர்ப்பங்களில் அறுவடைக்கு முன்னர் இரண்டு அல்லது மூன்று தடவை நீர்ப்பாசனம் செய்தே பயிரை மீட்டெடுத்துஇ அறுவடை செய்ய வேண்டிய நிலை. போதிய மழை இன்மையினால் இப்படியான நிலை ஏற்படுவதுண்டு. சிறு போக வேளாண்மை காலத்தில் பயிர் செய்யப்பட வேண்டிய இடமும் பரப்பும் வரையறுக்கப்பட்டு அதற்கு அப்பால் உள்ளவர்களுக்கும் இக்காணிகளில் விதைப்பதற்கு உரிமையும் வழங்கப்படும். இரணைமடு நீர் விநியோக பகுதிகளில் விவசாயப் பணிகள் இவ்வாறே இடம்பெறுகின்றன. இந்நிலையை சரியாக விளங்கிக் கொள்ளுவீர்கள் என நம்புகின்றேன். சில சந்தர்ப்பங்களில் குளத்து நீர் முற்றாக வற்றிப் போவதும் உண்டு. அவ்வாறான சந்தர்ப்பங்களில் இந்நீரையே நம்பியுள்ள பயிரைக் காப்பாற்றுவதா அல்லது வேறு தூரப்ப பிரதேசங்களில் உள்ள மக்களின் குடி நீர் தேவையை நிறைவேற்ற நீரை விநியோகிப்பதா என உங்களுக்கு தடுமாற்றம் ஏற்படும். இதை ஒரு முன்யோசனையின்றி உருவாக்கப்பட்ட திட்டமாக கருதி மீள் பரிசீலனை செய்யும்படி கேட்டுக் கொள்ளுகின்றேன்.

ஜனாதிபதி அவர்களே யாழ் குடாநாடு செழிப்புற வேண்டும்மென நீங்கள் நினைத்தால் காலம் சென்ற கௌரவ அருணாசலம் மகாதேவா அவர்களினால் 1947ம் ஆண்டு முன்வைக்கப்பட்ட யாழ்ப்பாண களப்புத்திட்டத்தை (Jaffna Lagoon Scheme) அமுல்படுத்துங்கள். இத்திட்டத்தை செயல்படுத்த சுண்டிக்குளத்தில் ஒர் நீர் தடுப்பணையையும் தொண்டமனாறு மற்றும் நாவற்குழி ஆகிய இடங்களில் இரு தடுப்பணையையும் அமைப்பதுடன் ஆனையிறவு களப்பையும் வடமறாச்சி களப்பையும் இணைக்கும்மாறு 4-5 மைல் நீளமான கால்வாய் ஒன்றும் வெட்டப்பட வேண்டும். இத்திட்டத்தை நிறைவேற்ற போதிய நிதியின்மையால் கைவிடப்பட்டது. இத்திட்டத்திற்கு பிரதானமாகத் தேவைப்படுவது அக்கால்வாய் அமைக்க செலவிடப்படும் தொகையே. இத்திட்டம் செயற்படுத்தப்படும் முறையாக இம் மூன்று நீரை கட்டுப்படுத்தும் அணைகள் மழைகாலத்தில் பூட்டப்பட்டிருக்கும். இரணைமடுக் குளத்தில் இருந்து நிரம்பி வழியும் நீர் ஆனையிறவு களப்பை அடைந்து வடமறாச்சி களப்பு ஊடாக ஏனைய பகுதிகளிலும் பரவி நிற்கும். குடாநாட்டில் இருந்து நீர் கடலை நோக்கி செல்லும் போது நீரணையின் கதவுகள் திறக்கப்பட்டு மேலதிக நீர் இம்மூன்ற இடங்களினாலும் வெளியேறிச் செல்லும். இவ்வழியை மீண்டும் மீண்டும் 8 - 10 வருடங்களுக்கு தொடர்ந்து செயல்படுத்தினால் பிரயோசனமற்றுள்ள பிரதேசங்கள் வளம் பெறுவதுடன் உப்பு நீர் உள்ள கிணறுகளும் நன்னீராக வாய்ப்புள்ளது. இது நிபுணர்களின் கருத்தேயன்றி எனது கருத்தல்ல. அவ்வாறே குடாநாட்டு பிரதேசம் முழுவதையும் கமச் செய்கைக்கு பிரயோசனப்படுத்துவதோடு கிணறுகளிலும் நன்னீரைப் பெறலாம். ஒரு சாதாரண மனிதனாக என்னால் விளங்கிக் கொள்ளக் கூடியது இவ்வளவுதான். இத்திட்டத்தை பூர்த்தியாக்க கொஞ்சப்பணமே தேவைப்படும். இதற்காக 5 மைல் நீளமான கால்வாய் வெட்டவும் சுண்டிக்குளத்தில் ஒரு தடுப்பணை கட்டவும்மே செலவாகும். ஏனைய இரண்டு இடங்களில் ஒன்று பூர்த்தியாகியும் மற்றொன்று பூர்த்தியாகும் நிலையிலுமே உள்ளன.

