வர்த்தக சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள தொல்லை

மாண்புமிகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள், 6.12.2010
அலரி மாளிகை,
கொழும்பு,

வர்த்தக சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள தொல்லை

அன்புடையீர்,

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்தபோது அவர்களுக்கு நிதி உதவி செய்ததாக குற்றஞ்சுமத்தி யாழ்ப்பாணத்தில் 20 வர்த்தகர்களை அழைத்து இராணுவத்தைச் சேர்ந்த புலனாய்வுப் பிரிவினர் விசாரித்து வருவதாக வந்த செய்தி எனக்கு கவலையைத் தருகின்றது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் எவரும் இது சம்மந்தமாக தங்களிடம் பிரஸ்தாபிக்காத படியால் இதில் நான் தலையிட்டு, தங்களுக்கு இதனை தெளிவு படுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி அவர்களே! விடுதலைப்புலிகள் இலங்கையிலும், பிறநாட்டிலும் சிறிய பெரிய வியாபாரம் என்ற பேதம் இன்றி வர்த்தகர்களிடமும், உள்ளுரிலும் வெளியிலும் இலட்ச்சிணை பொறிக்கப்பட்ட முகவர்களிடமும் மாதாமாதம் பலாத்காரமாக நன்கொடை பெற்று வந்தது உலகம் அறிந்ததே. வெளிநாட்டில் நியமிக்கப் பட்ட முகவர்கள் தாம் சேர்க்கும் பணத்தில் 33 வீதத்தை தரகு கூலியாகப் பெற்ற வந்தது அனைவருக்கும் தெரிந்த விடயம். சிறிய தேனீர் கடைகள், சிகையலங்கார நிலையங்கள், சலைவைத் தொழிலகங்கள், சிறு பலசரக்குக் கடைகள் உட்பட எதனையும் விட்டுவைக்காமல் அவர்கள் நன்கொடை பெற்றுவந்தனர். அத்துடன் செழிப்புற்று வாழ்ந்த கமக்காரர்கள், மீன் முதலாளிகள், ஆசிரியர்கள், அரச ஊழியர்கள் உட்பட அனைவரும் விடுதலைப் புலிகளால் நிர்ணயிக்கப்பட்ட தொகையை ஒழுங்காக செலுத்தி வந்தனர். புலம் பெயர்ந்த தமிழர்களிடம, அவர்களை எதிர்க்கும் தைரியமுள்ளவர்கள் தவிர்ந்த, ஏனையோரிடம், உலகம் முழுவதிலும் அவர்களால் நியமிக்கப்பட்ட முகவர்கள் மூலமாக, நிதி சேகரித்து வந்தார்கள். இந்நிலையில் பணம் செலுத்தாது எவ்வாறு தவிர்த்திருக்க முடியும். தாம் வாழ்ந்த நாடுகளில் உரிய கட்டணத்தை விடுதலைப்புலிகளுக்கு செலுத்தாதவர்கள், அவர்கள் விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்த போது இடைநிறுத்தப்பட்டு, அவர்களின் கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டு கடந்த காலத்தில் கட்டத்தவறிய பணம் உட்பட முற்றாக அறவிட்ட பின்பே, கடவுச்சீட்டுக்களை திருப்பி கொடுத்தனர். இவ்வாறான சொல்லொண்ணா துன்பத்தை அனுபவித்தே மக்கள் இந்த நன்கொடையை செலுத்தினர்.

எனவே தயவு செய்து வர்த்தகர்களை விசாரிக்கும் செயலில் ஈடுபட்டிருப்பவர்களை, இவ்வாறான நடவடிக்கை நிறைய துஷ்ப்பிரயோகங்களுக்கு வழிவகுத்துவிடும், என்ற காரணத்தினால் உடனடியாக இந்நடவடிக்கையை நிறுத்துமாறு, கட்டளை பிறப்பிக்குமாறு வேண்டுகின்றேன். இது தொடருமானால விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழ்ந்தவர்களும், தொழில்புரிந்தவர்களும் ஒருவர் தப்பாது விசாரனைக்கு உட்படுத்த நேரிடும் மேலும் கடந்த காலத்தில் பலவிதமான துன்பங்களை அனுபவித்தவர்கள் தேவையற்ற தொந்தரவிற்கு ஆளாகவும் நேரிடும். இவ்வாறான தொந்தரவினால் வர்த்தக சமூகத்தைச் சேர்ந்த பலர் ஏற்கனவே மனரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.


நன்றி,
அன்புடன்,


வீ. ஆனந்தசங்கரி,
தலைவர்,
தமிழர் விடுலைக் கூட்டணி.

HARASSMENT TO THE BUSINESS COMMUNITY

His Excellency Mr. Mahinda Rajapaksa, 06.12.2010
President of Sri Lanka,
Temple trees,
Colombo- 3

HARASSMENT TO THE BUSINESS COMMUNITY

Your Excellency,

I am perturbed over the news item that 20 business persons from Jaffna had been summoned by the Army Intelligence to know about the contribution they made to the LTTE when they had certain areas under their control. I understand that this is going on for some time. Since no representatives of the people of Jaffna had not take this matter up with you I had to intervene.

Your Excellency, it is known all over the world that they did not spare any one either in Sri Lanka or in the Foreign countries and continued to recover monthly donations, from business men big or small locally and from abroad and from those who had agency rights for branded goods. Agents appointed in foreign countries did the collection for a consideration of 33% commission on the amounts collected. In the process even small tea kiosks, barber Saloons, laundries, very small grocery stores etc. were not spared. In addition to these, prosperous farmers, fish mudalalies, teachers and government Servants too had to make their regular contributions as determined by the LTTE cadre. They were also in a position to levy a tax on almost all diaspora Tamils, with the exception of those who had the courage to refuse, all over the world and had these amounts collected by agents nominated by them. How can the locals escape payment. Those who failed to make payment in the respective countries where they lived, the LTTE could trace them when such people visited Sri Lanka, on holiday. They “impounded” their Passports and returned same only on payment of the arrears.

At this rate there will be no end to the harassment the people will be subjected to. Hence please instruct those who are involved in this process to stop this practice since it will give room for malpractices. If this is to continue, all those who had lived or worked in the LTTE controlled areas will have to be inquired into. This will amount to putting into unnecessary harassment the people who had suffered enough in the past. Due to unnecessary harassment a lot from the business community had even lost their mental balance.

Thanking you,

Yours sincerely,


V. Anandasangaree,
President
Tamil United Liberation Front

NATIONAL UNITY AND SUSTAINABLE PEACE

His Excellency Mahinda Rajapaksa, 28-11-2010
President of Sri Lanka
Temple Trees
Colombo – 03

Your Excellency,

NATIONAL UNITY AND SUSTAINABLE PEACE

Once again I take this opportunity to congratulate you on your assumption of office as President of Sri Lanka, for a second term. It is very unfortunate that I could not participate in any of the functions related to your taking of oaths, like thousands of others because I am still mourning the death and disappearances of thousands of civilians. Most of them had been either known to me or kith and kin of those who are very close to me. The most unfortunate thing is that the causalities are more from the Mullaiteevu, and Kilinochchi electorates represented by me in Parliament before the Mullaiteevu district was created. I am happy to note that your first task is to ensure lasting National Unity and sustainable Peace. To achieve both it is important that we must have a contented. Society wherein people consider themselves as equals and that one is not superior or inferior to the other.

You will agree with me that majority of the people from the North and the East had been living in subjugation of a group of irresponsible elements who were responsible for depriving them of their Fundamental Rights and for seriously eroding into their Democratic and Human Rights. For more than quarter of a century they were yearning for liberation and dreaming to go back to their former life in their homes and live peacefully as in the past.

Today you have liberated the people not only with the support of the forces but also with the unstinting support given to the forces by a fair section of the Tamil community, which expected to re-enjoy all their lost freedom. Permit me to bring to your notice how disappointed they are for failing to achieve what they intended to. You will hardly find one person who will want to see a repetition of the hardships they underwent during the past 25 - 30 yrs. The men had lost their stamina. Even the firing of a cracker scare the women folks and make some women to run hysterically. The children are undernourished. Many still do not attend school. Several thousand men women and children have lost their limbs, eyesight, mental balance etc. Many move about with pieces of shell in various parts of their body. Not one family can boast of leading normal life with minimum losses. But many lost their wealth, houses, vehicles, agricultural implements etc. Some lost their parents and their children, some wives lost their husbands and men their wives. On the whole most people in the Districts of Vavuniya, Mannar and Jaffna and all people of Kilinochchi and Mullaiteevu lost all their belongings. Every family has a tale of woe to tell the world. Unfortunately they were not given a chance to tell the world what happened to them. I have brought to your notice the minimum sufferings the people underwent but the real sufferings are several hundred folds more. It is your Excellency’s duty to note these with the sympathy they deserve. These people had suffered enough pain and let no more pain added under any circumstances. People of the North and the East being victims of war, please don’t allow anyone to take mean advantage of their present plight. Since they had suffered enough kindly make their lives comfortable as far as possible.

The main task before you today is to ensure lasting National Unity and Sustainable permanent Peace. I strongly believe that you will accept my suggestions. I am one who is equally patriotic like you and prepared to lay down my life for the sake of the country and the Unity of all sections of the people. I have lived and moved with Sinhalese, Tamils, Muslims, Malays, Burgers and such other small groups and therefore I know the sentiments of the Sri Lankan communities as a whole. The people today want peace and nothing else. No section of our people want preferential treatment. Everyone wants to be treated equally. There may be a few who can always find ways and means to get at the authorities to get preferential treatment. Such people whichever group they may belong to, should be ignored, because they support every Government that comes to power only for personal gains

To achieve your task ensuring lasting National Unity and Sustainable permanent Peace. I wish to suggest to you certain norms that you should follow to achieve your task.

I. First of all please remember that you are the Head of the State and therefore morally bound to ensure justice and fairplay to everybody without showing partiality to any group.

II. Having taken into consideration the slavish manner the people of the North and the East were treated during the last quarter of a century or more, please ensure that these people are not pushed into a similar situation in the future as well. The presence of a large number of service personnel and the decision of the Government to open up Army Camps spread over in the North and the East and numerous Naval bases in the coastal areas of the North and the East are the main worries of the people of the North and the East today. They fear that the type of military rule the LTTE gave them, is going to be repeated by the Government Security Forces. If the Government is serious about its claim that terrorism had been eradicated there is absolutely no need for any Army Camp or Naval base in any part of the North and East. However depending on the need, one or two camps could be allowed to remain in the North and the East with the Army barracked.

III. I had gone round the country a number of times and found enough land all over, that will meet the requirements of the people for hundreds of years. It is not a wise move to settle the army and people from the other areas in the North and the East where people suffered the most during the war. Any attempt to implement this agenda at this juncture, I assure you, will upset the local people and achieving national unity will become a day dream. The Tamils are not greedy for land but if there is a genuine need for land for the people outside the North and the East they will certainly give way. What they generally oppose to is planned settlement with mischievous intention. Therefore please deter those who are deliberately intending to cause mischief among various groups. Any genuine need for land could be sorted out after normalcy is restored and when people are in a mood to think magnanimously. At this moment most of them are in great despair having lost all the belongings including their dear ones and are not in a mood even to think and act.

IV. Even 18 months after the war ended the houses that were left without roof are still without roof. I hardly see one house re-roofed in any part of Vanni. The Army is very busy constructing houses for their occupation. As a good gesture please take over these houses and hand over them to those families with children to occupy temporarily till houses are built for them. The rainy season has started with hellish life for the IDPs who are not properly settled in their lands even without the basic requirements.

V. Although much is said about the “UTHURU VASANTHAYA” not one of the main roads that are very important for the development of Vanni had been touched, up to now. The internal roads in Vanni are in a horrible state. Many school buildings have not been repaired yet and more due to poverty many children do not go to school but go about collecting abandoned pieces of iron to sell for their living. The first priority for them would be building of schools and feeding the poor and strengthening the economy of the poor parents.

