ஊடகச் செய்தி
தமிழர் விடுதலைக் கூட்டணியின் கிளிநொச்சி மாவட்டத் தலைமைச் செயலகம் 02.10.2010 மாலை 4.00மணிக்கு தந்தை செல்வாவின் புதல்வர் செல்வநாயகம் சந்திரகாசன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வின்போது பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர். தலைவர் வீ.ஆனந்தசங்கரியின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்தும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. கிருஷ்ணபிள்ளை (வெள்ளிமலை) உதய சூரியன் கொடியினை ஏற்றி வைத்தார். பின்னர் தந்தை செல்வாவின் திருவுருவச் சிலையினை மட்டக்களப்பைச் சேர்ந்த திரு மருதநாயகம் அவர்கள் திரை நீக்கம் செய்து வைத்தார். பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் கிளிநொச்சி மாவட்டத் தலைமைச் செயலகத்தை திரு செல்வநாயகம் சந்திரகாசன் அவர்கள் நாடா வெட்டி சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்தார். இந்நிகழ்வில் உரையாற்றிய பலரும் கட்சியின் முக்கிய பொறுப்பை சந்திரகாசன் அவர்கள் ஏற்கவேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
தலைவர் வீ.ஆனந்தசங்கரி அவர்கள் சந்திரகாசன் அவர்களை கட்சியின் முக்கிய பொறுப்பை ஏற்கவேண்டும் என கேட்டுக்கொண்டதோடு சகல தமிழ்க் கட்சிகளும் ஒரு அமைப்பின் கீழ் இணைந்து செயற்பட வேண்டிய தருணம் இது எனக் குறிப்பட்டார். சகல தமிழ்க்கட்சிகளும் குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சேர்ந்து ஒரே அமைப்பாக இயங்க முன்வரவேண்டும் எனவும், அதற்குத் தடையாக எனது கட்சியின் தலைமைப்பதவி இருக்கும் என எவராவது கருதினால் நான் எனது தலைவர் பதவியையும் இராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன் எனவும் கூறினார். எனவே மக்களின் நலன் கருதி தான் எந்த தியாகத்தையும், செய்தாவது தமிழ்க்கட்சிகளின் ஒன்றிணைவிற்கு ஒத்தாசை நல்குவேன் எனவும் குறிப்பிட்டார்.
எல்லாவற்றிற்கும் பதிலளிக்கும் முகமாக இறுதியாக உரையாற்ற வந்த திரு. செல்வநாயகம் சந்திரகாசன் அவர்கள் தான் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆயுட்கால உறுப்பினர் எனவும் எந்த சந்தர்ப்பத்திலும் வேறு கட்சிக்குப் போகவேண்டிய அவசியமில்லை எனவும் சரியான நேரத்தில் நான் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து முழுநேர அரசியலில் ஈடுபடுவேன் எனவும் உறுதிபடக்கூறினார். தற்போது தமிழகத்தில் தங்கியிருக்கும் எமது உறவுகளின் நலன்களில் முழுநேரமும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற படியால் நேரமின்மையே இதற்குக் காரணம் எனவும் கூறினார். அதுவரை தமிழர் விடுதலைக் கூட்டணியை வழி நடத்த வேண்டிய பொறுப்பு திரு ஆனந்தசங்கரிக்கு உண்டு எனவும் ஏனைய மத, இன தலைவர்களாலும், சர்வதேச தலைவர்களாலும் நன்கு மதிக்கப்படுகின்ற தலைவர் ஆனந்தசங்கரி எனவும், இவ்வாறான தலைவர்தான் இப்போதைய சூழ்நிலையில் மக்களுக்குத் தேவை எனவும் குறிப்பிட்டார். ஏனோ தொரியவில்லை நல்ல தலைவர்களைத்தான் அடுத்தவர்கள் குறை கூறிக்கொண்டிருக்கிறார்கள் எனவும் மக்களும் அதை எளிதில் நம்பி மோசம் போய்விடுகிறார்கள் எனவும் இந் நிலை மாறி நல்லவர்களை நம்பி பொறுப்பை ஒப்படைக்க மக்கள் முன்வர வேண்டும், எனவும் விசனத்துடன் குறிப்பிட்டார். ஒரு அப்பழுக்கற்ற அரசியல்வாதி திரு வீ.ஆனந்தசங்கரி என அவர் மேலும் தனது உரையில் சுட்டிக்காட்டினார். இறுதியாக திரு ஏகாம்பரம் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வு முடிவிற்கு வந்தது.
ஊடகச் செயலாளர் - த.கஜன்