இத்திட்டம் நீர்ப்பாசன திணைக்களத்தில் சிரேஸ்ட்ட பதில் பணிப்பளராக கடமையாற்றியவரால் யாழ்ப்பாணத்துக்கு ஒரு ஆறு என்ற பெயரில் வெளியிடப்பட்டது. அவரே காலஞ்சென்ற திரு. S. ஆறுமுகம். இன்று இத்திட்டத்தை அமுல்ப்படுத்த வேண்டிய நிபுணத்துவத்தை அறிந்துள்ளவர் திரு ஆறுமுகத்துடன் பணியாற்றிய திரு D.L.O. மென்டிஸ் ஆவார். தயவு செய்து இரணைமடுவில் இருந்து குடிநீர் பெறும் திட்டத்தை நிறுத்தி ஆறுமுகம் அவர்களின் திட்டத்தை மென்டிஸ் அவர்களுடனும் ஏனைய நிபுணர்களுடனும் கலந்தாலோசித்து பரீசீலிக்கவும்.


வீ. ஆனந்தசங்கரி
தலைவர்
தமிழர் விடுதலைக் கூட்டணி

ஊடகச் செய்தி


ஊடகச் செய்தி



தமிழர் விடுதலைக் கூட்டணியின் கிளிநொச்சி மாவட்டத் தலைமைச் செயலகம் 02.10.2010 மாலை 4.00மணிக்கு தந்தை செல்வாவின் புதல்வர் செல்வநாயகம் சந்திரகாசன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வின்போது பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர். தலைவர் வீ.ஆனந்தசங்கரியின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்தும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. கிருஷ்ணபிள்ளை (வெள்ளிமலை) உதய சூரியன் கொடியினை ஏற்றி வைத்தார். பின்னர் தந்தை செல்வாவின் திருவுருவச் சிலையினை மட்டக்களப்பைச் சேர்ந்த திரு மருதநாயகம் அவர்கள் திரை நீக்கம் செய்து வைத்தார். பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் கிளிநொச்சி மாவட்டத் தலைமைச் செயலகத்தை திரு செல்வநாயகம் சந்திரகாசன் அவர்கள் நாடா வெட்டி சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்தார். இந்நிகழ்வில் உரையாற்றிய பலரும் கட்சியின் முக்கிய பொறுப்பை சந்திரகாசன் அவர்கள் ஏற்கவேண்டும் என கேட்டுக்கொண்டனர்.


தலைவர் வீ.ஆனந்தசங்கரி அவர்கள் சந்திரகாசன் அவர்களை கட்சியின் முக்கிய பொறுப்பை ஏற்கவேண்டும் என கேட்டுக்கொண்டதோடு சகல தமிழ்க் கட்சிகளும் ஒரு அமைப்பின் கீழ் இணைந்து செயற்பட வேண்டிய தருணம் இது எனக் குறிப்பட்டார். சகல தமிழ்க்கட்சிகளும் குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சேர்ந்து ஒரே அமைப்பாக இயங்க முன்வரவேண்டும் எனவும், அதற்குத் தடையாக எனது கட்சியின் தலைமைப்பதவி இருக்கும் என எவராவது கருதினால் நான் எனது தலைவர் பதவியையும் இராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன் எனவும் கூறினார். எனவே மக்களின் நலன் கருதி தான் எந்த தியாகத்தையும், செய்தாவது தமிழ்க்கட்சிகளின் ஒன்றிணைவிற்கு ஒத்தாசை நல்குவேன் எனவும் குறிப்பிட்டார்.



எல்லாவற்றிற்கும் பதிலளிக்கும் முகமாக இறுதியாக உரையாற்ற வந்த திரு. செல்வநாயகம் சந்திரகாசன் அவர்கள் தான் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆயுட்கால உறுப்பினர் எனவும் எந்த சந்தர்ப்பத்திலும் வேறு கட்சிக்குப் போகவேண்டிய அவசியமில்லை எனவும் சரியான நேரத்தில் நான் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து முழுநேர அரசியலில் ஈடுபடுவேன் எனவும் உறுதிபடக்கூறினார். தற்போது தமிழகத்தில் தங்கியிருக்கும் எமது உறவுகளின் நலன்களில் முழுநேரமும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற படியால் நேரமின்மையே இதற்குக் காரணம் எனவும் கூறினார். அதுவரை தமிழர் விடுதலைக் கூட்டணியை வழி நடத்த வேண்டிய பொறுப்பு திரு ஆனந்தசங்கரிக்கு உண்டு எனவும் ஏனைய மத, இன தலைவர்களாலும், சர்வதேச தலைவர்களாலும் நன்கு மதிக்கப்படுகின்ற தலைவர் ஆனந்தசங்கரி எனவும், இவ்வாறான தலைவர்தான் இப்போதைய சூழ்நிலையில் மக்களுக்குத் தேவை எனவும் குறிப்பிட்டார். ஏனோ தொரியவில்லை நல்ல தலைவர்களைத்தான் அடுத்தவர்கள் குறை கூறிக்கொண்டிருக்கிறார்கள் எனவும் மக்களும் அதை எளிதில் நம்பி மோசம் போய்விடுகிறார்கள் எனவும் இந் நிலை மாறி நல்லவர்களை நம்பி பொறுப்பை ஒப்படைக்க மக்கள் முன்வர வேண்டும், எனவும் விசனத்துடன் குறிப்பிட்டார். ஒரு அப்பழுக்கற்ற அரசியல்வாதி திரு வீ.ஆனந்தசங்கரி என அவர் மேலும் தனது உரையில் சுட்டிக்காட்டினார். இறுதியாக திரு ஏகாம்பரம் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வு முடிவிற்கு வந்தது.


ஊடகச் செயலாளர் - த.கஜன்