ஊடகச் செய்தி

கோப்பாயில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் ‘மாவீரர் துயிலுமில்லத்தை’ இடித்தழிக்கும் நடவடிக்கைகளில் படையினர் ஈடுபட்டிருப்பதால் அப்பகுதியில் தற்காலிகமாக தங்கியுள்ள குடும்பங்களை உடனடியாக வெளியேறுமாறு படையினர் கோரியுள்ளனர்.

உயர்பாதுகாப்பு வலயமான வலிகாமம் குரும்பசிட்டி தெற்கிலிருந்து இடம்பெயர்ந்த இவர்கள்இ 1994ம் மாதம் இடம்பெற்ற இடப்பெயர்வின் போது வன்னிக்குச் சென்று கிளிநொச்சி அக்கராயன் குளத்தில் வசித்து வந்தனர். கடந்த வருடம் வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரில் குடும்பத் தலைவர்களை இழந்த நிலையில் வவுனியா அகதி முகாமிலிருந்து விட்டு தற்போது யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் கூடாரங்கள் அமைத்து இவர்கள் வசித்து வருகின்றனர்.

இவர்களின் நிலை குறித்து அறிவதற்காக இன்று பிற்பகல் தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ்.மாநகரசபை உறுப்பினர் இரா.சங்கையாஇ அதன் ஊடகச் செயலாளர் த.கஜன் ஆகியோர் உள்ளிட்ட குழுவினர் அப்பகுதிக்குச் சென்று அம்மக்களைப் பார்வையிட்டுஇ அவர்களின் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தனர்.

தாங்கள் மிகவும் வறியநிலையில் வாழ்வதாகவும் தங்களுக்கான நிவாரண உதவிகள் கூட மூன்று மாதங்களாக நிறுத்தப்பட்டு விட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். தங்களின் சொந்தக் காணிகள் உயர்பாதுகாப்பு வலயத்துள் இருப்பதால் அங்கு செல்ல முடியாமலிருப்பதாகவும்இ தங்களுக்கு தங்கியிருப்பதற்கான மாற்று இடங்களும் காட்டப்படாத நிலையில் எங்கு செல்வதென தெரியாத நிலையிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இம்மக்களின் பிரச்சினைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூட்டணியினர் அம்மக்களிடம் தெரிவித்தனர். .இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட ஊடக அறிக்கை.




ஊடகச் செய்தி 2010-07-12

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல பகுதியில்
தற்காலிகமாக தங்கியுள்ள மக்களை வெளியேற்றப் பணிப்பு

மேற்படி செய்தி இன்று ஊடகங்களில் வெளியாகியுள்ளதை பார்த்த பொழுது எமக்கு அதிர்ச்சியாக உள்ளது. எமது தமிழ் மக்களுக்கு எந்த இடம்தான் நிரந்தரமானது என்று எவராலும் உறுதிப்படுத்த முடியாதுள்ளதை எண்ணும் போது வேதனைப்படுவதை தவிர வேறு என்னதான் செய்யமுடியும்? வலிகாமம் உயர் பாதுகாப்பு வலயத்தைச் சேர்ந்த இந்த மக்களுக்கு இதுவரை எந்த ஒரு ஏற்பாடும் செய்யாமல் அவர்களை வெளியேறச் சொன்னால் அவர்கள் எங்கே போவார்கள் என்பதனை யாராவது சிந்தித்திருக்கின்றார்களா? இவர்களுக்கான மாற்று ஏற்பாடுகள் செய்யாமல் அவர்களை வெளியேற்றுவதை தமிழர் விடுதலைக் கூட்டணி வன்மையாக கண்டிக்கின்றது.

அத்துடன் வன்னிப் பெருநிலப்பரப்பில் இருந்து எமது உறவுகள் படுகொலை செய்யப்பட்டும்இ அநாதைகள் ஆக்கப்பட்டும்இ அந்த மண்ணை விட்டே வெளியேற்றப்பட்ட போது கூட வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டு பாராளுமன்ற பதவியின் இறுதி நாள் சம்பளம் வரை வாங்கிய எமது தமிழ் தலைவர்களுக்கு இது ஒரு பெரிய விடயமாக இருக்கப் போவதில்லை என்பது எமக்குத் தெரியும். ஏனைய அமைப்புக்கள்தான் இதனைத் தட்டிக் கேட்கவேண்டும். எனவே இந்த விடயத்தில் கருணை உள்ளம் கொண்ட அமைப்புக்கள்தான் சரியான முடிவினை எடுப்பதற்கு சம்பந்தப்பட்டவர்களுக்கு இடித்துரைக்க வேண்டும். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் எம்மக்களுக்கு இன்னல்கள் ஏற்பட்ட போதேல்லாம் கைகட்டிக்கொண்டு வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களைத்தான் எமது மக்கள் மீண்டும் பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைத்தார்கள். அதுதான் எமது மக்களின் சாபக்கேடு. எது எவ்வாறாயினும் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுக்க நாம் தயாராகவே உள்ளோம். சம்பந்தப்பட்டவர்களுடன் இது பற்றி விவாதித்து நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம்.