When you assured the country that there are no minorities in Sri Lanka, I hope you will remember my writing to you that it is the minorities who themselves should say so and not you. It is your responsibility to create a situation for the minorities to say so. There are very serious allegations for most of which you may disown responsibility but you are in a supreme position to stop such things forthwith. It is generally felt that most vacancies for minor employment are filled by people who have no authority to do so. In Ampara recently, I understand that of the 30 vacancies for minor employment only one from the minority community had been selected. In Batticlo of the 21 given permanent employment only four are from that District and the remaining 17 are from outside the District from the majority community. I am not a communalist. But why should this type of accusations are being made? For appointments as surveyors of the hundred odd selected, I understand only six are from among the minority community. Further more of the 247 selected for SLAS not a single one from the minority community had been selected. Pardon me Your Excellency for pointing out that of the 53 selected as Secretaries to various Ministries only two are from the minorities, one a Tamil and the other a Muslims. The minorities are ignored in the appointment of Chairman and members to various Boards and Corporations. I am only bringing it to your notice what is now going on as a whispering campaign against the government. Your Excellency I have many more facts in support of my claim that what is needed is a contented society to ensure lasting national unity or even sustainable permanent peace.

Therefore as a true patriot I strongly urge that these are some of the matters that will obstruct you from achieving your task. As regards your achieving permanent peace, matters enumerated herein along with such other similar matters should be dealt with by you personally. Further more you, as the Head of the State and being long time in politics as MP, Minister, Prime Minister and Head of the State know fully well what the problems of the minorities are and how they could be solved to the satisfaction of the minorities.

I had been repeatedly telling that the 13th Amendment even if implemented in full, one day a future Parliament can change it. That is why I had been agitating for a solution based on the Indian Model that will meet the aspirations of the minorities and also will be acceptable even too many leaders from the Government, the opposition, academics, religious leaders and many from the Diaspora. By a adopting the Indian Model as a solution to our problem, Peace and Unity can be achieved in the quickest possible time.

I can assure you that the minorities if contented with what is offered as a solution, will not hesitate to spurn violence and give you unstinting support, to achieve your task of ensuring lasting national unity and sustainable permanent Peace.

Thanking You,

Yours Sincerely


V.Andasangaree
President-
Tamil United Liberation Front

தேசிய ஒற்றுமையும் நீடித்த சமாதானமும்

மாண்புமிகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள், 28.11.2010
அலரி மாளிகை,
கொழும்பு.

அன்புடையீர்,

தேசிய ஒற்றுமையும் நீடித்த சமாதானமும்

இலங்கையின் ஜனாதிபதியாக இரண்டாவது தடவையும் நீங்கள் தெரிவு செய்யப்பட்டமைக்கு மீண்டும் ஒரு தடவை எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். பல்லாயிரக்கணக்கானவர் போல உங்கள் சத்தியப்பிரமாணம் சம்மந்தமாக நடந்தேறிய பல்வேறு நிகழ்ச்சிகளில் நான் கலந்துகொள்ளாமை துர்ப்பாக்கியமே. ஏனெனில் பல்லாயிரக்கணக்கான இறப்புக்களுக்காகவும் காணாமல்போனவர்களுக்காகவும் இன்றுவரை துக்கம் அனுஸ்டித்து வருகின்றேன். அவர்களில் அனேகர் எனக்கு நன்கு தெரிந்தவர்களாக, அல்லது எனது நெருங்கிய நண்பர்களின் உறவினர்களாக உள்ளனர். மிக துன்பமான விடயம் என்னவெனில் முல்லைத்தீவு தொகுதி உருவாக்கப்படுவதற்கு முன்பு நான் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்திய முல்லைத்தீவு கிளிநொச்சி ஆகிய தொகுதிகளை சேர்ந்தவர்களாக இவர்களில் அனேகர் உள்ளனர்.

உங்களின் முதல் பணி தேசிய ஒற்றுமையும் நீடித்த சமாதானத்தையும் உறுதிப்படுத்துவதே என்பது எனக்கு மிக்க மகிழ்ச்சியை தருகின்றது. வடகிழக்கு மக்கள் நீண்ட காலமாக பொறுப்பற்ற ஒரு கூட்டத்தினரின் அடக்குமுறையின் கீழ் வாழ்ந்தவர்கள் என்பதை ஒத்துக்கொள்வீர்கள். அவர்களே அம்மக்களின் அடிப்படை உரிமைகளை பறிப்பதற்கும், அவர்களின் ஜனநாயக மனிதாபிமான உரிமைகள் பெருமளவில் பாதிப்படைவதற்கும் காரணமாக இருந்தவர்கள். கால்நூற்றாண்டுகளுக்கு மேல் தாம் விடுதலை அடையவேண்டும் என்ற அங்கலாய்ப்பில, தமது வீடுகளுக்கு சென்று முன்பு போல் அமைதியான வாழ்வு வாழவேண்டும் எனவும் பகல்கனவு கண்ட மக்கள் தான் இவர்கள்.

நீங்கள் அவர்களை இராணுவத்தின் உதவியுடன் மட்டுமன்றி எம்மக்களின் பெரும்பகுதியினரின் ஒத்தாசையுடனும்தான் விடுவித்தீர்கள். இவர்கள் தாம் இழந்த சுதந்திரத்தை மீளப்பெற்று தம்வாழ்வை மீண்டும் அனுபவிக்கவேண்டும் என்று எதிர்பார்த்தவர்களாவர். தாம் எதிர்பார்த்த வாழ்வை அடைய முடியவில்லையே என்ற ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டுவருவதற்கு அனுமதிக்கவும். தொடர்ந்து இருபத்தைந்து முப்பது ஆண்டு காலமாக தாம் அனுபவித்த துன்பமான வாழ்விற்கு திரும்பி போகவிரும்பும் ஒருவரையாவது நீங்கள் காணமாட்டீர்கள். மனிதர்கள் தமது சக்தியை இழந்துள்ளனர். ஒரு வெடிச் சத்தம் கேட்டாலே பைத்தியம் பிடித்தவர்கள்போல் பெண்கள் ஓடுகின்றனர். பிள்ளைகளோ போதிய போசாக்கின்றி வாழ்கின்றனர். இவர்களில் அனேகர் பாடசாலைக்கு செல்வதில்லை. ஆயிரக்கணக்கான ஆண் பெண் பிள்ளைகளில் அனேகர் தமது கால் கைகளையோ அல்லது கண் பார்வையையோ இழந்தும் மனநிலை பாதிக்கப்பட்டும் உள்ளனர். வெடித்துச் சிதறிய குண்டுச் சிதறல்களை தம் உடலின் பல்வேறு பகுதிகளில் சுமந்து செல்கின்றனர். சிறிய இழப்புகளோடு சகஜ வாழ்க்கைக்கு திரும்பியுள்ளோம் என்று தம்பட்டம் அடிக்கும் எவரும் இல்லை. ஆனால் அனேகர் தமது செல்வம் வீடு வாகனங்கள் விவசாய உபகரணங்கள் போன்ற எல்லாவற்றையும் இழந்துள்ளனர். சிலர் தமது பெற்றோர்களையும் பிள்ளைகளையும் சில பெண்கள் தம் கணவன்மாரையும் சில ஆண்கள் தம் மனைவிகளையும் இழந்துள்ளனர். மொத்தத்தில் வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் மாவட்டங்களைச் சேர்ந்த மக்களில் அனேகரும், முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த அனைவரும் தம் சொத்துக்கள் அனைத்தையும் இழந்துள்ளனர். ஒவ்வொரு குடும்பமும் உலகிற்கு கூறுவதற்காக ஒரு சோகத்தை வைத்துள்ளது. துரதிஸ்டவசமாக தமக்கு நடந்ததை உலகிற்கு எடுத்துக்கூற அவர்களுக்கு ஒரு சந்தாப்பம் வழங்கப்படவில்லை. இவர்களுக்கு நடந்தவற்றில் மிக சொற்பமானதையே தங்களின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளேன். ஆனால் அவர்கள் பட்ட கஸ்டம் இதைப்போல் நூறு மடங்கிற்கு மேலாகும். இவர்களின் துன்பத்திற்கு உரிய அனுதாபத்தை கவனத்திற்கு எடுக்கவேண்டியது தங்களின் கடமையாகும். நிறைய வலிகளை ஏற்கனவே அனுபவித்த இவர்களுக்கு எக்காரணம்கொண்டும் மேலும் வலிகளை ஏற்படுத்தக்கூடாது. வடகிழக்கைச் சேர்ந்த மக்கள் யுத்தத்தால் பெரியளவில் பாதிக்கப்பட்டிருக்கும் வேளையில் அவர்களின் தற்போதைய நிலைமையினை எவரும் தமக்கு சாதகமாக்கி இலாபம் சம்பாதிக்க அனுமதிக்க கூடாது. அவர்கள் ஏற்கனவே பலதுன்பங்களை அனுபவித்தவர்கள் என்பதால் முடிந்தவரை வசதியான வாழ்வை அவர்களுக்கு அமைத்துக் கொடுங்கள்;. இன்று தங்களுக்கு உள்ள முக்கிய பணி, நீடித்த தேசிய ஒற்றுமையையும் நிலைக்கக்கூடிய சமாதானத்தைதையும் உருவாக்குவதே.

என்னால் வழங்கப்படும் சில ஆலோசனைகளை நீங்கள் ஏற்றுக்கொள்வீhகள் என நான் வலுவாக நம்புகின்றேன். தங்களைப்போல் நானும் ஒரு தேசபக்தன். எம் நாட்டிற்காகவும் எம் நாட்டில் வாழும் சகல பிரிவினரின் நன்மைக்காகவும் என் உயிரையும் அர்ப்பணிக்க தயாராக உள்ளேன். சிங்கள தமிழ் இஸ்லாமிய மலே பறங்கியருடனும் மற்றும் சிறு குழுக்களுடனும் வாழ்ந்தும் பழகியும் உள்ளேன். ஆகவே இலங்கை வாழ் சகல இன மக்களுடைய மனநிலை போன்றவற்றை நான் நன்கு அறிவேன். இன்று மக்கள் வேண்டுவதெல்வாம் சமாதானமேயன்றி வேறெதுவுமில்லை. எமது மக்களில் எப்பகுதியினரும் பாரபட்சமான சலுகைகளை எதிர்பார்க்கவில்லை. ஒவ்வொருவரும் தாம் மற்றவர்களுடன் ஒரே மாதிரியாக நடத்தப்படுவதையே விரும்புகின்றனர். அதிகாரிகளைப் பிடித்து சில சலுகைகளை பெறும் மக்கள் சிலர் எங்கள் பகுதியிலும் உள்ளனர். அத்தகையோர் எந்தக் குழுவை சேர்ந்தவராக இருப்பினும் அவர்கள் புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள் ஏனெனில் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் சுயலாபம் பெறும் நோக்கோடு அரசை ஆதரிப்பது அவர்களுக்கு கைதேர்ந்த கலையாகிவிட்டது. உங்ளுடைய இலக்காகிய தேசிய ஒற்றுமையையும் நிரந்தர சமாதானத்ihயும் அடைய சில நல்ல ஆலோசனைகளை வழங்க விரும்புகின்றேன்.

