கண்ணியமிக்க தமிழ்நாட்டு அரசியல்வாதியும் முன்னாள் தமிழ்நாட்டு சட்டசபையின் சபாநாயகருமான பெரும் மதிப்புக்குரிய இராஜாராம் அவர்களின் திடீர் மரணச் செய்தி மிக்க வேதனை தருகிறது. கண்ணியமான அரசியல்வாதியாக செயற்பட்ட அமரர் இராஜாராம் அவர்கள் தன்னிடம் உதவி நாடி வந்த அனைவருக்கும் தன்னால் ஆன சேவையை மறுக்கவேயில்லை. அவர் ஓர் சிறந்த தேசபக்தரும் ஆவார்.
அன்னாருக்கும் எனக்கும் ஏற்பட்ட உறவு 30 ஆண்டுகளுக்கு மேலானதாகும். 1976ம் ஆண்டு பிற்பகுதியில் இலங்கையில் தலைசிறந்த சட்ட வல்லுனரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகத் தலைவருமாகிய காலம் சென்ற ஜீ.ஜீ.பொன்னம்பலம் கீ.ய+.சி அவர்களை தற்போதைய தமிழ்நாட்டு முதலமைச்சர் டாக்டர் கலைஞர் மு.க.கருணாநிதி அவர்களின் அன்றைய அரசு 1976ல் கலைக்கப்பட்ட வேளை அவரின் வழக்கில் ஆஜராகி அவரை அழைத்து வந்த வேளை ஏற்பட்ட உறவாகும். கௌரவ ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்களின் நிகழ்ச்சிகளுக்கு பொறுப்பாயிருந்து செயற்பட்டவர் மதிப்புக்குரிய இராஜாராம் அவர்களாகும்.
வழக்கு வெற்றிகரமாக முடிந்த பின் நாடு திரும்பி அமரர் எஸ்.ஜே.வி செல்வநாயகம் கிய+.சி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் அமரர் எஸ். தொண்டமான் ஆகியோருடன் இணைந்து தமிழ்ர் விடுதலைக் கூட்டனி தலைமை பதவியை திரு ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவர்கள் ஏற்க இருந்தார்கள். பின் துர்திஸ்டவசமாக சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு சென்ற அமரர் அவர்களின் பூதவுடலையே நாம் கொழும்பிலிருந்து வரவேற்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது.
அமரர் இராஜாராம் அவர்களை 1980ம் ஆண்டு ஸம்பியாவின் தலைநகரான லுசாக்காவில் மீண்டும் சந்திக்கும் அரியவாய்ப்பு கிடைத்தது. தமிழ்நாட்டு சட்டசபை சபாநாயகராக அவரும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரான நானும் பொது நல அரசுகளின் வருடாந்த மாநாட்டில் கலந்து கொள்ள சென்றிருந்தோம். அங்கே வாழ்ந்த தமிழ் அன்பர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மகாவி சுப்பிரமணியம பாரதியார் அவர்களின் நூற்றாண்டு விழாவில் இருவரும் கலந்து கொண்டோம். நாடு திரும்பும் வழியில் அன்னார் இலங்கை;கு வருகை தந்து வவுனியாவில் நடைபெற்ற பண்டாரவன்னியன் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
1983ம் ஆண்டு தொடக்கம் 1989ம் ஆண்டு வரை நான் சென்னையில் தங்கியிருந் போது அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பையும் பிரச்சார கூட்டங்கள் பலதரப்பட்ட நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றிருந்தேன்.தமிழர் விடுதலைக் கூட்டனி தலைவர்கள் அமரர்கள் அ.அமிர்தலிங்கம் தலைவர்.மு.சிவசிதம்பரம் மேலும் இரா.சம்பந்தன் போன்ற அனைவருடனும் நெருங்கிய உறவு கொண்டிருந்தார். பொதுவாக அவர் இலங்கை தமிழ் மக்கள் தலைவர்கள் ஆகியோர் மீது மிகவும் அன்புடனும் அன்பும் பற்றும் கொண்டிருந்தார்.அனைவருக்கும் அளப்பரிய சேவை செய்தார்.மொத்தத்தில் அவர் ஓர் மறக்கமுடியாத பெரும் மனிதர்.
அன்னாரின் பிரிவைத் தாங்காது துயறுரும் உற்றார் உறவினர்களுக்கும் தொகுதி மக்கள் தமிழ் நாட்டு மக்கள் அனைவருக்கும் தமிழர் விடுதலைக் கூட்டனி சார்பாகவும் என் சார்பாகவும் எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கிறேன். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றோம்.
தலைவர்
வீ ஆனந்தசங்கரி
தமிழர் விடுதலை கூட்டணி