வன்னிக்கு பொதி ஏற்றிச் சென்ற வாகனங்கள் சம்பந்தமாகவும்

24.05.2009
மேஜர் ஜெனரல் சந்திரசிறி
தகுதிவாய்ந்த அதிகாரி - இடம் பெயர்ந்தோர் முகாம்
இராணுவத் தலைமையகம - வவுனியா.

அன்புள்ள தளபதி

வன்னிக்கு பொதி ஏற்றிச் சென்ற வாகனங்கள் சம்பந்தமாகவும்.
விடுதலைப் புலி போராளிகள் என சந்தேகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பெற்றோர்களின் கோரிக்கை
Justify Full
வவுனியா லொறி சேவையில் கூட்டுறவுச் சங்கத்தினரின் வேண்டுகோளுக்கு அமைய 29-01-2009 இல் வன்னிக்கு பொதிகளை ஏற்றிச் சென்ற 132 லொறிகளும், யுத்தப் பிரதேசத்திலிருந்து வராமையால் அந்த லொறிகளை மீட்டுத் தரும்படி கேட்டுக்கொள்கிறேன். துரதிஷ்டவசமாக லொறி சாரதிகளும், சாரதியாக செயல்பட்ட உரிமையாளர்களும், உதவியாளர்களும் யுத்தப் பிரதேசத்தில் அகப்பட்டுக் கொண்டனர். மிகக் கவலைக்குரிய விடயம், உரிமையாளர்கள், உதவியாளர்களில் பலர் கொல்லப்பட்டும், காயப்பட்டவர்களில் எஞ்சியுள்ளவர்களும், தற்போது நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளனர். அத்துடன் முகாம்களில் தங்கியுள்ள வன்னியில் கைவிடப்பட்ட லொறிகள், வேன்கள், ட்ரெக்டர்கள், டெய்லர், முச்சக்கர வண்டிகள், கார்கள் அவற்றின் சொந்தக்காரர்கள் அவற்றை மீட்டுத் தரும்படி கோரியுள்ளனர்.

இடம்பெயர்ந்த மக்கள் மிகவும் வற்புறுத்தி மேலும் கூறுவது புலி போராளிகள் என சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தங்கள் பிள்ளைகளை பார்ப்பதற்கும், அவர்களுடன் பேசவதற்கும் அனுமதி கோருகின்றனர். எனவே தயவு செய்து பின்வரும் விடயங்களை உடன் கவனத்திற் கொள்ளவும்

01. லொறி போக்குவரத்தில் சம்பந்தப்பட்டவர்களை விடுவித்தல்.

02. லொறி சொந்தக்காரர்களையோ, உரிமையாளர்களையோ தத்தம் லொறிகளை அடையாளம் கண்டு அவற்றை வவுனியாவுக்கு கொண்டுவர ஏற்பாடு செய்து தரவும்.

03. அதேபோல் இம் முகாம்களில் உள்ள வாகனச் சொந்தக்காரர்களை அவர்களின் பழைய இருப்பிடங்களுக்கு அனுப்பி அவரவர் வாகனங்களை அடையாளம் கண்டு அவற்றை வவுனியாவுக்கு கொண்டுவர ஏற்பாடு செய்தல.

04. தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்களை பார்த்து பேச பெற்றோரை அனுமதித்தல்.

இவர்களின் வேண்டுகோள்கள் நியாயமான கோரிக்கையாக இருப்பதால் தயவு செய்து உடன் நடவடிக்கை எடுக்கவும்.
நன்றி


வீ. ஆனந்தசங்கரி
தலைவர்-த.வி.கூ