1. முதலாவதாக நாட்டின் தலைவர் என்ற முறையில் மக்கள் அனைவரையும் எதுவித பாரபட்சமின்றி சமமாகவும் நீதியாகவும் பாதுகாத்து செயல்படவேணடடிய தார்மீக கடமை தங்களுக்கு உண்டு என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவேண்டும்

2. கடந்த கால் நூற்றாண்டுக்கு மேல் வட பகுதி மக்கள் எவ்வாறு அடிமைகள் போல் நடத்தப்பட்டார்கள் என்பதை கவனத்தில் எடுத்துக்கொண்டு எதிர்காலத்தில் அதே நிலைமைக்கு அவர்கள் தள்ளப்படக்கூடாது என்பதை நீங்கள் உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும். வடபகுதியில் பெருமளவு படையினரை குவித்து, பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக இராணுவமுகாம்களை அமைப்பதும் கரையோரப் பகுதிகளில் கடற்படை தளங்கள் அமைப்பதுமாகிய அரசின் முடிவே வடகிழக்கு பகுதிகளில் வாழும் மக்களின் இன்றைய பெரும் கவலையாகும். விடுதலைப்புலிகள் எத்தகைய இராணுவ ஆட்சியை இம்மக்களுக்கு கடந்த காலத்தில் கொடுத்தார்களோ அதே ஆட்சி முறையினை அரச படையினரும் கையாளப் போகிறார்களோ என்ற பீதி அவர்களை ஆட்கொண்டுள்ளது. பயங்கரவாதம் முற்றாக ஒடுக்கப்பட்டுவிட்டது என்ற அரசின் கூற்று உண்மை எனின் இராணுவத்திற்கோ கடற்படையினருக்கோ வட கிழக்கில் தளம் அமைக்க வேண்டிய எதுவித தேவையும் இல்லை. இருப்பினும் தேவையைப் பொறுத்து இரண்டொரு முகாம்களை அங்கும் இங்கும் இயங்கவிட்டு படையினரை முகாம்களுக்குள்ளே முடக்கிவைக்கலாம்.

3. நான் நம்நாட்டை பல தடைவ சுற்றி வந்துள்ளேன். பல நூற்றாண்டுகளுக்கு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய அளவிற்கு நாடுமுழுவதும் தேவையான நிலம் பரவி உள்ளது. ஆகவே இராணுவத்தினரையும் வேறு பகுதியில் உள்ள மக்களையும், கடந்த யுத்தகாலத்தில் மிகப் பாரிய கஸ்ரங்களை அனுபவித்த வடகிழக்கு மக்கள் மத்தியில் குடியேற்ற நினைப்பது புத்திசாலித்தனமான செயலாக எனக்குத் தெரியவில்லை. இத்திட்டத்தை இந்த காலகட்டத்தில் அமுல்படுத்த முயற்சித்தால் அச்செயல் உள்ளுர் வாசிகளை குழப்பம் அடையச் செய்வதோடு தேசிய ஒற்றுமையை அடைய தாங்கள் எடுக்கும் முயற்சி வெறும் பகல் கனவாகிவிடும் என்பதை என்னால் உறுதியாக கூறமுடியும். தமிழர்கள் காணி நிலத்திற்காக பேராசை கொண்டவர்கள் அல்ல. ஆனால் வடகிழக்கிற்கு வெளியே வாழும் மக்களுக்கு உண்மையில் காணி தேவைப்படின் வடகிழக்கு மக்கள் எதுவித தயக்கமும் இன்றி விட்டுக்கொடுப்பார்கள். பொதுவாக அவர்கள் எதிர்ப்பது எதுவெனில் குழப்பத்தை உண்டு பண்ணும் நோக்கோடு திட்டமிட்டு குடியேற்றுவதையே. ஆகவே தயவு செய்து குழப்பத்தை உண்டுபண்ணும் நோக்கோடு திட்டமிட்டு செயல்படும் குழுக்களின் திட்டத்தை தடுத்து விடவும். நாட்டில் சகஜ நிலை ஏற்படுத்தப்பட்டதன் பின்பு மக்கள் பெருந்தன்மையோடு செயற்படும் நிலை உருவாகும் போது இப்பிரச்சினைக்குத் தீர்வு காணலாம். தற்போது அனேக மக்கள் தமது உற்றார் உறவினர்களை இழந்து தவிப்பில் இருக்கும்போது அவர்களுக்கு எதனையும் சிந்திதித்து செயலாற்றும் மன நிலை இல்லை.

4. யுத்தம் முடிந்து பதினெட்டு மாதங்கள் முடிந்த நிலையிலும்கூட அவர்களில் அனேகரின் கூரையற்ற நிலையில் இருந்த வீடுகள் இன்றும் அதே நிலையிலதான்; உள்ளன. வன்னிப்பகுதியில் ஒரு வீட்டுக்காவது கூரை அமைக்கப்படவில்லை. இராணுவத்தினர்; தமக்கு வீடுகள் அமைப்பதிலேயே தீவிரமாக உள்ளனர். நல்லெண்ண செயலாக இவ்வீடுகளை பாரமெடுத்து வீட்டை இழந்து நிற்கும் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு அவர்களின் வீடுகள் அமைக்கப்படும் வரை தற்காலிகமாக இவ்வீடுகளில் அவர்களை தங்கவையுங்கள். மழைக்காலம் ஆரம்பித்து உள்ளதால் அத்தியாவசிய தேவைகள் பூர்த்திசெய்யப்படாத நிலையில் மீளக் குடியமர்த்தப்பட்ட மக்களின் நரக வாழ்க்கையும் ஆரம்பிக்கின்றது.

5. “வடக்கின் வசந்தம” பற்றிப் பிரமாதமாக பேசப்பட்டாலும் வன்னியின் அபிவிருத்திற்கு தேவையான முக்கிய பெரும் தெருக்கள் எதிலும் இதுவரை கை வைக்கப்படவில்லை. வன்னிப் பகுதியில் உள்ள உள் வீதிகள் படுமோசமான நிலையில் உள்ளன. பல பாடசாலைகள் இதுவரை திருத்தப்படவில்லை. வறுமை காரணமாக பாடசாலைக்கு செல்வதை தவிர்த்து, பிள்ளைகள் வீடுவீடாகச் சென்று வீசி எறியப்பட்ட இரும்புத்துண்டுகளை பொறுக்கி எடுத்து, விற்று அரை வயிற்றுக் கஞ்சி குடிக்கின்றார்கள், அவர்களின் முதல் தேவையாக அவர்களுக்கான பாடசாலையை அமைத்து அவர்களுக்கு உணவளித்து அவர்களின் ஏழைப் பெற்றோர்களின் பொருளாதாரத்தை வலுவடையச் செய்வதேயாகும.;

“இந்நாட்டில் சிறுபான்மையினர் இல்லை” என தாங்கள் கூறிய போது அதை நீங்கள் அல்ல சிறுபான்மையினர்தான் அவ்வாறு கூற வேண்டும் எனவும் அவ்வாறு அவர்கள் கூறவைக்கக் கூடிய வகையில் நீங்களே செயல்பட வேண்டும் என்று நான் எழுதியது தங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். தற்பொழுது நடக்கும் சம்பவங்களுக்கு நான் பொறுப்பல்ல, என நீங்கள் கூறலாம். ஆனால் அத்தகைய செயற்பாடுகளை உடன் நிறுத்தக்கூடிய அதிகாரம் கொண்ட பதவி தங்களுக்கு உண்டு. பல்வேறு சிற்றூழியர் நியமனங்களில் அதிகாரமற்றவர்களின் தலையீடு உண்டு என்று பரவலாகப் பேசப்படுகின்றது. அண்மையில் அம்பாறையில் முப்பது சிற்றூழியர் நியமனத்தில் ஒரேயொரு சிறுபான்மையினர் மட்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பில் 17 நியமனங்களில் 4 பேர் மட்டும் அம்மாவட்டத்தைச் சேர்ந்த சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்களாவார்கள். நான் ஒரு வகுப்புவாதியல்ல. ஆனால் இத்தகைய குற்றச்சாட்டுக்கள் ஏன் வரவேண்டும்? நில அளவையாளர்களாக தெரிவான 100க்கு மேற்பட்டோரில் அறுவர் மட்டுமே சிறுபான்மை இனத்தவர். மேலும் இலங்கை நிர்வாகச் சேவைக்குத் தெரிவான 247 பேரில் ஒருவரேனும் சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர் இல்லை. ஜனாதிபதி அவர்களே 53 அமைச்சுக்களுக்கு நியமிக்கப்பட்ட செயலாளர்களில் ஒரு தமிழரையும் ஒரு இஸ்லாமியரையும் தவிர ஏனைய 51 பேரும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் என சுட்டிக் காட்டுவதற்கு என்னை மன்னிக்கவும். சபைகளுக்கும் கூட்டுத்தாபனங்களுக்கும் நியமிக்கப்படுகின்ற தலைவர்கள் பணிப்பாளர்கள் போன்ற பதவிகளில் சிறுபான்மை இனத்தவர்கள் தெரிவு செய்யப்படுவதில்லை என்ற புகாரும் உண்டு. இச்சம்பவங்கள் அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இரகசியப் பிரச்சாரம் என்பதை சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.

ஆகவே ஓர் உண்மையான தேசபக்தன் என்றவகையில், இத்தகைய பிரச்சாரங்கள் தங்களின் இலக்கை அடைவதற்கு இடையூராக இருக்கும் என நான் அஞ்சுகின்றேன். நிரந்தர சமாதானத்தை அடைய என்னால் குறிப்பிடப்பட்ட விடயஙகளிலும் இது போன்ற வேறு விடயங்களிலும் நீங்கள் தனிப்பட்ட கவனத்தை செலுத்தவேண்டும். மேலும் நீங்கள் நீண்ட கால அரசியலில் பாராளுமன்ற உறுப்பினராகவும் பிரதம அமைச்சராகவும் இருந்து ஜனாதிபதியாகி இருப்பதால் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் என்ன என்பதையும் அவர்களின் பிரச்சினைகளுக்கு திருப்தி அளிக்கக்கூடிய தீர்வு என்னவென்பதையும் அறிவீர்கள்.

நான் திரும்பத் திரும்ப கூறிவருவதுபோல் 13வது திருத்தத்தை முழுமையாக அமுல் படுத்தினாலும்கூட எதிர் காலத்தில் அமையும் ஒரு பாராளுமன்றம் அதனை மாற்றி அமைக்கவும் கூடும். ஆகவேதான் நான் சிறுபான்மை மக்களுக்குத் திருப்தி அளிக்கக்கூடிய ஓர் தீர்வாக இந்திய அரசியல் சாசனத்தை ஒத்த முறைமையே பொருத்தமானதென கூறிவருகின்றேன். அத்தகைய தீர்வு ஆளும் கட்சி எதிர் கட்சிகளின் தலைவர்களுக்கும் புத்திஜீவிகளுக்கும் சமய தலைவர்களுக்கும் புலம் பெயர்ந்த மக்களுக்கும் ஏற்புடையதாக இருக்கும் என நம்புகின்றேன். இந்திய முறையிலான ஓர் தீர்வை அமுல்படுத்துவதன் மூலம் நீண்ட சமாதானத்தையும் ஐக்கியத்தையும் மிக விரைவாக அடைய முடியும்.

சிறுபான்மை மக்களுக்கு ஏற்புடையதான ஓர் தீர்வை முன்வைத்து அது ஏற்புடையதாக இருப்பின் மக்கள் வன்முறையினை தூக்கி எறிந்து விட்டு நீங்கள் விரும்பும் தேசிய ஒற்றுமையையும் நிரந்தர சமாதானத்தையும் அடைய உங்களுக்கு, அமோகமான முறையில் ஆதரவை வழங்குவார்கள்.

நன்றி,

அன்புடன்,

வீ. ஆனந்தசங்கரி,
தலைவர்,
தமிழர் விடுதலைக் கூட்டணி

DRINKING WATER FROM IRANAIMADU TO JAFFNA WILL RUIN PADDY CULTIVATION IN KILINOCHCHI



His Excellency Mahinda Rajapaksa 2010-10-11
President of Sri Lanka
Temple Trees
Colombo – 03

DRINKING WATER FROM IRANAIMADU TO JAFFNA WILL RUIN PADDY CULTIVATION IN KILINOCHCHI

Your Excellency,

The paddy cultivators of Kilinochchi, predominantly colonists, are highly perturbed over the Government taking steps to tap Iranaimadu water for drinking purposes in to the Jaffna District and Poonakari area. I strongly urge that you should suspend work on this project and before taking a decision have this matter fully discussed, with the concerned parties and experts. Being fully aware of the situation, I have a duty to advice you on this matter. I recollect those days in the sixties how we fought hard for increased water rights for the colonists. I am strongly of the view that this move will completely ruin paddy cultivation in areas that are fed from the Iranaimadu Tank and the country will face many more problems. Eighty percent of the people of Kilinochchi depend on paddy cultivation and majority of them come under Iranaimadu Tank. Over 30,000 acres are cultivated under Iranaimadu during Maha Season and it so happens that at the tail end of their cultivation if the rains fail it is the Iranaimadu that saves the crops, by giving the crops a couple of feeds to help the crops to mature before harvesting. During the Yala (serupokem) cultivation of paddy is restricted to a certain area with limited acres for cultivation and the land owners could transfer their water rights to cultivate in another’s land. This is how the cultivation under Iranaimadu Tank takes place. You can very well understand the situation. At times the tank goes dry. When the crops die for want water, you will have to decide whether to look after the people or to save the crops. Please accept this as an ill-conceived plan that needs reconsideration.

