வழிபாட்டுத்தலத்தில் நடந்த தற்கொலைக் குண்டு தாக்குதலை தமிழர் விடுதலைக் கூட்டணி கண்டிக்கின்றது
தேசிய மீலாத் விழாவில் பங்கு பற்ற ஊர்வலமாக அழைத்துசெல்லப்பட்ட பிரதம விருந்தினரையும் ஏனைய விருந்தினர்களையும் தாக்கி 14 பேரை பலி எடுத்தும் 40 பேரை கடும் காயத்திற்கும் உள்ளாக்கிய சம்பவத்தை தமிழர் விடுதலைக் கூட்டணி வன்மையாகக் கண்டிக்கின்றது. தமது இரத்த வெறியை விடுதலைப் புலியினர் மேலும் ஒரு சம்பவத்தில் காட்டியுள்ளனர். மிகவும் விரக்தியடைந்த நிலையில் தமது கொடூரத்தை வெளிப்படுத்த கிடைக்கக்கூடிய சந்தர்ப்பம் ஒன்றைத்தன்னும் நழுவ விட அவர்கள் தயார் இல்லை. தினம் தினம் தமது செல்வாக்கை இழந்து கொண்டு போகும் விடுதலைப் புலிகள் மீது சர்வதேச சமூகமும் அவர்கள் மீதுள்ள நல்ல எண்ணத்தை மாற்றி வருகின்றனர். சர்வதேச சமூகத்தின் மத்தியில் அவர்களுக்கு இருந்த அற்ப சொற்ப ஆதரவு கூட தற்போது அடிமட்டத்திற்கு போயுள்ளது. அரசியல் இன,மத பேதங்களை மறந்து விடுதலைப் புலிகளை பூண்டோடு ஒழிக்க இந்த சந்தர்ப்பத்தில் அனைவரும் ஒற்றுமைப்பட வேண்டும். வேற்றுமைகளை மறந்து இதை ஒரு குறிக்கோளாகக் கொண்டு செயற்படவேண்டும்.
இச்சம்பவம் மேலும் ஓர் இனக் கலவரத்தைத் தூண்ட விடுதலைப் புலிகள் எடுக்கும் முயற்சியாகும். இந்த சந்தர்ப்பத்தில் மட்டுமல்ல எதிர்காலத்திலும் இத்தகைய முயற்சிகளில் அவர்கள் தோல்வியே அடைவர். இஸ்லாமிய சகோதரர்களுக்கு நான் விசேட செய்தியைவிட விரும்புகின்றேன். சிங்கள சகோதரர்களிடம் இருந்து நாம் கற்கணே;டிய விடயங்கள் உண்டு. மனிதன் பொறுமையின் விளிம்பை தாண்டி, இவர்களுடைய நடவடிக்கைகள் அத்தனையும் கோபத்தை தூண்டுவதாகவே அமைகின்றன. இருப்பினும் நாம் பொறுமையை கடைப்பிடித்து, அவர்களின் சூழ்ச்சிக்கு பலியாகாமல் இருத்தல் வேண்டும்.
பெறுமதி மிக்க பல உயிர்களை பலி கொடுத்தவர்களுக்கும், காயப்பட்டோரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றேன். சிறிலங்கா சுதந்திர கட்சி, இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றைச் சேர்ந்த பல உள்ளுராட்சி மன்றங்களில் மக்களை பிரதிநிதித்துவப்படுத்திய முற்போக்கு இளைஞர்கள் இறந்தும், காயப்பட்டும் உள்ளனர். அவர்களின் உற்றார் உறவினர்களுக்கும் அவர்களை மிக அன்பாக நேசித்த மக்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். படுகாயமுற்ற பொதுமக்களும், அரசியல் கட்சி அங்கத்தவர்களும், கௌரவ அமைச்சர் மகிந்த விஜயசேகர அவர்களும் விரைவில் குணமடைய வேண்டுமென இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
நான் மிக்க மரியாதை கொடுக்கும் இவ் ஆத்மாக்கள் சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.
வீ; ஆனந்தசங்கரி,
தலைவா,
தமிழர் விடுதலைக் கூட்டணி.