If Your Excellency want to see the Jaffna Peninsula flourish, please implement the Jaffna Lagoon scheme of the late Arunachalam Mahadeva who mooted it in 1947. Constructing three regulators, one at Chundikulam and two others at Thondaimanaru and Navatkuli respectively. Cut a channel to link the Elephantpass lagoon with the Vadamarachchi lagoon, a distance of four to five miles. This scheme was abandoned due to short of funds. The amount required is just the cost of cutting the channel.

This scheme works thus. The three regulators will be kept closed during the rainy season. The excess water discharged from the Iranaimadu Tank falls into the Elephant pass lagoon and through the channel reaches the Vadamarachchi lagoon and spreads all over the Jaffna Peninsula and when the flow is towards the sea the regulators are opened to let the water fall into the sea at all these three points. If this process is repeated for a period of eight to ten years, all lands in the peninsula that lay baron could be reclaimed as fit for cultivation and the salinity of the water also will change into pure drinking water. Thus entire peninsula will be suitable for cultivation, the wells too will get recharged. As a layman this is how I understand the scheme. To complete this scheme you need only a small sum only to cut the channel of about 5 miles and to construct the dam or anicut at Chundikulam. The other two are either completed or in the process of getting completed.

This was revised by late Mr. S. Arumugam Senior Deputy Director of Irrigation, Who named it as “A river for Jaffna”. Mr. D.L.O. Mendis who worked with Mr. Arumugam is now the best authority to advice the Government on this matter. Please drop the idea of taking water from Iranimadu and implement Mr. Arumugam’s proposal in consultation with the experts including Mr. Mendis.


Thanking You
Yours Sincerely,



V. Anandasangaree,
President
Tamil United Liberation front

இரணைமடு குளத்தில் இருந்து யாழ் மாவட்டத்திற்கு குடிநீர் விநியோகிப்பதால் கிளிநொச்சியில் நெற்ச்செய்கை கடுமையகப் பாதிக்கப்படும்

அதி உத்தம மகிந்த ராஜபக்ஷா 2010-10-11
இலங்கை ஜனாதிபதி
அலரி மாளிகை
கொழும்பு.

இரணைமடு குளத்தில் இருந்து யாழ் மாவட்டத்திற்கு குடிநீர் விநியோகிப்பதால் கிளிநொச்சியில் நெற்ச்செய்கை கடுமையகப் பாதிக்கப்படும்

அன்புடையீர்

கிளிநொச்சியில் நெல் செய்கையாளர்களில் அநேகர் குடியேற்றவாசிகளே. யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் பூநகரி பகுதிக்கும் இரணைமடு குளத்தில் இருந்து குடிநீர் விநியோகத்திற்கு அரசாங்கம் எடுத்துள்ள முயற்ச்சிஇ அம் மக்களை பெரும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. தாங்கள் இத்திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி இறுதி முடிவு எடுப்பதற்கு முன்னர் இப்பிரச்சனையுடன் சம்பந்தப்பட்டவர்களுடனும்இ இவ்விடயத்தில் நிபுணத்துவம் மிக்கவர்களுடனும் கலந்தாலோசிக்க வேண்டுகின்றேன். இதன் தார்ப்பரியத்தை நன்கு உணர்ந்தவர் என்ற காரணத்தால் இவ்விடயத்தில் நான் ஆலோசனை வழங்கக் கடமைப்பட்டுள்ளேன். அறுபதாம் ஆண்டு காலப்பகுதிகளில் குடியேற்றவாசிகளுக்கு கூடுதலான அளவு தண்ணீர் கொடுக்க வேண்டும் என அவர்களுடன் இணைந்து போராடியதை நான் நினைத்துப்பார்க்கின்றேன். இரணைமடுக்குளத்தால் நீர்ப்பாசனத்தை அனுபவிக்கின்ற பகுதிகளில் நெற்செய்கை முற்று முழுதாக பாதிக்கப்படும் என்று நம்புகின்றேன். அதன் பயனாக நாடு பல பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டி ஏற்படும். கிளிநெச்சியின் 80%மேற்பட்ட மக்கள் நெற்செய்கையில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் பெரும்பான்மையினர் இரணைமடு குளத்து நீரையே நம்பியுள்ளனர். இரணைமடு குளத்தின் கீழ் 30,000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகின்றது. பல சந்தர்ப்பங்களில் அறுவடைக்கு முன்னர் இரண்டு அல்லது மூன்று தடவை நீர்ப்பாசனம் செய்தே பயிரை மீட்டெடுத்துஇ அறுவடை செய்ய வேண்டிய நிலை. போதிய மழை இன்மையினால் இப்படியான நிலை ஏற்படுவதுண்டு. சிறு போக வேளாண்மை காலத்தில் பயிர் செய்யப்பட வேண்டிய இடமும் பரப்பும் வரையறுக்கப்பட்டு அதற்கு அப்பால் உள்ளவர்களுக்கும் இக்காணிகளில் விதைப்பதற்கு உரிமையும் வழங்கப்படும். இரணைமடு நீர் விநியோக பகுதிகளில் விவசாயப் பணிகள் இவ்வாறே இடம்பெறுகின்றன. இந்நிலையை சரியாக விளங்கிக் கொள்ளுவீர்கள் என நம்புகின்றேன். சில சந்தர்ப்பங்களில் குளத்து நீர் முற்றாக வற்றிப் போவதும் உண்டு. அவ்வாறான சந்தர்ப்பங்களில் இந்நீரையே நம்பியுள்ள பயிரைக் காப்பாற்றுவதா அல்லது வேறு தூரப்ப பிரதேசங்களில் உள்ள மக்களின் குடி நீர் தேவையை நிறைவேற்ற நீரை விநியோகிப்பதா என உங்களுக்கு தடுமாற்றம் ஏற்படும். இதை ஒரு முன்யோசனையின்றி உருவாக்கப்பட்ட திட்டமாக கருதி மீள் பரிசீலனை செய்யும்படி கேட்டுக் கொள்ளுகின்றேன்.

ஜனாதிபதி அவர்களே யாழ் குடாநாடு செழிப்புற வேண்டும்மென நீங்கள் நினைத்தால் காலம் சென்ற கௌரவ அருணாசலம் மகாதேவா அவர்களினால் 1947ம் ஆண்டு முன்வைக்கப்பட்ட யாழ்ப்பாண களப்புத்திட்டத்தை (Jaffna Lagoon Scheme) அமுல்படுத்துங்கள். இத்திட்டத்தை செயல்படுத்த சுண்டிக்குளத்தில் ஒர் நீர் தடுப்பணையையும் தொண்டமனாறு மற்றும் நாவற்குழி ஆகிய இடங்களில் இரு தடுப்பணையையும் அமைப்பதுடன் ஆனையிறவு களப்பையும் வடமறாச்சி களப்பையும் இணைக்கும்மாறு 4-5 மைல் நீளமான கால்வாய் ஒன்றும் வெட்டப்பட வேண்டும். இத்திட்டத்தை நிறைவேற்ற போதிய நிதியின்மையால் கைவிடப்பட்டது. இத்திட்டத்திற்கு பிரதானமாகத் தேவைப்படுவது அக்கால்வாய் அமைக்க செலவிடப்படும் தொகையே. இத்திட்டம் செயற்படுத்தப்படும் முறையாக இம் மூன்று நீரை கட்டுப்படுத்தும் அணைகள் மழைகாலத்தில் பூட்டப்பட்டிருக்கும். இரணைமடுக் குளத்தில் இருந்து நிரம்பி வழியும் நீர் ஆனையிறவு களப்பை அடைந்து வடமறாச்சி களப்பு ஊடாக ஏனைய பகுதிகளிலும் பரவி நிற்கும். குடாநாட்டில் இருந்து நீர் கடலை நோக்கி செல்லும் போது நீரணையின் கதவுகள் திறக்கப்பட்டு மேலதிக நீர் இம்மூன்ற இடங்களினாலும் வெளியேறிச் செல்லும். இவ்வழியை மீண்டும் மீண்டும் 8 - 10 வருடங்களுக்கு தொடர்ந்து செயல்படுத்தினால் பிரயோசனமற்றுள்ள பிரதேசங்கள் வளம் பெறுவதுடன் உப்பு நீர் உள்ள கிணறுகளும் நன்னீராக வாய்ப்புள்ளது. இது நிபுணர்களின் கருத்தேயன்றி எனது கருத்தல்ல. அவ்வாறே குடாநாட்டு பிரதேசம் முழுவதையும் கமச் செய்கைக்கு பிரயோசனப்படுத்துவதோடு கிணறுகளிலும் நன்னீரைப் பெறலாம். ஒரு சாதாரண மனிதனாக என்னால் விளங்கிக் கொள்ளக் கூடியது இவ்வளவுதான். இத்திட்டத்தை பூர்த்தியாக்க கொஞ்சப்பணமே தேவைப்படும். இதற்காக 5 மைல் நீளமான கால்வாய் வெட்டவும் சுண்டிக்குளத்தில் ஒரு தடுப்பணை கட்டவும்மே செலவாகும். ஏனைய இரண்டு இடங்களில் ஒன்று பூர்த்தியாகியும் மற்றொன்று பூர்த்தியாகும் நிலையிலுமே உள்ளன.

இத்திட்டம் நீர்ப்பாசன திணைக்களத்தில் சிரேஸ்ட்ட பதில் பணிப்பளராக கடமையாற்றியவரால் யாழ்ப்பாணத்துக்கு ஒரு ஆறு என்ற பெயரில் வெளியிடப்பட்டது. அவரே காலஞ்சென்ற திரு. S. ஆறுமுகம். இன்று இத்திட்டத்தை அமுல்ப்படுத்த வேண்டிய நிபுணத்துவத்தை அறிந்துள்ளவர் திரு ஆறுமுகத்துடன் பணியாற்றிய திரு D.L.O. மென்டிஸ் ஆவார். தயவு செய்து இரணைமடுவில் இருந்து குடிநீர் பெறும் திட்டத்தை நிறுத்தி ஆறுமுகம் அவர்களின் திட்டத்தை மென்டிஸ் அவர்களுடனும் ஏனைய நிபுணர்களுடனும் கலந்தாலோசித்து பரீசீலிக்கவும்.


வீ. ஆனந்தசங்கரி
தலைவர்
தமிழர் விடுதலைக் கூட்டணி

ஊடகச் செய்தி


ஊடகச் செய்தி



தமிழர் விடுதலைக் கூட்டணியின் கிளிநொச்சி மாவட்டத் தலைமைச் செயலகம் 02.10.2010 மாலை 4.00மணிக்கு தந்தை செல்வாவின் புதல்வர் செல்வநாயகம் சந்திரகாசன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வின்போது பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர். தலைவர் வீ.ஆனந்தசங்கரியின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்தும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. கிருஷ்ணபிள்ளை (வெள்ளிமலை) உதய சூரியன் கொடியினை ஏற்றி வைத்தார். பின்னர் தந்தை செல்வாவின் திருவுருவச் சிலையினை மட்டக்களப்பைச் சேர்ந்த திரு மருதநாயகம் அவர்கள் திரை நீக்கம் செய்து வைத்தார். பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் கிளிநொச்சி மாவட்டத் தலைமைச் செயலகத்தை திரு செல்வநாயகம் சந்திரகாசன் அவர்கள் நாடா வெட்டி சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்தார். இந்நிகழ்வில் உரையாற்றிய பலரும் கட்சியின் முக்கிய பொறுப்பை சந்திரகாசன் அவர்கள் ஏற்கவேண்டும் என கேட்டுக்கொண்டனர்.


தலைவர் வீ.ஆனந்தசங்கரி அவர்கள் சந்திரகாசன் அவர்களை கட்சியின் முக்கிய பொறுப்பை ஏற்கவேண்டும் என கேட்டுக்கொண்டதோடு சகல தமிழ்க் கட்சிகளும் ஒரு அமைப்பின் கீழ் இணைந்து செயற்பட வேண்டிய தருணம் இது எனக் குறிப்பட்டார். சகல தமிழ்க்கட்சிகளும் குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சேர்ந்து ஒரே அமைப்பாக இயங்க முன்வரவேண்டும் எனவும், அதற்குத் தடையாக எனது கட்சியின் தலைமைப்பதவி இருக்கும் என எவராவது கருதினால் நான் எனது தலைவர் பதவியையும் இராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன் எனவும் கூறினார். எனவே மக்களின் நலன் கருதி தான் எந்த தியாகத்தையும், செய்தாவது தமிழ்க்கட்சிகளின் ஒன்றிணைவிற்கு ஒத்தாசை நல்குவேன் எனவும் குறிப்பிட்டார்.



எல்லாவற்றிற்கும் பதிலளிக்கும் முகமாக இறுதியாக உரையாற்ற வந்த திரு. செல்வநாயகம் சந்திரகாசன் அவர்கள் தான் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆயுட்கால உறுப்பினர் எனவும் எந்த சந்தர்ப்பத்திலும் வேறு கட்சிக்குப் போகவேண்டிய அவசியமில்லை எனவும் சரியான நேரத்தில் நான் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து முழுநேர அரசியலில் ஈடுபடுவேன் எனவும் உறுதிபடக்கூறினார். தற்போது தமிழகத்தில் தங்கியிருக்கும் எமது உறவுகளின் நலன்களில் முழுநேரமும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற படியால் நேரமின்மையே இதற்குக் காரணம் எனவும் கூறினார். அதுவரை தமிழர் விடுதலைக் கூட்டணியை வழி நடத்த வேண்டிய பொறுப்பு திரு ஆனந்தசங்கரிக்கு உண்டு எனவும் ஏனைய மத, இன தலைவர்களாலும், சர்வதேச தலைவர்களாலும் நன்கு மதிக்கப்படுகின்ற தலைவர் ஆனந்தசங்கரி எனவும், இவ்வாறான தலைவர்தான் இப்போதைய சூழ்நிலையில் மக்களுக்குத் தேவை எனவும் குறிப்பிட்டார். ஏனோ தொரியவில்லை நல்ல தலைவர்களைத்தான் அடுத்தவர்கள் குறை கூறிக்கொண்டிருக்கிறார்கள் எனவும் மக்களும் அதை எளிதில் நம்பி மோசம் போய்விடுகிறார்கள் எனவும் இந் நிலை மாறி நல்லவர்களை நம்பி பொறுப்பை ஒப்படைக்க மக்கள் முன்வர வேண்டும், எனவும் விசனத்துடன் குறிப்பிட்டார். ஒரு அப்பழுக்கற்ற அரசியல்வாதி திரு வீ.ஆனந்தசங்கரி என அவர் மேலும் தனது உரையில் சுட்டிக்காட்டினார். இறுதியாக திரு ஏகாம்பரம் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வு முடிவிற்கு வந்தது.


ஊடகச் செயலாளர் - த.கஜன்

MURUGANDY IS NOT A PLACE FOR MERRY MAKING

Major General G.A Chandrasiri 2010-09-23
Hon Governor
Northern Province


MURUGANDY IS NOT A PLACE FOR MERRY MAKING

Dear Hon Governor,

Today’s news item in a local daily about the construction of a hotel in Murugandy upset me. The construction of the massive building in close proximity to the Hindu Temple at Murugandy, that remained a mystery during its construction, has now come to light. It is now revealed that the building is to house the Testa Bake House, not only to bake bread and allied items but also plans to make available some other facilities such as rest rooms, meals etc. It is now obvious that it is not going to be a bakery or a restaurant but a Hotel.

It is highly deplorable to start a venture of that nature at such a place that is considered to be sacred for both Hindus and Buddhists. The worst is that it is built so close to the Temple. The building is an upstair block while the temple itself is housed in a hut, according to local belief, as desired by God Pillaiyar, also known as Gana Deiyo for the Buddhists. It is very unfortunate that such a large sum of money is spent on this project without fore-thought and without the knowledge of anybody. The Department of Hindu Culture, Hindu and Buddhist organizations should take up the issue with the Government.

The Importance of this temple is known worldwide. There are a few in Sri Lanka on the wayside, very popular and respected by all irrespective of ones race or religion. Among such Temples, Kaluthura Bhodi, Madampe’s Tanivella Great Shrine and Murugandy’s Pillaiyar Temple can be mentioned as popular one.

Murugandy Temple is an ancient one. Although many had offered to build a big temple God Pillaiyar had declined to accept all such offers and prefers to be left alone in the hut. Every vehicle that passes the temple stop there for the people to make their offerings, break coconut and light camphor. Every time I pass the temple I stop there to get the blessings. Any one knowingly ignores to follow the tradition had faced may problems on the way and some had even paid with valuable lives. The large number of accidents on the A9 road where the temple is situated, could be attributed to the belief that a stop at Murugandy, is compulsory. The real risk is only when one does it knowingly. Some CTB and Private Bus Drivers earn the curse of the passengers who come prepared to make offerings and get the blessings of God Pillaiyar. I advise such drivers not to break the tradition for personal gains.

I hope the owner of the building will pardon me for pointing out this matter. There are lot of murmurings and grumblings that fall into my ears whenever I stop for the blessing of the deity.

I suggest that Government should take over this building and convert it into a pilgrims’s rest and pay sufficient compensation for the owner to put-up a new building away from the temple with strict instruction that meals served should be vegetarian and no liquor under any circumstances.

Please take immediate action to stop the opening of the hotel.

Thanking You

Yours Sincerely,



V. Anandasangaree,
President
Tamil United Liberation front

MUTHAMIL VILA AT KILINOCHCHI

The Government Agent 2010-09-21
Kilinochchi


MUTHAMIL VILA AT KILINOCHCHI

Dear G.A

It is with great dismay I learn that a Muthamil Vila is going to be celebrated at Kilinochchi for 3 days from the first of October, under your patronage. Several representations had been made to me to contact you and to have it cancelled. The General Public of Kilinochchi, I would say a good number of them, want the Muthamil Villa cancelled, since the time in not opportune for merry making. The gathering before the Lessons Learnt and Reconciliation Commission, when they had sitting at Kilinochchi and Mullaithevu, bear testimony to my claim.

I hope you will agree with me that the people are desperately worried about their children in detention and about those who are still missing. Hence they are in no mood for any enjoyment.

Furthermore, they are supposed to be resettled, but they are still undergoing several hardships. Most of their houses are roofless and are still not fit for habitation. Families with Children undergo many difficulties. The situation faced by their Kith and Kin still in IDP Camps is worse.

Please explain the difficulties you have to the authorities concerned and have the program cancelled. I am also requesting the Jaffna Central College authorities and the Thiru Marai Kala Mandram to consider my request seriously.

Thanking You
Yours Sincerely,


V. Anandasangaree,
President
Tamil United Liberation front

கிளிநெச்சி முத்தமிழ் விழா

அரசாங்க அதிபர் அவர்கட்கு 2010-09-21
கிளிநெச்சி

கிளிநெச்சி முத்தமிழ் விழா

அன்புடையீர்


தங்களின் அனுசரணையுடன் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் முதலாம் திகதியிலிருந்து முன்று நாட்களுக்கு கிளிநெச்சியில் முத்தமிழ் விழா நடைபெறவுள்ள செய்தி கிடைத்து திகைப்படைந்தேன். இந்நிகழ்ச்சியை உங்களுடன் தொடர்பு கொண்டு இரத்து செய்யுமாறு என்னிடம் பல மக்கள் கேட்டுள்ளனர். கிளிநெச்சி பொதுமக்களில் கணிசமானவர்கள்இ இது மகிழ்ச்சி கொண்டாட்டங்களுக்கு உகந்த நேரம் அல்ல எனக் கூறி இவ்விழாவை இரத்துச் செய்யுமாறு கோருகின்றனர். கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தனது விசாரணைகளை கிளிநெச்சியிலும் முல்லைத்தீவிலும் நடத்திய போது அவர்கள் முன் கூடி நின்ற பெரும் தொகை மக்கள் எனது கூற்றுக்கு சான்று பகர்வார்கள்.

மக்கள் தமது தடு;ப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருக்கும் பிள்ளைகளைப்பற்றியும்இ காணாமல் போய் உள்ள உறவினர்களைப் பற்றியும் சொல்லண்ணாத் துயரில் இருக்கும் போது அவர்கள் எதுவித கொண்டாட்டங்களிலும் கலந்து கொள்ளும் மன நிலையில் இல்லை. மேலும் மீளக்குடியமர்த்தப்பட்டவர்கள் எனக் கூறப்படும் இவர்கள் சொல்லெணா கஸ்டங்களை அனுபவித்துக் கொண்டு இன்றும் இருக்கின்றனர். அவர்களின் அனேகமான வீடுகள் கூரை அற்ற நிலையிலும்இ மனித சஞ்சாரத்துக்கு தகுதியற்றவைகளாகவே இன்றும் இருக்கின்றன். பிள்ளைகள் உள்ள குடும்பங்கள் அதிகளவான கஸ்டங்களை அனுபவிக்கின்றனர். தொடர்ந்து முகாம்களில் உள்ள அவர்களுக்களுடைய உறவுகள் படும் கஸ்டமோ மிக மோசம்.

தயவு செய்து இந்நிகழ்ச்சியை நடத்துவதில் உங்களுக்குள்ள கஸ்டங்களை அதிகரிகளுக்கு எடுத்துக் கூறி இந் நிகழ்ச்சியை இரத்துச் செய்யவும். யாழ் மத்திய கல்லூரி அதிகரிகளுக்கும்இ திருமறை கலாமன்றத்தினருக்கும் எனது வேண்டுகோளை பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

நன்றி

இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள


வீ.ஆனந்தசங்கரி
தலைவர்
தமிழர் விடுதலைக் கூட்டணி

PRESS REPELASE

2010-09-21

PRESS RELEASE

The Tamil United Liberation Front expresses its deepest sympathies to the Kith and Kin of the victims of the Karadiyan Aaru explosion. It is very unfortunate that someone’s negligence and inexperienced handling of explosives, apart from taking 25 innocent lives, also caused injuries to over 50 people, some seriously. Since it is difficult to contact the family of each victim, the TULF requests the Chief Minister of the Eastern Provincial Council, the Chinese Embassy and the Inspector General of Police to convey to the respective bereaved families, the concerns of the TULF and its message of condolence to the relatives of each Person killed. Praying for early recovery of the injured persons.


V. Anandasangaree,
President
Tamil United Liberation front

பத்திரிகை அறிக்கை

2010-09-21

பத்திரிகை அறிக்கை

கரடியன் ஆறு வெடிவிபத்தில் சிக்குண்டு மரணித்த அப்பாவிகளின் உற்றார் உறவினர்களுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி தனது ஆழ்ந்த அனுதாபத்தை தொரிவிக்கின்றது. யாரோ ஒருவரின் கவனயீனத்தாலும் வெடி பொருட்களை கையாழும் முறையில் அனுபவம் இல்லாதவரின் செயலால் அப்பாவிமக்கள் 25 பேர் உயிரிழந்ததும் 50 பேருக்கு மேற்பட்டோர் காயம் அடைந்ததும் சிலர் படுகாயம் அடைந்ததும் துர் அதிர்ஸ்டமே.

பலியானவர்கள் சகலரின் உறவினர்களுடன் தொடர்பு கொள்ளுவது முடியாதமையினால்இ கிழக்கு மாகாண சபை முதல் அமைச்சர்இ சீன தூதராலயம்இ பொலீஸ் பிரதம அதிகாரி ஆகியோரை சம்பந்தப்பட்டவர்களின் உறவுகளுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்குமாறு கூட்டணி வேண்டுகின்றது. காயமுற்றோர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றோம்



வீ.ஆனந்தசங்கரி
தலைவர்
தமிழர் விடுதலைக் கூட்டணி

ஊடகச் செய்தி


தமிழர் விடுதலைக்கூட்டணியின் முன்னாள் செயலாளர்நாயகமும்இ பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கையின் முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான திரு.அ.அமிர்தலிங்கம் அவர்களினதும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான திரு.வெ.யோகேஸ்வரன் அவர்களினதும் 21வது நினைவு தினம் இன்று தமிழர் விடுதலைக்கூட்டணியின் யாழ்.மாவட்டத் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. கூட்டணியின் யாழ். மாநகரசபை உறுப்பினர் இரா.சங்கையா தலைமையில் இன்று முற்பகல் 10.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்ற இந்நிகழ்வில் ஈகைச்சுடரை கூட்டணியின் முன்னால் உடுவில் கிராமசபை தலைவர் ச.முத்துலிங்கம். கூட்டணியின் முத்த உறுப்பினர்களில் ஒருவரான த.பூலோகரட்ணம் ஆகியோர் ஏற்றினர். அமிர்தலிங்கம்இ யோகேஸ்வரன் ஆகியோரது உருவப்படங்களுக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டுஇ மலரஞ்சலி செலத்தப்பட்டது.




தொடர்ந்து நினைவுரைகள் இரா.சங்கையா தலைமையில் நடைபெற்றது. ஆசிரியர் செ.முத்துலிங்கம்இ முன்னாள் மாநகரசபை உறுப்பினர் செ. விஜயரத்தினம்இ ச.முத்துலிங்கம்இ திருஞானசம்பந்தர் ஆகியோர் நினைவுரைகள் நிகழ்த்த நன்றியுரையினை தமிழர் விடுதலைக்கூட்டணியின் ஊடகச்செயலாளர் த.கஜன் நிகழ்த்தினார். தமிழர் விடுதலைக்கூட்டணியின் ஆதரவாளர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஊடகச் செய்தி

கோப்பாயில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் ‘மாவீரர் துயிலுமில்லத்தை’ இடித்தழிக்கும் நடவடிக்கைகளில் படையினர் ஈடுபட்டிருப்பதால் அப்பகுதியில் தற்காலிகமாக தங்கியுள்ள குடும்பங்களை உடனடியாக வெளியேறுமாறு படையினர் கோரியுள்ளனர்.

உயர்பாதுகாப்பு வலயமான வலிகாமம் குரும்பசிட்டி தெற்கிலிருந்து இடம்பெயர்ந்த இவர்கள்இ 1994ம் மாதம் இடம்பெற்ற இடப்பெயர்வின் போது வன்னிக்குச் சென்று கிளிநொச்சி அக்கராயன் குளத்தில் வசித்து வந்தனர். கடந்த வருடம் வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரில் குடும்பத் தலைவர்களை இழந்த நிலையில் வவுனியா அகதி முகாமிலிருந்து விட்டு தற்போது யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் கூடாரங்கள் அமைத்து இவர்கள் வசித்து வருகின்றனர்.

இவர்களின் நிலை குறித்து அறிவதற்காக இன்று பிற்பகல் தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ்.மாநகரசபை உறுப்பினர் இரா.சங்கையாஇ அதன் ஊடகச் செயலாளர் த.கஜன் ஆகியோர் உள்ளிட்ட குழுவினர் அப்பகுதிக்குச் சென்று அம்மக்களைப் பார்வையிட்டுஇ அவர்களின் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தனர்.

தாங்கள் மிகவும் வறியநிலையில் வாழ்வதாகவும் தங்களுக்கான நிவாரண உதவிகள் கூட மூன்று மாதங்களாக நிறுத்தப்பட்டு விட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். தங்களின் சொந்தக் காணிகள் உயர்பாதுகாப்பு வலயத்துள் இருப்பதால் அங்கு செல்ல முடியாமலிருப்பதாகவும்இ தங்களுக்கு தங்கியிருப்பதற்கான மாற்று இடங்களும் காட்டப்படாத நிலையில் எங்கு செல்வதென தெரியாத நிலையிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இம்மக்களின் பிரச்சினைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூட்டணியினர் அம்மக்களிடம் தெரிவித்தனர். .இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட ஊடக அறிக்கை.




ஊடகச் செய்தி 2010-07-12

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல பகுதியில்
தற்காலிகமாக தங்கியுள்ள மக்களை வெளியேற்றப் பணிப்பு

மேற்படி செய்தி இன்று ஊடகங்களில் வெளியாகியுள்ளதை பார்த்த பொழுது எமக்கு அதிர்ச்சியாக உள்ளது. எமது தமிழ் மக்களுக்கு எந்த இடம்தான் நிரந்தரமானது என்று எவராலும் உறுதிப்படுத்த முடியாதுள்ளதை எண்ணும் போது வேதனைப்படுவதை தவிர வேறு என்னதான் செய்யமுடியும்? வலிகாமம் உயர் பாதுகாப்பு வலயத்தைச் சேர்ந்த இந்த மக்களுக்கு இதுவரை எந்த ஒரு ஏற்பாடும் செய்யாமல் அவர்களை வெளியேறச் சொன்னால் அவர்கள் எங்கே போவார்கள் என்பதனை யாராவது சிந்தித்திருக்கின்றார்களா? இவர்களுக்கான மாற்று ஏற்பாடுகள் செய்யாமல் அவர்களை வெளியேற்றுவதை தமிழர் விடுதலைக் கூட்டணி வன்மையாக கண்டிக்கின்றது.

அத்துடன் வன்னிப் பெருநிலப்பரப்பில் இருந்து எமது உறவுகள் படுகொலை செய்யப்பட்டும்இ அநாதைகள் ஆக்கப்பட்டும்இ அந்த மண்ணை விட்டே வெளியேற்றப்பட்ட போது கூட வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டு பாராளுமன்ற பதவியின் இறுதி நாள் சம்பளம் வரை வாங்கிய எமது தமிழ் தலைவர்களுக்கு இது ஒரு பெரிய விடயமாக இருக்கப் போவதில்லை என்பது எமக்குத் தெரியும். ஏனைய அமைப்புக்கள்தான் இதனைத் தட்டிக் கேட்கவேண்டும். எனவே இந்த விடயத்தில் கருணை உள்ளம் கொண்ட அமைப்புக்கள்தான் சரியான முடிவினை எடுப்பதற்கு சம்பந்தப்பட்டவர்களுக்கு இடித்துரைக்க வேண்டும். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் எம்மக்களுக்கு இன்னல்கள் ஏற்பட்ட போதேல்லாம் கைகட்டிக்கொண்டு வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களைத்தான் எமது மக்கள் மீண்டும் பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைத்தார்கள். அதுதான் எமது மக்களின் சாபக்கேடு. எது எவ்வாறாயினும் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுக்க நாம் தயாராகவே உள்ளோம். சம்பந்தப்பட்டவர்களுடன் இது பற்றி விவாதித்து நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம்.

முல்லைத்தீவில் முன்னோடியக இராணுவமுகாம் அமைப்பதும் வடக்கு கிழக்கில் இராணுவத்தினருக்கு வீடுகள் அமைப்பதும் இன்று உசித்தமான செயல் அல்ல

ஊடக அறிக்கை. 2010-07-02
முல்லைத்தீவில் முன்னோடியக இராணுவமுகாம் அமைப்பதும்
வடக்கு கிழக்கில் இராணுவத்தினருக்கு வீடுகள் அமைப்பதும்
இன்று உசித்தமான செயல் அல்ல

முல்லைத்தீவில் முன்னோடியாக ஒரு இராணுவ முகாம் அமைப்பதையும், இராணுவத்தினருக்கு வடக்குகிழக்கில் நிரந்தர வீடுகள் அமைத்துக்கொடுப்பதாக அரசு எடுத்த முடிவையும் இன்றைய சூழ்நிலைக்கு ஒவ்வாதெனவும், எதிர்பார்த்த விளைவை கொடுக்காதெனவும், விரைவில் ஓர் அனர்த்தத்திற்கு வழிகோலும் எனவும் வெளிப்படையாக எனது கருத்தை தெரிவிக்க விரும்புகின்றேன். இந்த முடிவை புத்திசாதுரியமற்ற முறையில் நான் ஆட்சேபித்து குளவி கூட்டுக்கு கல்லெறிந்தவன் போன்ற நிலைக்கு ஆளாகமாட்டேன். நான் எதைச் சொன்னாலும் எதைச் செய்தாலும் தேசப்பற்றுடனேயே நோக்குவேன். அரசு உடனடியாக இவ்விரு நடவடிக்கைகளையும் நிறுத்தி ஏற்கனவே திறக்கப்பட்ட இராணுவ முகாமை மூடி புதிதாக இராணுவமுகாம் எதையும் திறக்க வேண்டாம் எனவும் ஆலோசனை கூறுகின்றேன். அரசாங்கம் எனது கருத்தை பாராட்டி எனது ஆலோசனைக்கு மதிப்புக்கொடுக்கவேண்டும்.

விடுதலைப் புலிகளோடு போராடி வெற்றி கண்ட நல்ல ஒரு இராணுவம் இருந்தது. விடுதலை இயக்கமாக ஆரம்பித்து பின் காலப்போக்கில் மக்களுக்கும்இ மக்களின் சொத்துக்களுக்கும் பெரும் இழப்புகளை உருவாக்கிய இயக்கத்தை தோற்கடிக்க பொதுமக்களும் பெருமளவில் உதவினர். முழுநாடும் சொல்லமுடியாத துயரை அனுபவித்தது. வடக்கு கிழக்கு மக்கள் அடைந்த இழப்புக்கள் பட்ட கஷ்டங்கள் பற்றி நான் விபரிக்க முன் வரவில்லை. எதிர்காலத்தில் இதேபோன்ற ஒரு நிலை மீண்டும் உருவாகுவதை அவர்கள் விரும்பவில்லை. எவரேனும் அதைப்புதுப்பிக்க முயற்சித்தால் அந்தச் சவாலை அவர்கள் எதிர்கொள்ளத் தயாராக உள்ளனர். விடுதலைப் புலிகளிடம் சிறந்த ஆயுதங்கள் இருந்தமையினாலேயே அவர்களால் மக்களை கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க முடிந்தது மட்டுமல்ல நிரந்தரப் பயப்பீதியுடன் வாழவைக்க முடிந்தது. நட்புறவுடன் பழகக்கூடிய இராணுவம் அமைந்துள்ளமை எமக்கு மகிழ்ச்pயைத் தருகின்றது. ஆனால் அவர்கள் மத்தியிலும் சில கறுப்பாடுகள் கலந்திருக்கக்கூடும். எது எப்படி இருப்பினும் இலங்கையராகிய நாம் வேண்டுவது வெறும் அமைதி மட்டுமல்ல பூரணமான அமைதியான வாழ்க்கையே. எவரின் கையிலும் ஆயுதம் இருப்பதை நாம் விரும்பவில்லை. தமிழர், சிங்களவர், இஸ்லாமியர், மற்றும் வேறு இனத்தவர், புலிகள், போர்வீரர்கள், பொதுமக்கள் ஆகியோர் இரண்டு இலட்சத்திற்கு மேற்பட் உயிர்களை நாம் இழந்துள்ளோம். ஆனால் அவர்கள் அனைவரும் நம் நாட்டு பிரஜைகளே.

ஆகவே நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து இராணுவ ஆட்சியோ பொதுமக்கள் மத்தியில் இராணுவ குடியிருப்புகளோ வேண்டாம் என ஒரே குரலில் கூறுவோம். நாம் வேண்டுவது இராணுவ தலையீடற்ற சிவில் நிர்வாகமே. பொம்மைக் கடைகளிலும் விளையாட்டுத்துப்பாக்கிகள் கூட விற்பதனை நாம் வெறுக்கின்றோம். எமக்கு துப்பாக்கிக் கலாச்சாரம் வெறுத்துவிட்டது. அரசு மட்டும் முன்னின்று நாட்டில் உள்ள ஆயுதங்களை மீளப்பெறுவதோடு இராணுவத்தின் நடமாட்டத்தையும் கட்டுப்படுத்தி முகாம்களிலேயே தங்க வைக்குமானால் பொதுமக்களாகிய நாங்கள் வேறு எவரிடமும் ஆயுதம் இல்லாது பார்த்துக்கொள்ளுவோம்.

இறுதியாக அரசு எனது வேண்டுகோளை செவிமடுத்து மக்களை அமைதியாக வாழ விட வேண்டும் என மிகவும் மன்றாட்டமாக வேண்டுகின்றேன். மக்கள் எதுவித மேலாதிக்கமும் இன்றி சுகந்திரமாக நடமாட தொடங்கும்போது ஏனைய விடயங்களை பற்றி ஆலோசிக்கலாம். அப்படிச் செய்யத்தவறினால் இவ்வளவு காலமும் எடுத்த முயற்ச்சிகள் பல்வேறு பிரிவு மக்கள் செய்த தியாகங்கள் அத்தனையும் விழலுக்கிறைத்த நீராகிவிடும். தமக்கு இஷ்டம் இல்லாத விடயங்கள் பற்றி நேரடியாக தெரிவிக்கும் தைரியமின்றி மக்கள் முணுமுணுக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களின் கவலைகள் எல்லாம் எதுவித கருத்துக்களையும் சாத்வீகமான முறையில் எடுத்துக் கூற கூடிய நிலை இன்று நாட்டில் இல்லையே என்பதே. நான் உறுதியாக கூறிக்கொள்ள விரும்புவது என்னவேன்றால் அரசாங்கம் அவ்வறான நடவடிக்கைகளை கைவிடாது விட்டால் நாட்டின் ஒருபகுதி மக்களுக்கு அமைதியை கொண்டுவந்ததாக தம்பட்டம் அடிக்க முடியாது. நான் தெரிவிப்பது மக்களின் குரலே.


வீ.ஆனந்தசங்கரி
தலைவர்
தமிழர் விடுதலைக் கூட்டணி

OPENING AN ARMY CAMP AT MULLAITHEVU AND CONSTRUCTION OF HOUSES FOR THE ARMY ARE ILL-TIMED

PRESS RELEASE. 2010-07-02


OPENING AN ARMY CAMP AT MULLAITHEVU AND CONSTRUCTION OF HOUSES FOR THE ARMY ARE ILL-TIMED


I am frankly of the opinion that the opening of an Army Camp at Mullaithevu as a fore-runner and the decision of the Government to build permanent houses for the Army are ill-timed, counterproductive and will very soon prove disastrous. I am not that foolish as to stir up a hornet’s nest by protesting against these moves. Whatever I do and say are always with patriotic feelings. My sincere advice is that the Government should forthwith stop opening any more new camps in Vanni, close down the one already opened and also abandon the idea of constructing permanent houses in the North and the East for the use of the Army. The Government should understand and appreciate my thinking and give credibility to my suggestions.

We had an army that fought well and defeated the LTTE. We had a good set of civilians who gave full corporation to the forces to defeat the LTTE, which started as a liberation movement and later turned out to be one causing destruction of life and property, without rhyme or reason. The whole country suffered. I need not elaborate the extent of damage the people in the North and the East suffered and the hardships they underwent. They do not want a similar situation to arise again in the future. They, on their own will take up the challenge in the event of any attempt for revival. They lived for over quarter of a century under the subjugation of the LTTE which was possible only because of the LTTE possessing sophisticated arms. We now have in our midst the man who purchased the arms for the LTTE to keep us not only under their subjugation but also made us to live in constant fear and tension. We have a friendly army now and we are happy about it. But they may have in their midst a few black sheep as well. In any case we the people of Sri Lanka want peace and absolute peace only. We don’t want to see arms in anybody’s possession. We lost over two hundred thousand lives due to the arms. Let they be Sinhalese Tamils Muslims or any of other ethnic group and also be Tigers or Soldiers or Civilians, all the lives lost are those of Sri Lankan Citizens.

Let all of say with one voice that we do not want military rule or military settlements amidst civilians. We want civil administration and do not want to see even a toy pistol in the toy shops. We are fed up with Gun culture and we civilians will not allow anyone to possess arms if only the Government will give the lead by withdrawing all arms in the country and the army barracked.

I strongly plead with the Government to concede to my request and help the people to live peacefully. All other matters can be sorted out once normalcy is restored and people feel free from all types of dominations. Otherwise all the efforts taken so far and all the sacrifices made by all section of the people will go waste. The people have already started murmuring about matters that they don’t have the guts to comment on, openly. Their regret is that there is no room to show even passive resistant on matters they do not agree. I very strongly emphasis that if these moves are not abandoned the Government can’t boast of bringing peace to a section of the people who had under gone immense hardships for a long time. I am voicing the sentiments of the people.




V.Anandasangaree,
President
Tamil United Liberation Front

அரசுக்கு உதவ முன் வந்துள்ள முன்னை நாள் இயக்கப் போராளிகளின் ஆதரவாளர்களும் புத்திஐீவிகளும் யார்?

2010-06-25

அரசுக்கு உதவ முன் வந்துள்ள முன்னை நாள் இயக்கப் போராளிகளின் ஆதரவாளர்களும் புத்திஐீவிகளும் யார்?

யுத்தம் முடிந்த பின் நாட்டின் புனர்நிர்மாணம், மீளக்கட்டியெழுப்புதல் போன்றவகைகளுக்கு அரசுக்கு உதவ முன்னைநாள் போராளிகளின் அனுதாபிகள் புத்திஐீவிகள் முன்வந்துள்ளதாகிய செய்தி வெறும் கேலிக் கூத்தாகும். யார் இந்த கே.பி என அழைக்கப்படும் பத்மநாதன் என்பவர்? அவருக்குரிய நன்மதிப்பு தராதரம் என்ன? பிற நாடுகளில் இருந்து தூது குழுவாக வருகை தந்து அரச உயர் அதிகாரிகளுடன் பேசி நாட்டின் புனர்வாழ்வு மீள் கட்டுமானப் பணிகளுக்கு உதவ வந்துள்ள புத்திஐPவிகளாக வர்ணிக்கப்படும் இவர்கள் யார்?. சர்வதேச அரங்கில் பிரசித்தி பெற்ற பெயர் போன பயங்கரவாதியாக முத்திரை குத்தப்பட்ட கே.பி.யின் தலைமையில் இக் குழு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரையும் வெளிவிகார அமைச்சரையும் சந்தித்துள்ளது என்ற செய்தி எனக்கு பெரும் ஆச்சரியமாகவும் அனேகமாக முழு இலங்கையருக்கு அதிர்ச்சியும் தந்துள்ளது.

திரு.பிரபாகரன் மரணித்த உடன் அவரின் வாரிசாக உரிமை கோரிக்கொண்டு விடுதலைப்புலிகளின் தலைவர் எனக் கூறிக்கொண்ட திரு. கே.பி அவர்கள் அதிகாரிகளிடம் தானாக சரணடையவில்லை. மிக்க தந்திரமான முறையில் அவர்கள்; கைது செய்யப்படாதிருந்தால் இன்று அவர் கடந்த காலத்தில் திரு. பிரபாகரன் யார் யாருக்கு அச்சுறுத்தலாக இருந்தாரோ அத்தனைபேருக்கும் இவர் அச்சுறுத்தலாக இருந்திருப்பர். இப்போது கூட அவர் எதிர் காலத்தில் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் அச்சுறுத்தலாக இருக்கமாட்டார் என்பதற்கு எதுவித உத்தரவாதமும் இல்லை. அரசுக்கு அதன் புனர்நிர்மாண மீள் கட்டுமாண பணிகளுக்கு அரச உயர் அதிகாரிகளை சந்தித்து உதவ முன்வந்துள்ள தூது குழுவில் இடம் பெற்றுள்ள புத்திஐீவிகளாக வர்ணிக்கப்படும் இவர்கள் யார்? சரிபிழைகளை ஆராய்ந்து அறிவை வளர்ப்பவரே புத்திஐீவியாவார். ஆனால் இந்த புத்திஐPவிகள் என்ன செய்தார்கள். சரிபிழைகளை ஆராய்ந்து முடிவெடுக்கும் ஆற்றல் இவர்களுக்கு இருக்கிறதா?

சிறிய அபிப்பிராய பேதங்களுக்கு நாம் இடம் கொடுக்கப்படாது. பல கஸ்டங்களுக்கு மத்தியில் வென்றெடுத்த சமாதானத்தை நிலைக்கச் செய்ய வேண்டும் என்று திரு கேபியோ அன்றி அவரின் அணியில் உள்ள வேறுயாருமோ எமக்கு கூறுவது கேலிக்கிடமாகும். இலங்கையராகிய நாங்கள் இந்த புத்திஐPவிகள் யார் என்பதனையும் வெளிநாட்டில் வாழும் விடுதலைப்புலிகளின் நடவடிக்கைக்கு உதவுபவர்கள் நாட்டின் கள நிலையை விளங்கிக் கொள்ள தொடங்கிவிட்டார்கள் என்று உத்தரவாதம் தருவதற்கு இவர்களுக்கு என்ன அருகதை இருக்கின்றது.

இவர்களுக்கு இதுவரை காலமும் கள நிலை பற்றி விளங்காமல் போனது கவலைக்குரியதே. மீண்டும் ஒரு தடவை எவரேனும் எம் மீது சவாரி செய்ய அனுமதிக்கக்கூடாது. இத்தகைய எவருடனும் அரசு எத்தகைய தொடர்பு வைத்திருப்பதை ஆட்சேபிக்கும் உரிமை எனக்குண்டு. இவர்களுடன் நாம் உறவு வைத்திருப்பதை பார்த்து உலக நாடுகள் நகைக்கும் என்பதோடு இந்நாட்டு மக்கள் ஒருவர் இருவருக்கு மட்டுமல்ல முழு நாட்டுக்குமே துரோகம் செய்ததாக கருதப்படும். நம் நாட்டில் வாழும் ஒவ்வொருவரும் எதோ ஒரு விதத்தில் இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் தான். நாம் ஏறக்குறைய இரண்டு லட்சம் உயிர்களை இழந்துள்ளோம். அவற்றில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள்இ ஆயிரக்கணக்கான படை வீரர்கள் பலாத்காரமாக விடுதலைப்புலிகளுடன் இணைக்கப்பட்ட போராளிகள் பலர் அடங்குவர். ஒன்றரை இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் விதவைகளாக்கப்பட்டதோடு ஆயிரக்கணக்கானவர்கள் அனாதைகளாகவும் ஆதரவற்றவர்களாகவும் ஆக்கப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் மட்டும் 42000 பேர் விதவைகள் உருவாக்கப்பட்டுள்ளனர். எத்தனையோ போர் தமது பார்வைகளையும் கால் கைகளையும் இழந்துள்ளனர். இரு கால்களையும் இரு கைகளையும் இழந்தவர்கள் ஒரு காலால் நடப்பவர்கள் தவழ்ந்து திரிகின்றவர்கள் இவ்வாறு பலர். இந்த அப்பாவிகள் அiனைவரும் எஞ்சியுள்ள நாட்களை இப்படித்தான் செலவிட வேண்டும் என்பது விதி. எத்தனை ஆயிரம் மாணவர்கள் தம் கல்வியை இழந்துள்ளனர். இப்பிள்ளைகளின் பெற்றோர்கள் தம் பிள்ளைகள் பலாத்காரமாக கொண்டு செல்லப்பட்டு உயிரற்ற சடலங்களாக கண்டபோது அனுபவித்த கவலைகள் பற்றி இப் புத்திஐPவிகள் அறிவார்களா? ஏதாவது ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டு அல்லது தமக்கு மிகவும் விருப்புடைய ஒரு உறவை இழந்திருந்தால் மட்டும்தான் இந்த வேதனையை உணர முடியும். எத்தனை குடும்பங்கள் முழு உறவினரையும் சில குடும்பங்கள் உறவுகள் சிலரையும் இழந்துள்ளனர். பல கோடி பெறுமதியான தனியார் பொது சொத்துக்கள் அழிக்ககப்பட்டுள்ளன. கிளிநொச்சி முல்லைத்தீவு பகுயில் முழுமையான ஒரு வீடும் இல்லை. வவுனியா மன்னார் யாழ்ப்பாணத்தின் ஒரு பகுதிக்கும் இதே கதிதான். கிழக்கு மாகாணத்தில் இடம் பெயர்ந்து இரண்டு ஆண்டுகளின் பின்பும் எமது மக்கள் கூடாரங்களில் தான் வாழுகின்றனர். கிளிநொச்சி முல்லைத்தீவில் உள்ள கிராமங்களுக்குள் சென்று அக்கிராமங்கள் எவ்வாறு சீரழிக்கப்பட்டு;ள்ளன என்றும் அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள அழிவுகளையும் அரசு பார்வையிட வேண்டும். முல்லைத்தீவு கிளிநெச்சி மக்கள் முற்றாகவும் மன்னார் வவுனியா பகுதியில் உள்ள மக்களில் பெரும் பகுதியும் வீட்டுக்கூரை யன்னல் கதவு உட்பட எதுவும் இல்லை. உண்மையாக நான் ஏமாற்றப்பட்டுவிட்டேன்; என்பதை உணருகின்றேன். கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக துன்பங்களை அனுபவித்த மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள ஏமாற்றம் எனக்கு ஏற்பட்டதை விட அதிகமாகும். இப்புத்திஐPவிகள் எங்கிருந்து வந்தார்களோ சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு இவர்களை நாடுகடத்தி தரும்படி இலங்கையரசு கோரிக்கை விடவேண்டும். இதுவரை எநத் ஒரு நாடும் விடுதலைப்புலிகளி;ன் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கவில்லை. இந்தியாவும் அமெரிக்காவும் அண்மையில் தடைகளை நீடீத்துள்ளன.

இத்தகைய நபர்களே நாம் இழந்த அத்தனை இழப்புக்கும் சம பொறுப்பை ஏற்க வேண்டும் என்ற காரணத்தினால் அவர்களை உபசரிப்பது மறைமுகமாக அவர்களின் தடைகளை நீக்குவதற்குச் சமமாகும். விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் கூட விடுதலைப்புலிகளின் கடும் போக்காளர்களை இராணுவம் உபசரிக்கும் போது தடுப்புக்காவலில் உள்ள 10000 பேரில் பெரும் பகுதியினர் விடுதலைப் புலிகளினால் பலாத்காரமாக சேர்க்கப்பட்டிருப்பதனால் அவாகளை ஏன் தொடர்ந்தும் தடுப்புக்காவலிலும் சிறையிலும் ஏன் அரசு வைத்திருக்கின்றது என்று கேட்கின்றார்கள். இத்தகைய நபர்கள் தான் பின்னனியில் இருந்து எமக்கு ஏற்பட்ட உயிர் இழப்புகளுக்கும் பொருள் இழப்புகளுக்கும் பொறுப்பாக இருந்திருக்கின்றார்கள். ஆகவே அரசு வீடு முற்றாகவும் பகுதியாகவும் இழந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து முழு நட்ட ஈடு வழங்க வேண்டும். இரண்டாவதாக உயிர் இழப்புகளுக்கு முன்னுரிமை கொடுத்து ஏனைய இழப்புகளுக்கும் முழு நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும். அரசு மேலும் தாமதிக்காது மக்களுக்கு ஏற்பட்ட பல்வேறு இழப்புகளின் பெறுமதியை கணக்கிடும் நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும். குண்டு வெடிப்பு தற்கொலைத் தாக்ககுதல் கண்ணிவெடி போன்றவற்றிற்கு பலியாகிய நாட்டின் பல் வேறு பகுதிகளிலும் சேர்ந்தவர்களுக்கு முழு நட்ட ஈடு வழங்க வேண்டும். நாட்டின் பிற பகுதியில் இருந்து 500 ரூபாயுடன் வெளியேற்றப்பட் இஸ்லாமிய மக்கள் முழு சொத்தையும் இழந்தமையால் முழு நட்ட ஈட்டுடன் மீள குடியமர்த்தப்பட வேண்டும். அன்று தொட்டு இன்று வரையும் இவர்களில் அனேகர் மிக வறுமைப்பட்டு வாழ்கின்றார்கள்.

இந்த நபர்களின் பல் வேறு நாடுகளிலும் உள்ள சொத்துகளை பறிமுதல் செய்ய சம்பந்தப்பட்ட அரசுகளுடன் இலங்கை அரசு தொடர்புகொள்ள வேண்டும். இவர்கள் எல்லோரும் இலட்சியத்துடன் செயறட்படாது சுயநலத்துடன் செயற்படுகிறார்கள் என்பது தெரியாமல் கண்மூடிதனமாக விடுதலைப் புலிகளை ஆதரித்த நபர்களின் தற்போதய கருத்து இதுவாகும். பல ஆண்டுகள் அமைதியான தூக்கம் இன்றி சுகந்திரமான முறையில் வீதியில் நடமாட முடியாது கருத்துக்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டு சிலரைப் போல் வாழ்ந்தவன் நான்.

இதுபலவிதத்தாலும் பாதிக்கப்ட்ட ஒரு தனி மனிதனின் உணர்ச்சிமிக்க உள்ளக் குமுறலின் வெளிப்பாடாகும ;.கிளிநொச்சியில் வாழுகின்ற உரிமை மறுக்கப்பட்டது உட்பட. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் மக்களின் குறிப்பாக வட-கிழக்கு வாழ் மக்களின் கருத்துக்களினைத்தான் நான் பிரதிபலிக்கின்றேன். நான் செய்வது தவறு என யாரும் கருதினால் நான் அவர்களிடம் அதற்கு மன்னிப்புக் கோரி ஒத்த கருத்துள்ளவர்களை எனது பணி தொடர ஆதரவு நலகுமாறு வேண்டுகிறேன்.



வீ. ஆனந்தசங்கரி
தலைவர்
தமிழர் விடுதலைக் கூட்டணி

WHO ARE THE INTELLECTUALS AND EX-MILITANT SYMPATHIZERS WANTING TO ASSIST THE GOVERNMENT.

WHO ARE THE INTELLECTUALS AND
EX-MILITANT SYMPATHIZERS WANTING TO
ASSIST THE GOVERNMENT.

It is real mockery for the Government to seek or accept the offer of assistance of Tamil intellectuals and ex-militant sympathizers for post-conflict rehabilitation and reconstruction activities. Who is this K.P alias Pathmanathan?. What are his credentials? Who are these so called intellectuals who came from abroad on a delegation to meet top officials of the Government and offered to assist in the rehabilitation and reconstruction activities in the country. The news that this team of so called intellectuals headed by the notorious terrorist Mr. KP of international fame had met the Defense Secretary and the Minister of Foreign Affairs, come to me not merely as a surprise but also as a great shock to almost all Sri Lankans

Mr. KP is the person who claimed to be the head of the LTTE succeeding Mr. V.Prabaharan on his demise, never surrendered to the authorities on his own. If he was not arrested tactfully today he would have been a threat to everybody who faced threat from Mr. Prabaharan in the past. In-fact even now there is no guarantee that he won’t be a potential threat to the country and its people. Who are these unidentified intellectuals who have come on a delegation to meet top Government Officials and offer assistance to the Government for rehabilitation and reconstruction. An intellectual is a person who has the power of reasoning and acquiring knowledge. But what did these intellectuals do? Did they have any power to reason out things.

It is ridiculous for K.P or any one in his team to tell us that there should not be room for petty differences and that all must work towards stabilizing the hard earned peace. We Sri Lankans wish to know the identities of these so called intellectuals and also want to know from them as to what credibility they have to give an undertaking that several tiger activists, living abroad, have now begun to understand the ground realities. It is a pity that they did not understand the ground realities all these days. Let no one take us for a ride once again. I have every right to protest to the Government not to have anything to do with anyone of them. The whole world will laugh at us if we entertain them and it will amount to betrayal of our people, not one or two but the entire country. Every one of our people in this country had been a victim in one way or the other. We lost over two hundred thousand lives, that include several thousand innocent civilians, thousands of service personnel, and the LTTE combatants, most of whom were conscripted. More than one hundred and fifty thousand had been widowed and several thousand had been orphaned or had become destitute persons. In the East alone there are 42,000 widows. How many had lost their eyesight and limbs. There are many without both their legs, without both hands, some move about on one leg and many crawl about. All these innocent ones are destined to suffer for the rest of their lives. How many thousand students had been deprived of their education. Surely these intellectuals should know to what extent the parents would have suffered when their school going children were conscripted and brought back home dead. One should have become a victim under one of these categories or must have lost a dear one to feel the pain. How many families have lost all the members of the family, parts in some others. How many billions and billions worth of property both public and private had been destroyed. Hardly one person has his house in tact in Kilinochchi and Mullaithevu, Vavuniya and Manner and to some extent Jaffna also suffered a lot. The East still have people who live in tents even after two years of their displacement. The Government should send them to the interior villages of Mullaithevu and Kilinochchi to see for themselves, how devastated Vanni is and the destruction caused. The people of Mullaithevu, Kilinochchi and parts of Vavuniya and Mannar have nothing left in their homes including roofs, windows and doors of their houses.

I honestly feel that I am betrayed and the others who had suffered for quarter of a century will feel more. The Government should have asked the respective Governments from where they came for their extradition. So far not a single country has lifted its ban on the LTTE. India and U.S has renewed their ban on the LTTE. The act of entertaining these people who are equally responsible for all the losses the country and the people have suffered will amount to tacit lifting of the ban on the LTTE. The supporters of the LTTE now ask if these hard core elements are being entertained by the Forces, why should the Government keep ten thousand of our children, most of whom are innocent, in rehabilitation camps and in jails.

These are the type of people who, from behind the scene, directing operations and caused the loss of thousands of innocent lives and destruction of several billions worth of public and private property and hundreds of thousand houses of innocent people. As a first priority the Government should use this money to give full compensation for the houses destroyed totally or damaged. As the second priority compensation should be given for the other losses, loss of lives in particular. The Government must now without further delay start assessing the loss everyone had suffered due to the foolish act of these people. Those who died in Bomb-blasts, suicide attacks and land-mines spread all over the country, should be fully compensated. All the Muslims who were sent out of the North by the LTTE left behind everything and were allowed to take only Rs. 500 each. All these families had been living in poverty all these days. Assistance of all Governments should be sought to cease all funds, these people have all over the world. There are views of the people who quite innocently and blindly supported the LTTE, little knowing that these people were not genuinely fighting for a cause but only for personal gains. I am one who for several years did not sleep peacefully, did not have the freedom to walk on the streets or to express my views which had been blacked out, although it is the same with many like me.

This is an emotional outburst of one who had been victimized, in several ways including the right to live in Kilinochchi. I am reflecting the views of hundreds of thousands of people from all parts of Sri Lanka, the people of the North and the East in particular. If anyone feel that I am wrong, I apologize to them. Those who agree with me can give me their support to take my mission forward.

Thanking You.
Yours Sincerely,


V. Anandasangaree,
President
Tamil United Liberation Front